பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 04, 2007

வேணுகோபாலை நீக்கியதற்கு நீதிபதிகள் கண்டனம்

எய்ம்ஸ் இயக்குனர் பதவியில் இருந்து டாக்டர் வேணுகோபாலை நீக்கியது துரதிர்ஷ்டவசமானது மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம். அன்புமணிக்கும் வேணுகோபாலுக்கும் நடக்கும் இந்த பனி போரில் அடுத்த காட்சி. அன்புமணி செய்த மகத்தான முட்டாள் தனம் இது.


டாக்டர் வேணுகோபாலை எய்ம்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வேணுகோபாலின் பதவி காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில்தான் அவரது பதவி காலம் முடிகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனரின் ஓய்வு வயதை திருத்தியதன் பின்னணி என்ன? ஒரு மதிப்புக்குரிய நபரை (வேணுகோபால்) இதுபோன்று அவமதித்தது ஏன்?. ஒரு நபரை பதவியில் இருந்து நீக்க அவசரமாக மசோதா கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

2 Comments:

cgs said...

வேணுகோபாலும் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் இட்லிவடை.

Anonymous said...

வேணுகோபால் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல.இடஒதுகீடு விஷயத்தில் உயர்சாதி மாணவர்களை தூண்டி விட்டு போராட்டாம் நடத்தியது அவர்தான்.அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தால் கூட அவருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான் வரும்.ஆனால் பார்ப்பன வேணு கோபாலுக்கு ஒன்றூ என்றால் உச்சிக் குடுமி மன்றமே கொதிக்கிறது பாருங்கள்..அங்குதாம் இருக்கிறது இந்தியாவின் சூட்சுமம்.நான்கு லட்சம் அரசு ஊளியர்கள் பார்ப்பன ஜெயலலிதாவால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது கொதிக்காத நீதிமன்றம்..ஜெயின் நடவடிக்கையை ஆதரித்த நீதிம்னறம் ஒரு வேணு கோபாலுக்கு ஆதரவாக வருவதை புரிந்து கொள்ள முடிகிறது..