பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 17, 2007

நான் வளர்ந்து வருவதால் மாநாடு நடத்துகிறார்கள்: விஜயகாந்த் பேச்சு

பா.ம.க. மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தாமூர் எஸ். ஆறுமுகம் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2000-க்கும் மேற்பட்டோர் சித்தாமூர் ஆறுமுகம் தலைமையில் தே.மு. தி.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேச்சு கீழே....

மக்களிடம் பிரம்மையை ஏற்படுத்தவும், தங்களிடம்தான் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் இளைஞர் மாநாடு நடத்துகின்றனர். இந்த மாநாடு தி.மு.க. இளைஞர் அணி மாநாடா? தமிழக அரசின் மாநாடா? என்பதை மக்கள் அறிவார்கள்.

புதிதாக துவங்கிய கட்சியெல்லாம் பகுதி நேரங்களாக வந்து மறைந்து போகும் என்று கூறியுள்ளனர். அவர்கள் பேசியதை பார்த்தால் நான் வளர்ந்து வருவதைக் கண்டும், பயந்தும் இதுபோன்ற மாநாட்டை நடத்துகின்றனர்.

சாதி, மத, சண்டையை வெறுப்பவன் நான். சாதியை பார்த்து சோறு போடுவதில்லை. ஒரே சாதி சங்கத்தினருக்கு எத்தனையோ தலைவர்கள், சாதி அமைப்புகள், பிரிவு இவை எல்லாம் தேவையற்றது என்பதால்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் சாதி, சிறுபான்மை பிரிவு இல்லை.

ஏழ்மையை போக்குவதுதான் அரசாங்கத்தின் பணி. எதையாவது சொல்லி ஓட்டுக்களை வாங்குபவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். மாபெரும் இயக்கங்களை எதிர்த்து தெய்வத்தின் வடிவில் உங்கள் உருவத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்பி தே.மு.தி.க.விற்குதான் இனி ஓட்டு என்ற மாபெரும் புரட்சியை உங்களால்தான் உருவாக்க முடியும்.

கொள்கை இல்லையென்று கூறுகின்றனர். 5 வருடத்தில் மாறிமாறி கூட்டணிகளை அமைத்துக் கொள்வது கொள்கையா? என்னை பொறுத்தவரை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவையென்றும் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று யாரை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள். நான் ஏற்கனவே இலவச கலர் டி.வி.க்கள் விற்பனை செய்வதாக கூறியதை கண்டு கொள்ளாதவர்கள், இன்று விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறுகின்றனர்.

50 ஆண்டு காலம் எங்கள் கட்சிதான் பலமாக இருக்கிறது என்று சொல்கிறவர்கள் இடையிடையே காணாமல் போனார்களே ஏன்? குறிப்பாக 1977 முதல் 87 வரைக்கும் மக்கள் மன்றத்தில் தலை காட்ட முடியாது ஏன்? எனவே மக்கள் நினைத்தால் மாற்றம் வரும். புரட்சி மலரும் நீங்கள் ஒவ்வொரும் பிரச்சார பீரங்கிகளாக மாறி அந்த நல்ல மாற்றத்தை உருவாக்கிட வேண்டும்.

அந்த சக்தி உங்களிடம் இருக்கிறது. நமக்கு பக்க துணையாக ஆண்டவனும், மக்களும் இருக்கிறார்கள். மாற்றம் வந்தே தீரும். அது நம்மால்தான் முடியும்.

நேற்றைய செய்தி:

திடீர் கட்சிகளையும், அதன் "மின்மினித்' தலைவர்களையும் இனங்கண்டு ஒதுக்கித் தள்ளுங்கள்' - கவிஞர் தமிழச்சி
( கவிஞர் தமிழச்சி பல காலமாக அரசியலில் இருக்கிறாரா ? யாராவது சொல்லுங்கப்பா !)


5 Comments:

யோசிப்பவர் said...

//கவிஞர் தமிழச்சி பல காலமாக அரசியலில் இருக்கிறாரா ? யாராவது சொல்லுங்கப்பா !//

முதலில் தமிழச்சி கவிஞரா? அதை யாராவது சொல்லுங்கப்பா!!

;-)

Anonymous said...

Her brother Thangam Thennarusu is
a minister. For all you know she
too may become a MLA one day.
Perhaps she is already minister in Kanimozhi's (drawing room) cabinet :).

Vazhipokan said...

//கவிஞர் தமிழச்சி பல காலமாக அரசியலில் இருக்கிறாரா ? யாராவது சொல்லுங்கப்பா !//
Ellam fake resume madhiri thaan idhuvum, chumma rendu araikai, sorikai ellam vitutu, Appala, arasiyala pugundhukaradhu ellam sagajamapa.
mothathathula arasiyalla ellam irukanumnu onum avasiyam ellai, periya kai sibarisu irundha podhum
courtesy: Varisu arasiyal

Anonymous said...

இட்லிவடை,
தமிழச்சியின் படிப்பு தகுதி தெரியுமா உங்களுக்கு?
ராணீ மேரி கல்லூரியின் விரிவுரையாளர். அரசியலுக்காக வேலயை துறண்தவராம்.. ஆ.வீ யில் வந்தது.

IdlyVadai said...

//தமிழச்சியின் படிப்பு தகுதி தெரியுமா உங்களுக்கு?
ராணீ மேரி கல்லூரியின் விரிவுரையாளர். அரசியலுக்காக வேலயை துறண்தவராம்.. ஆ.வீ யில் வந்தது.//

ரொம்ப பழைய நியூஸ். தெரியாத நியூஸ் இதோ - அவர் அழகிரியின் ஆதரவாளர் :-)