பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 04, 2007

வெங்சர்க்கார் ராஜிநாமா எப்போது ?

கொல்கத்தாவில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை விட, கிரிக்கெட் வாரியத்துக்கும், தேர்வு குழு தலைவர் வெங்சர்க்காருக்கும் இடையே மோதலில் சுவாரசியம் அதிகம். நேற்று எல்லா ஆங்கில சேனல்களிலும் இந்த செய்தியே பிரதானம்.

தேர்வாளர்களுக்கான வழிகாட்டு விதிமுறையை மாற்ற முடியாது. வெங்சர்க்கார் விரும்பினால் தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் வெங்சர்க்கார் மவுனமாக இருக்கிறார்.இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், தேர்வு குழு தலைவர் வெங்சர்க்காருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. தேர்வாளர்களுக்கான வழிகாட்டி விதிமுறைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

விமர்சன கட்டுரை எழுத கிரிக்கெட் வாரியம் தடை விதித்ததை ஏற்று செயல்பட்ட வெங்சர்க்கார், அதற்கு நஷ்டஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நஷ்டஈடு கிடைக்கவில்லை. இதனால் கொல்கத்தா டெஸ்டின் 2-வது நாளில் கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசிய வெங்சர்க்கார் வழிகாட்டி விதிமுறையை மறுபரிசீலனை செய்யாவிட்டால் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரது வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், `தேர்வாளர்களுக்கான வழிகாட்டி விதிமுறைகள் திரும்ப பெறப்படமாட்டாது. எனவே வெங்சர்க்கார் தனது முடிவை சுதந்திரமாக விருப்பப்படி எடுத்து கொள்ளலாம்' என்றார்.

தனது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால் வெங்சர்க்கார் பதவியில் இருந்து விரைவில் விலகுவார் என்று தெரிகிறது.

புதிய தேர்வு குழு தலைவராக சந்து போர்டே நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து சந்துபோர்டேவிடம் கருத்து கேட்ட போது, `எனக்கு அதிகாரப்பூர்வமான தகவல் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வராத நிலையில் கருத்து சொல்வது சரியாகாது. நான் ஏற்கனவே பல பதவிகளில் திறம்பட செயல்பட்டு இருக்கிறேன்' என்று கூறினார்.

சுயகவுரவத்தை காத்துக் கொள்வதற்காக தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து வெங்சர்க்கார் விலக வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

0 Comments: