இந்த வார ஆனந்த விகடனில் வந்த ஓ-பக்கங்கள். இணையத்தில் பல முறை விவாதிக்கபட்ட தலைப்பு தான். இன்று வலைப்பதிவு வைத்திருக்கும் 99.9% பேர் ஆங்கிலம் தெரிந்ததால் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள் என்பது என் கருத்து. வாழ்க தமிழ்.
வார்த்தைகளில் விவரிக்க இயலாத வேதனை உணர்ச்சியும் கோபமும் கலந்து கொப்பளிக்கும் மனநிலையில் இதை எழுதத் தொடங்குகிறேன்.
தமிழ்நாட்டில், தமிழில் படித்த ஒரு தமிழ் இளைஞன், உயர்படிப்பில் ஆங்-கிலம் தெரியாததால் ஏற்பட்ட மன உளைச்ச-லால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சி, ஒவ்வொரு தமிழரின் மனச்சாட்சியையும் உலுக்கவேண்டிய ஒன்றாகும். தற்கொலை செய்துகொண்டவர், தேனி மாவட்டம் பண்ணை-புரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விது. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வி படித்து, 1023 மதிப்பெண்கள் (85 சதவிகிதம்) பெற்று, அரசு கோட்டாவில் சென்னை குன்றத்தூரில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி-யில், தகவல் தொழில்நுட்பப் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
எல்லாப் பாடங்களும் ஆங்கி-லத்திலேயே இருந்ததால், அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஐந்து தேர்வுகளில் தோல்வி-யடைந்து, மன உளைச்சலுக்கு ஆளா-னார். பிரச்னையைத் தந்தை-யிடம் சொன்-னார். கிராமத்து மனிதர் என்ன செய்வார், பாவம்! ‘எப்படியாவது கஷ்டப்பட்டுப் படி!’ என்று மட்டும்-தான் அவரால் சொல்ல முடிந்திருக்-கிறது. கஷ்டப்-பட்டுப் படித்துப் பார்த்தும் முடி-யாமல், விரக்தியில் கல்லூரி விடுதி அறையில் தூக்குப் போட்டுக்-கொண்டு இறந்தார் விது.
விதுவின் தற்கொலைக் கடிதம், காரணத்தைத் தெளிவாகச் சொல்-கிறது... ‘இன்ஜினீயரிங் படிப்பில் எல்லாம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்-படுவதால், எனக்கு ஒன்றும் புரிய-வில்லை. ஆங்கிலத்தில் படிக்க இயலாத காரணத்தால், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து-கொள்-கிறேன்.’
இந்தத் தமிழ் இளைஞரின் மரணம் பல கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. தமிழில் படித்து 85 சதவிகித மதிப்பெண்கள் பெறும் அளவுக்கு அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்த மாணவருக்கு ஏன் ஆங்கில அறிவு மட்டும் போதவில்லை? நமது அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் தரத்தின் அடை-யாளம்-தானே இது?
பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவரானாலும் தன்னம்-பிக்கை இல்லாமல் போனது ஏன்? நமது பள்ளிக் கல்வித் திட்டங்-களில் மதிப்-பெண்-களுக்கு மட்டுமே இடம் இருப்பதையும், நம் இளைஞர்-களுக்கு வாழ்க்கை-யின் சிக்கல்-களைச் சந்திக்கும் துணிவை ஊட்டுவதற்கு இடம் இல்லாத-தையும்தானே இது காட்டு-கிறது?
கிராம இளைஞர் ஒருவர் நகரப் பகுதிப் பொறியியல் கல்-லூரி-யில் வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் சூழலில், அவரது மனச் சிக்கல்களுக்கு உதவி செய்ய மன நல ஆலோ-சகர்-கள் (கவுன்சலர்கள்) கல்லூரி-களில் இருக்க வேண்டாமா? தனி கவுன்சலர்கள் இல்லாத-போதும், கல்லூரி ஆசிரியர்களே தேர்வில் தோல்வியடையும் மாணவர்-களிடம் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி-யிருக்க வேண்டாமா?
எல்லாவற்றுக்கும் மேலாக, விதுவின் தன்னம்-பிக்கையைக் குலைத்து, அவரை தற்கொலையை நோக்கித் தள்ளிய அடிப்-படை விஷயம் என்ன? இன்ஜினீ-யரிங் படிப்பு தமிழில் இல்லை; ஆங்கி-லத்தில் மட்டும்-தான் இருக்கிறது என்பதுதானே! அது மட்டும் தமிழில் இருந்-திருந்தால், ப்ளஸ் டூ-வில் தமிழ் வழியில் படித்து 85 சதவிகிதம் பெற்ற விது, உயர் கல்வியிலும் சிறந்து விளங்கியிருக்க முடியுமே!
தமிழ்நாட்டில் உயர் கல்வி தமிழில் இல்லாததற்கு யார் பொறுப்பு? பள்ளிக் கல்வி முழு-வதும் தமிழ் வழியில் படித்து-விட்டு, அதன் பின்னர் ஆங்கிலத்தில் உயர் படிப்பு படிக்க வேண்டும் என்ற நிலைமைக்கு யார் பொறுப்பு? நம் அரசியல்வாதிகள் அல்லவா?
விதுவைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்-துக்காகக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் இது-வரை ஆண்டவர்கள்தான்!
1969 முதல் 2007 வரையிலான 37 வரு-டங்களில் 10 வருடம் எம்.ஜி.ஆர் முதல்வர்; 15 வருடம் கருணாநிதி முதல்வர்; 10 வருடம் ஜெயலலிதா முதல்வர். இவர்கள் ஆட்சிக் காலங்களில் ஏன் தமிழ், பள்ளிக்-கூடத்தைத் தாண்டி வரவே இல்லை?
இந்தியாவில், சென்-னையில் வந்து தொழில் நடத்தும் ஹ¨ண்-டாய், சுசூகி, நோக்கியா போன்ற வெளி-நாட்டு கம்பெனி-யின் இன்ஜினீ-யர்களும் உயர் அதிகாரிகளும் ஜப்பா-னிய மொழி-யிலும், கொரிய மொழியிலும், சீன மொழியிலும்தானே படிக்கிறார்-கள்? இங்கே வந்தாலும் அந்த மொழி-யில்தானே பேசுகிறார்கள்? ஜெர்மனியில், ஜப்பா-னில், ப்ரான்ஸில் உயர் கல்விப் படிப்புகள் அந்தந்தத் தாய்மொழி யில் இருக்கும்-போது, தமிழகத்-தில் மட்டும் தமிழில் இல்லாத அவலத்தை எப்படிப் பொறுக்க முடியும்?
தடை செய்யப்-பட்ட இயக்-கத்தின் தலைவர் ஒருவருக்குச் சட்டச் சிக்க-லைப் பொருட்-படுத்-தாமல் இரங்கற்பா எழுதும் அள-வுக்குத் தமிழ் ரத்தம் ஓடுகிற முதல்வர் கருணா-நிதி ஏன் மருத்துவம், பொறியியல் முதலிய உயர்கல்வியை இதுவரை தமிழில் ஏற்படுத்தவில்லை? ‘என் உடலிலும் தமிழ் ரத்தம்-தான் ஓடுகிறது, நானும் தமிழச்சி-தான்’ என்று பதில் அறிக்கை அரசியல் நடத்தும் ஜெயலலிதா ஏன் செய்யவில்லை? இவர்கள் அதைச் செய்திருந்தால், விது அநியாயமாகச் செத்திருக்க மாட்டானே!
இந்த வருடம் நிபுணர் குழு அமைத்தோம், இந்த வருடம் அரசாணை போட்டோம், இந்த வருடம் துணைவேந்தர்கள் ஆலோ-சனைக் குழு கூட்டி-னோம் என்றெல்லாம் உடனடி-யாகப் புள்ளிவிவரப் பதில் அறிக்கைகளை அள்ளி வீசு-வார்கள். ‘தமிழுக்காக இத்தனை செய்தேனே’ என்று அறிக்கைகள் நிச்சயம் வரும்.
ஆனால், களத்தில் அசல் நிலைமை என்ன? கனிமொழியின் மகன் ஆதித்தன் கழக எம்.பி-யாகிற காலத்தில்கூட, தமிழில் உயர்கல்வி கற்பிக்கப்படும் என்ப---தற்கான அறிகுறிகளே இல்-லையே! வசதியாகச் சொல்லப்-படுகிற சாக்கு, இந்த வருடம் அரசாணை போட்டோம்; நீதி மன்றத்தில் முடங்கிவிட்டது என்பதுதான். இலவச கலர் டி.வி கொடுப்பதை எதிர்த்துக்-கூடத்தான் நீதிமன்றத்தில் வழக்கு போடப்-பட்டது. அதை முறியடித்துத் திட்-டத்தை நிறை-வேற்றுவதில் காட்டிய அக்கறை-யில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட தமிழ் வழிக் கல்வியில் காட்டுவ-தில்லையே!
பள்ளிக் கல்வியில் ஆங்கில மீடியத்தை பலப்படுத்திய பின்னர், எப்படி உயர்கல்வியில் மட்டும் தமிழ் வழிக் கல்வி வந்துவிட முடியும்? மேற்படிப்பு ஆங்கிலத்தில் இருக்கும்போது, கீழிருந்தே ஆங்கி லத்தில் படித்தால்தான் நல்லது என்ற மனநிலைக்கு அல்லவா மக்கள் தள்ளப்படு-கிறார்கள்! பள்ளிக்கூடத்திலும் ஆங்கில வழியி லேயே படித்திருந்-தால் விது செத் திருக்க மாட்டானே என்றல்லவா அவனைப் பெற்றோருக்கு இன்று நினைக்கத் தோன்றும்!
ஏழைத் தமிழர்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் மீடியம், மற்றவர்-களுக்கு ஆங்கில மீடியம் என்பது-தான் இன்றைய நிலை. உயர் கல்வி ஆங்கில மீடியத்தில்-தான். அதாவது, அது ஏழைத் தமிழருக்-கானது அல்ல! ஏழைத் தமிழர்களை யார் பள்ளிப் படிப்பைத் தாண்டி வரச் சொன்னது? தப்பித் தவறி வந்தால் விதுவின் கதிதான். ஏழைத் தமிழர்கள் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டு, தமிழில் சுவ-ரெழுத்து எழுதவும், தோரணம் கட்டவும், சுவரொட்டி ஒட்டவும் கற்றுக்கொண்டு, மாநாடுகளுக்குப் படை திரண்டு வரட்டும். பண வசதி படைத்த தமிழர்கள், ஆங்கில மீடியம் படித்துவிட்டு தலைவர்களுடனும் வாரிசுகளுட-னும் ஒப்பந்தங்கள் போடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக வேலை பார்ப்பார்கள். இதுதான் கடந்த முப்பது வருட தமிழ் அரசியல்!
உயர்கல்வியைத் தமிழில் தருவது ஒன்றும் சேது சமுத்திரத் திட்டம் மாதிரியோ, கங்கை - காவிரி இணைப்பு மாதிரியோ பிரமாண்டமான தொழில்நுட்பச் சிக்கல் நிறைந்த பிரச்னை அல்ல. தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிக்க அறிவியலாளர்கள் போதுமான அளவு இருக்கிறார் கள். ஒவ்வொரு வருடப் படிப்புக்கு மாக வரிசையாகப் பாடப் புத்த-கங்--களைத் தயாரிக்கலாம். ஒழுங்-காகத் திட்டமிட்டால், பொறி-யியல் முதலாண்டு, மருத்துவம் முதலாண்டு, கணினி இயல் முதலாண்டு தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் தமிழ் வழிக் கல்வியை உயர்கல்வியில் நடைமுறைப்-படுத்தி-விட முடியும். இதுபற்றி அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லாததுதான் ஒரே தடை!
விதுவை இந்த அரசியல் உயிர்ப்பலி வாங்கியதற்குச் சில நாட்கள் முன்னர், மேற்கு வங்கத்து நந்திகிராம் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் அ.தி.மு.க. சார்பில் பேச எழுந்த டாக்டர் மைத்-ரேயன், ‘தமிழில் பேச விரும்பு-கிறேன்’ என்றார். மாநிலங் களவைத் துணைத் தலைவர் கர்நாடகாவைச் சேர்ந்த ரகுமான் கான், தமிழ் மொழிபெயர்ப்பாளர் இல்லை என்பதால் அதற்கு அனு-மதிக்கவில்லை. உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஜோதி உட்பட எல்லோரும் மைத்ரேயனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். ‘‘ஆறு மாதமாகத் தமிழ் மொழி-பெயர்ப்பாளரை உங்களால் நியமிக்க முடியவில்லையா?’’ என அவர்கள் கேட்க, மாநிலங்களவைத் துணைத் தலைவர், ‘‘மூன்று முறை விளம்பரம் செய்தும் யாரும் விண் ணப்பிக்கவில்லை. தமிழ் மட்டு-மல்ல... தெலுங்கு, கன்னடம் மொழிகளுக்கும் இதே பிரச்னை-தான்!’’ என்றார்.
தெலுங்கு, கன்னட மொழியினர் மும்மொழித் திட்டத்தின் கீழ் இந்தியை ஏற்றுக்கொண்டு படிப் பவர்கள் என்பதால், மொழி-பெயர்ப்பாளர் இல்லை என்பது அவர்களுக்குப் பெரும் பிரச்னை இல்லை. ஆனால் தமிழ் இளைஞர்-களில் தமிழ், ஆங்கிலம், இந்தி படித்துவிட்டு மொழிபெயர்ப்-பாளர் வேலைக்கு விண்ணப்பிக்க யாரும் முன்வரவில்லை என்பது நம் கவனத்துக்கும் கவலைக்கும் உரியது.
தமிழ்நாட்டிலிருந்து மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் பிரதிநிதிகளின் குரல் டெல்லியில் தமிழில் ஒலிக்க முடியாத நிலை ஏன் ஏற்பட்டது? மொழிபெயர்ப்-பாளர் வேலை என்பது மொழி-களின் மீது ஈடுபாடும், பற்றும், ஆளுமையும் தேவைப்படும் வேலை. இங்கே நமது கல்வி முறை எப்படி இருக்கிறது? சில விதிவிலக்குகளைத் தவிர, பொது-வாக தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மீது வெறுப்பு உணர்ச்சியும், இந்தி மீது பகைமை உணர்ச்சியும் இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படிப்போருக்கு, தமிழ் முதல் இந்திய மொழிகள் எல்லாமே இரண்டாம்தரமானவை, இழிவா னவை என்ற மேட்டுக்குடி மனோபாவம் இருக்கிறது. இந்த மனநிலைகளை நம் ஆசிரியர்-களும் அரசியல்வாதிகளும் தங்கள் செயல்களால் நேரடியாக-வும் மறைமுகமாகவும் ஊக்கு-வித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு எப்படி ஆள் கிடைப்பார்கள்?
மொழி அரசியல் என்பது தமிழகத்தில் மக்களிடையே தாய்மொழி மீதான அன்பு, தாய்மொழியிலேயே கற்க வேண்டும் என்ற ஆர்வம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதற்கான வசதிகளை அடி முதல் உச்சம் வரை ஏற்படுத்த அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துதல் என்பதாக நிகழவில்லை. வெறுமே உணர்ச்சியைத் தூண்டிவிடுவது, அதில் குளிர்காய்வது, தங்கள் தவறு-களை-யும் பலவீனங்களையும் மக்கள் கவனத்தி-லிருந்து மறைக்கவும் திசை திருப்பவும், மொழியுணர்ச்சியைப் பயன்படுத்துவது என்பதாக மட்டுமே அமைந்திருக்கிறது.
இந்த அரசியலில் விளைந்த கோஷம்-தான்... ‘உடல் மண்ணுக்கு... உயிர் தமி-ழுக்கு!’ யாருடைய உயிர்? விதுக்களுடைய உயிர்!
‘அடுத்த தேர்தலுக்கு முன்பு தமிழ்-நாட்டில் எல்லா உயர்கல்விப் படிப்பையும் தமிழிலேயே கற்பிக்கச் செய்வோம். இதைச் செய்து முடிக்காவிட்டால் தேர்-தலில் தக்க தண்டனை கொடுங்கள்’ என்று அறிவிக்கும் துணிவு தி.மு.க-வுக்கு இருக்கிறதா?
‘ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் உயர்கல்வியை தமிழில் கற்பிப்போம். இல்லாவிட்டால், பதவியிலிருந்து விலகு-வோம்’ என்று சொல்லும் துணிவு அ.தி.மு.க., பா.ம.க உட்பட எந்த எதிர்க் கட்சிக்காவது இருக்கிறதா?
இல்லையென்றால், தயவுசெய்து இனி தமிழ்... தமிழ் என்று பேசி மக்களை ஏமாற்றுவதையாவது நிறுத்திக்கொள்ளுங்-கள். தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தூக்குத் தண்டனை என்று சட்டம் போட்டுவிடுங்கள்!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 01, 2007
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம்!
Posted by IdlyVadai at 12/01/2007 08:01:00 PM
Labels: கட்டுரை, பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










20 Comments:
அறிவியல் மற்றும் கணிதத்தை தமிழில் படிப்பது அறிவீனமென்றேயெனக்குப் படுகிறது. முதலாவது வகுப்பிலிருந்து இப்பாடங்களை ஆங்கிலத்திலேயே போதித்தல் அவசியம்.
தமிழ் மத நூல்களைப் படிப்பதற்க்கும் பொழுதுபோக்கு சம்பந்தமான சமாசரங்களுக்கு மட்டுமே! தமிழர் நலனைக் கருதி, அரசு தற்பொழுது அமலில் உள்ள தமிழ்வழிக் கல்வியை துறத்தல் அவசியம்.
VIDHU...
VI.THU...
VINNIL THUYILUM...NEE
MANNIL UZALUM... NAAN
"SOLLA KODHIKKUDHADA NENJAM!"
THAMIZHA.THAMIZHA.
NAALAI NAM NAALE,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உண்மை நெஞ்சம் கொதிக்கிறது.
கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்த காரணத்தால் ஆங்கிலத்தில் புலமையற்று உயர்கல்வியில்(ஆங்கில வழி)தட்டுத்தடுமாறி தேறினேன்.
எனக்குள் எத்தனையோ திறமை இருந்தும் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் நான் வாழ்கையில் தோற்றுப்போனேன்.
இன்னும் கொட்டித்தீர்க்க நிறைய இருக்கிறது.என்னால் இப்போழுது எழுத முடியவில்லை. அதை தனிப்பதிவாகப் போடுகிறேன்.
படிச்ச நமக்கே செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கு... நம் மக்கள் பிரநிதிகளுக்கு?
என்னுடைய கருத்து என்னுடைய அலையில்....லிங்கை கிளிக்கவும்
http://vandhutanya.blogspot.com/2007/12/blog-post.html
மிகவும் உண்மையான கருத்து. இங்கிருக்கும் கழக கண்மணிகளூம் பூத் ஏஜெண்ட்களும் என்ன சொல்லபோகிறார்கள்....
மாமி-சாமின்னு பெரிய புடுங்கிமாதிரி பதிவு போட வந்துடுவானுக வெண்ணைகள்.
தமிழ்க்கு குரல் கொடுக்கிறேன், தமிழால் இணைகிறோம்னெல்லாம் எவனாவது சொன்னா எரிச்சல் தான் வருது, துப்புக் கெட்ட மனிதர்கள்.
பள்ளி வரை நன்றாக படித்த மாணவன், கல்லூரி சென்றதும் மொழி பிரச்சனையால் அவனால் திறம்பட படிக்க முடியவில்லையே என்னும் மனஅழுத்தம் அவனை தற்தொலை செய்ய தூண்டியது என்பது மிகவும் வருத்தபட வேண்டிய செய்தி. நெஞ்சம் பதற வைக்கும் செய்தி. உணர்ச்சி வையப்படுவதை விட எப்படி தீர்வு காண்பது என்பது என்பதே முக்கிய அம்சமாகும். உயர் கல்வியையும் தாய் மொழியில் கற்க வேண்டி சூழலை உருவாக்கி தர வேண்டியது அரசின் கடமை. ஆனால் இது இன்று தீர்மானித்து நாளையே அமுல்பட முடியும் திட்டமல்ல. அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, திட்டமிட்டு கால நிர்ணயம் செய்து செயல்படுத்த உடனே அரசு செயல்பட துவங்க வேண்டும். இது நெடுங்கால திட்டம். அதுவரையில் குறுங்கால திட்டமும் வகுக்கபட வேண்டும். அது தமிழ் வழி கல்வியை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் விதத்தில் குறைந்த 8வது வகுப்பிலிருந்து விஷேட கவனம் செலுத்தலாம்.
வெற்றி தோல்விகள், நன்மை தீமைகள் என்பது மனிதர்களை சுற்றி சுற்றி வரக்கூடிய ஒன்று. நிரந்தரமான ஒன்றல்ல. எனவே துயரமான சூழ்நிலைகளை சந்திக்கும் வகையில் மனஉறுதியையும், சந்திக்கும் துணிச்சலையும் பெறும் வகையில் மனநலம் சம்பந்தபட்ட பாடதிட்டத்தையும் 9வது வகுப்பிலிருந்து போதிக்கலாம்.
நீதிமான்
முதலில் இந்த மாணவன் மரணத்திற்குக் காரணம் தமிழ் மொழிப்பற்று எனும் மாயையிலிருந்து வெளிவரவேண்டும். தனிநபர் தன்னம்பிக்கை குறைபாடே தற்கொலைக்குக் காரணம்.
முதலில் உருப்படியாக அறிவியல் பதங்களை உருவாக்கி பள்ளிக்கல்வியில் படிப்பித்தல் அவசியம்.
Semi-Conductors என்பதை குறைகடத்தி என்பதுடன் தமிழ்ப்படுத்துதல் கடமை முடிந்துவிட்டதாக எண்ணி விடக்கூடாது.
உதாரணமாக மின்ணணுவியலின் தைரிஸ்டர், சிலிக்கான் கண்ட் ரோல் ரெக்டிபையர், மைக்ரோ ப்ராஸஸர் என்பதற்கு எளிமையான ஏற்புடைய தமிழ்ச் சொற்கள் மற்றும் இக்கருவிகள் செயல்படும் முறை விளக்கம் போன்றவை தமிழில் படித்து புரிந்துகொள்ளும்படி ஏற்படுத்தப்பட வேண்டும்.
கண்ட் ரோல் சிஸ்டத்தின் Bode Plot, Nyquist Criterion, எலக்ட் ரிகல் டெக்னாலஜியில் Kirchoff's laws, Thevenin's theorem, Nortons theorem, போன்றவை அண்ணா, ஈவெர,தாளமுத்து நடராசர்...இன்னபிற தமிழகத் தலைவர்கள் பெயராக்கம்-சமர்ப்பணம் செய்வதில் முனைப்புக் காட்டாமல் மெய்யான அறிவியல்-கல்வியாளர்கள் கொண்டு மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக தமிழில் செய்யப்படவேண்டும்.
எலக்ட் ரிகல் எஞ்சினியரிங் படிப்பின் அடிப்படை விதியான Ohm's Law எனும் "ஓம்" விதி என்பது இந்துத்துவ சார்புடையதாக இசுலாமிய-கிறித்துவர்களை புண்படுத்த வாய்ப்பு இருப்பதாக மதச்சார்பற்ற கழக அரசுகள் ஈவெரா விதி என பெயர் மாற்றம் செய்து தமிழ் வழி அறிவியல் படிக்க விழையும் மாணவர்களை படுத்தக்கூடாது!
சும்மா அஞ்சுகாசுக்குப் பெறாத அதிநவீன அரசியல் ஆத்திச்சூடி யாக அண்ணாவழியில் நில் (அரசு சொத்தை ஆட்டையைப் போடு)
என்று ஔவையார் சொன்ன தமிழ் தத்துவங்களைப் படுத்தி எடுக்குற மாதிரி எளிதான தமிழுணர்வை வெளிப்படுத்தும் விஷயமில்லை அறிவியலைத் தமிழிலேயே 100% படிப்பது என்பது!
ஜெர்மனி,ப்ரான்சு, ஜப்பானியர்கள் அறிவியலை அவர்கள் மொழியில் கற்க முடிகிறதற்கு ஒரே பிரதான காரணம் அவர்கள் அண்ணாவழியில் நில்லாததே!
12ம் வகுப்பு வரை இயற்பியல், வேதியல், உயிரியல் என்று அறிவியலை தமிழிலேயே படித்தவன் தான் அடியேன்! கல்லூரியில் ஆங்கில வழிக்கல்வி ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருந்தது! என்றாலும் நாண்டுக்கிட்டு சாகவில்லை!
ஈட்டிய பொருளைச் செலவு செய்து, மகனை நம்பிக்கையாகப் படிக்க வைத்த தந்தையை, அவரது கனவைக் கலைத்த கோழையாகவே இந்த மாணவனைக் கருதுகிறேன்!
Gnani also uses emotional appeal and gives simple solutions. There are easy solutions. Can one study BTech in languages like Malayalam,
Telugu and Hindi. Can one study MTECH/MS in these languages. What about employment opportunities for those who study these courses in regional languages.
What Gnani feels is 100% right. But I have a doubt? I would like to know, if all the subjects in Engineering Colleges are taught in Tamil and a student has come out successfull, what is he going to do after that ? Can he expect a job in States, in Japan, in China ? Why we have to go to foreign ? Can he obtain a job out of Tamilnadu Nadu even in India; Forget this can he get a job atleast in Thai Tamilnadu iself ( in his own howm stae) The solution what I feel is side by side with Tamil English sould also be coached properly from the beginning. - Suppamani
Learn English and Hindi like Tamils Thathas grandson Dayanithimaran. Howselfish this Tamil rulers(jaya knows both landuages verywell) Longlive tamil.
English is a fundamental requisite to earn a decent living. Full stop.
உயர் படிப்பை தமிழில் கற்க வழி செய்யலாம்தான். ஆனாலும் ஹரிஹரன் சொன்னது போல் தமிழையும், அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் 'படுத்தா'மல் இருப்பது அவசியம். அதே நேரத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக கற்ற மாணவனால்(1023 மார்க்), ஏன் கல்லூரி வந்ததும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியவில்லை? பிரச்சனை 'உயர்' படிப்பில் இருப்பதை விட அடிப்படையிலேயே இருக்கிறது. நமது பள்ளிகளின் கற்பிக்கும் திறன், ஆசிரியர்களின் திறன் என்று எல்லாமே பாதாளத்தில்தான் இருக்கிறது. பிரச்சனையை முதலில் மேலே சரி செய்வது நல்லதா? அல்லது முதலில் கீழே சரி செய்வது நல்லதா?
//ஈட்டிய பொருளைச் செலவு செய்து, மகனை நம்பிக்கையாகப் படிக்க வைத்த தந்தையை, அவரது கனவைக் கலைத்த கோழையாகவே இந்த மாணவனைக் கருதுகிறேன்!
// I agree with Hari
//தமிழ் மத நூல்களைப் படிப்பதற்க்கும் பொழுதுபோக்கு சம்பந்தமான சமாசரங்களுக்கு மட்டுமே!//
And I oppose this.
There is one translator in Tamil blogdom, if he applies he will get the job.
Infact he can even translate to other langugages and can go international.
ஓரு கோழை சாவில் இவ்வளவு அக்கரையா! எங்கள் தலைவருக்கு வேற வேலை இல்லயா? நாலு காசு பார்க்கலாம்னா..
பீடி கடன் தராதற்காக தற்கொலை செய்த கதைகளெல்லாம் இருக்கின்றன. அதைப்பற்றியும் விவாதிக்கலாம்.
ஞாநி அவர்கள் இந்த விஷயத்தை உணர்வயப்பட்டு எழுதிஇருக்கிறார்...
சரி அவர் சொல்வது போல் பொறியியல் படிப்பை தமிழில் படிப்பதாக வைத்துக்கொள்வோம்...படித்து முடித்தபின் என்ன செய்வது??? எந்த நிறுவனம் தமிழில் பொறியியல் படித்தவனை எடுக்கும்?? அப்படியே எடுத்தாலும் அவனால் அங்கு எப்படி பனி செய்ய முடியும்..மற்றவர்கள் ஆங்கிலத்தில் சக்கை போடு போடுவதை பார்த்து பார்த்து இவன் தாழ்வுமனப்பான்மையால் குருகமாட்டான்??
நிஜம் இப்படி இருக்க!!! ஒரு மாணவனின் மரணத்தை வைத்து தமிழில் பொறியியல் படிப்பை கொண்டுவரவேண்டும் என்று சொல்வது மடத்தனம்!!! அதை ஞாநி போன்ற ஒரு அறிவுஜீவி சொல்வது வேதனைக்குரியது.
தமிழில் படித்தால் மேல் படிப்பு படிக்க முடியாது, தமிழகத்தைத்தவிர வேறெங்கும் வேலை பார்க்க முடியாது என்று பின்னூட்டமிட்டுள்ள எல்லா அறிவுஜீவிகளும் கவனிக்க....
am a student in a German University, there are 1000s of chinese students here, who come here for master degree...they can't speak even a single word of Englipich. After they come here, they learn German (much much faster than we Englipich Indians) and ofcourse they come out with good grades. Having subject knowledge doesn't require that one studies in Englsih. In US also many Chinese, Japanese and korean students(studied in their mother tongue in their country)and ofcourse they are doing equally well or better than Indian students who studied in Englipich...
கமல்.. தமிழ் நாட்டில் அரசாங்க தொடர்பான பொறியியல் வேலை செய்பவர்கள் கட்டாயம் தமிழில் கற்றிருக்க வேண்டும் என்றிருந்தால் தமிழில் படிப்போருக்கும் வேலை கிடைக்கும். இல்லையென்றால் தமிழில் படித்தவர்களுக்கு வேலையில்லாமல் பல பிரச்சனைகளை உண்டு பண்ணும். தொழிற்கல்வி ஆங்கிலத்தில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பில்லியனுக்கு அதிகமாக மக்கள் இருக்கும் நாட்டையே ஆங்கிலமயமாக்குவது அடிமுட்டாள் தனம். அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. எனவே அனைத்து தொழில் பாடங்களையும் தமிழாக்கம் செய்து நம் நாட்டிலேயே வேலை கிடைக்க வைப்பதற்கு என்ன வழிமுறை உண்டோ அதை நாம் செய்ய வேண்டுமே தவிர இந்தியர்களை ஆங்கிலமயமாக்குவதை விட வேண்டும்.
Post a Comment