பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 15, 2007

ஸ்டாலின் திமுகவின் வருங்கால சூப்பர் ஸ்டார் !

திமுக இளைஞரணியின் முதலாவது மாநில மாநாடு நெல்லையில் இன்று மிக கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் வருகையால் திருநெல்வேலி மாவட்டமே திணறியது.


மாநாட்டில் ஸ்டாலின் தான் அடுத்த திமுகவின் சூப்பர் ஸ்டார் என்று (நாளை) கலலஞர் அறிவிக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....


மாநாடு பற்றிய முழு தொகுப்பு கீழே..

அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணியின் அணிவகுப்பை முதலமைச்சர் கருணாநிதி தனி மேடையிலிருந்து பார்வையிட்டார்.

திமுகவில் இளைஞரணி என்ற துணை அமைப்பு உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 30 ஆண்டுகளில் மாவட்ட மாநாடுகள், மண்டல மாநாடுகள் என பல நடத்தப்பட்டுள்ளன.

ஆனால் மாநில மாநாடு நடத்தப்படவில்லை. தற்போது முதல் முறையாக திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நெல்லை சீமையில் இன்று தொடங்கியது.
பிரம்மாண்ட பந்தல் இந்த மாநாட்டுக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்டமான பந்தல் உருவாக்கப்பட்டது.

இந்த பந்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த நவம்பர் 4ந் தேதி நடப்பட்டது. தொடர்ந்து 37 நாட்களாக தஞ்சையை சேர்ந்த பந்தல் சிவா என்பவர் தலைமையில் 300 கலைஞர்கள் இரவு, பகலாக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சினிமா கலை இயக்குனர் ஜே.பி.கிருஷ்ணா தலைமையிலும் கலைஞர்கள் பணியாற்றினர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றன. நேற்றிரவு வரை அந்த பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. 1000 அடி நீளம், 500 அடி அகலம் கொண்டதாக இந்த பந்தல் எழுப்பப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக கண்காட்சிகளை போல இரும்புத் தூண்கள் கொண்டும், மழைநீர் புகாதபடி தகரம் வேயப்பட்டும் இது கட்டப்பட்டுள்ளது.

இந்த பந்தலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பந்தலின் உட்புறம் விலையுர்ந்த துணிகளால் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டை வடிவ முகப்பு
மாநாட்டின் முகப்புத் தோற்றம் வெள்ளை நிறத்திலான கோட்டை வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதில் வேல் ஏந்திய வீரர்கள் சிலையும், திமுக கொடி பிடித்து தொண்டர்கள் செல்வது போன்ற சிலைகளும் செதுக்கப்பட்டிருந்தது.

அதைத் தாண்டி உள்ளே சென்றால், 84 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் வேயப்பட்ட அலங்கார கோபுரம் கண்முன் தெரிகிறது. உள்ளே சென்றால் 70 அடி அகலத்திற்கும், 55 அடி நீளத்திற்கும் எழில்மிகு மேடை கட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக கிரானைட் கற்கள் அந்த மேடையில் பதிக்கப்பட்டுள்ளது.

மேடை வரை முதலமைச்சரின் கார் வருவதற்கு வசதியாக 100 அடி தூரத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து திடலுக்கு வரும் ஒரு கிலோ மீட்டர் தூரம் புதிய சாலை அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டு முகப்பிலிருந்து மேடை வரை முதலமைச்சர் வரும் வழியில் இருமருங்கிலும் நுங்கு, இளநீர், வாழைக்குலை, ஆப்பிள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

மேடையின் பின்புறம் முதலமைச்சரும், மற்ற விஐபிக்களும் ஓய்வெடுப்பதற்கு வசதியாக 10 குளிர்சாதனம் செய்யப்பட்ட அறைகள் கட்டப்பட்டுள்ளன. மேடையை சுற்றிலும் மற்றும் மேடைக்கு முன்பாக உள்ள பந்தல் உயர்ரக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மைசூர் மற்றும் பெங்களூரிலிருந்து தருவிக்கப்பட்ட இயற்கை மற்றும் செயற்கை மலர்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இணையத்தில் ஒளிபரப்பு

மேடையின் இடதுபுறத்தில் பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு ஊடக மையம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் தொலைபேசி, கணிப்பொறி, லேப்டாப், இணையதள வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் பரிதி இளம்வழுதி கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். (www.dmkyouthwing.in)

மாநாட்டு பந்தலின் இருபுறங்களிலும் மருத்துவ வசதிக்கென தனிக்குழு உருவாக்கப்பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவையும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு, சிற்றுண்டி கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் வருகை
இன்று காலை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலம் 7 மணிக்கு நெல்லையை வந்தடைந்தார்.

திமுக இளைஞரணி செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு தமிழச்சி தங்கபாண்டியன், மாநாட்டு திடலில் 84 அடி உயர கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டை திமுக மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி திறந்து வைத்தார். "மொழிப்போர் தியாகிகள்' படத்தை அசன் முகமது ஜின்னா திறந்து வைத்தார்.

கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று மாநாட்டு பந்தலை சுற்றி பார்த்தனர். ற்பகல் 2 மணிக்கு இளைஞரணியின் பிரம்மாண்ட அணிவகுப்பு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலிருந்து தொடங்கியது. இந்த அணிவகுப்பிற்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் ஆர்.ராசா அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட வாரியாக இளைஞரணியினர் வெள்ளைச் சீருடை அணிந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான இளைஞரணி தொண்டர்கள் வெள்ளைச்சீருடையில் அணிவகுத்து சென்றது ஏதோ ராணுவ அணிவகுப்பை போல பிரமிப்பை ஏற்படுத்தியது.

நெல்லை பிஷப் பங்களா, கலெக்டர் பங்களா, ஹை கிரவுண்டு, டிஐஜி பங்களா வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கடந்து இந்த அணிவகுப்பு மாநாட்டு திடலை வந்தடைந்தது. திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் அமர்ந்தபடி முதலமைச்சர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும், முக்கிய நிர்வாகிகளும் அணிவகுப்பை பார்வையிட்டனர்.

காவிய கலைஞர் 84
திடலையொட்டி திறந்தவெளி மைதானத்தில் 24 சிறப்பு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த மேடைகளில் இன்று மாலை 6 மணியளவில் "காவிய கலைஞர் 84' என்ற தலைப்பில் ஒலி, ஒளி காட்சி நடைபெறுகிறது.

முதலமைச்சர் கருணாநிதியின் 7 வயது முதல் 84 வயது வரையிலான முக்கிய சம்பவங்கள் இதில் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். கவிஞர் வைரமுத்து முன்னிலை வகிக்கிறார். இத்துடன் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

மிரட்டிய விளம்பரங்கள்
இந்த மாநாட்டையொட்டி திருநெல்வேலி நகரத்தைச் சுற்றியும் நான்கு சாலைகளிலும் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்அவுட், கொடி, தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டது போல் காணப்பட்டது.

இந்த மாநாட்டில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி கட்அவுட்டுகளும், பேனர்களும், வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.

அந்த விளம்பரங்களில் "எதிர்காலமே வருக', "தமிழகமே வருக', "நம்பிக்கை நட்சத்திரமே வருக' போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. ந்த மாநாட்டு பந்தலை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் சாரிசாரியாக வந்து சென்றனர்.

நெல்லை மாநாட்டையொட்டி நகரின் மூலைமுடுக்குகளிலும், நெல்லையின் சுற்று வட்டார கிராமங்களிலும் எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரது கட்அவுட்டுகள் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தன.

மு.க. அழகிரியின் கட்அவுட்டுகள் ஆங்காங்கே ஒன்றிரண்டு மட்டுமே கண்களில் தென்பட்டது. தே சமயம் திமுகவின் அதிகாரபூர்வ மாநாட்டு அழைப்பிதழில் கருணாநிதி படத்தை தவிர வேறுயாருடைய படமும் இடம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கனிமொழிக்கு வரவேற்பு
மேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு விளம்பரம் ஒன்றில் "கவிக்குயிலே, எங்கள் கவிதை இளவரசியே வருக வருக' என எழுதப்பட்டிருந்தது. முதலமைச்சரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் உருவப்படமும், தமிழச்சி தங்கபாண்டியனின் உருவப்படமும் மிகப் பெரியதாக வரையப்பட்டு, அதற்கு கீழே இந்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
.
போக்குவரத்து நெரிசல்
தமிழகம் முழுவதுமிருந்து பேருந்து, வேன் மற்றும் லாரி ஆகியவற்றில் திமுக தொண்டர்கள் நெல்லையை நோக்கி படையெடுத்ததால் நேற்று மாலை முதல் மதுரைநெல்லை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் ராஜபாளையம் புறவழிச்சாலையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
பாதுகாப்பு பணியில் 6500 போலீசார் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் நிரம்பியிருந்த நெல்லையில் பாதுகாப்பு பணிக்கென ஒரு ஐஜி, நான்கு டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள் தலைமையில் 6500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உள்ளே நுழைய கட்டணம் ரூ.20
மாநாட்டு முகப்புக்கு முன்பாக 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆண்களுக்கு 20 ரூபாயும், பெண்களுக்கு 10 ரூபாயுமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பணத்தை செலுத்தி உரிய ரசீதை பெற்ற பிறகே உள்ளே செல்ல முடிந்தது.


குளிப்பதில் போட்டா போட்டி
நெல்லை மாநாட்டையொட்டி நேற்று முதலே திமுகவினர் நெல்லைக்கு வருகை தர ஆரம்பித்தனர். வந்தவர்கள் முன்னதாக குற்றாலத்திற்கு சென்று அருமையான ஒரு குளியலை போட்டனர்.

சபரிமலைக்கு செல்வதற்காக ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் குவிந்திருந்ததால், யார் முதலில் குளிப்பது என்பதில் பக்தர்களும், திமுக தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெற்றி என்னவோ கட்சியினருக்குதான். திமுகவினர் குளித்து முடித்து செல்லும் வரை பக்தர்கள் காத்திருந்து நொந்த வண்ணம் பின்னர் குளித்து சென்றனர்.

பெட்ரோல் காலி; டாஸ்மாக் சரக்கும் காலி
நெல்லை திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி ஆயிரக் கணக்கான வாகனங்கள் நெல்லை யில் வந்து குவிந்திருப்பதால், நெல்லை நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் ஆகியவை சுத்தமாக காலியாகி விட்டது. இதனால் வாகனங்களுக்கு போட பெட்ரோலும், டீசலும் இல்லாமல் வாகன ஓட்டிகள் தவித்ததை காண முடிந்தது.

இதேபோல நெல்லை நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் அடியோடு காலியாகிவிட்டது. இதன் காரணமாக மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து டாஸ்மாக் மதுவகைகளை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவற்றை ஏற்றி வரும் வண்டிகள் போக்கு வரத்து நெரிசலால் நகருக்குள் வர முடியாததால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் குடிமகன்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

முரசொலியும், அல்வாவும்
நெல்லை மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்காக மாநாட்டு முகப்புக்கு முன்பாக முரசொலி இதழ் விற்பனை செய்யப்பட்டது. 3 ரூபாய் விலை கொண்ட முரசொலி இதழை வாங்கினால், 50 கிராம் எடை கொண்ட திருநெல்வேலி ஸ்பெஷல் அல்வா இலவசமாக தரப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட முரசொலி விநியோகஸ்தர் மாலை ராஜா எம்எல்ஏ இந்த பணிகளை மேற்கொண்டார்.

ஒரே நிமிடத்தில் முடிந்த பேட்டி
மாநாட்டு வளாகத்தையும், பந்தலையும் பார்வையிட்ட முதலமைச்சர் கருணாநிதி, மேடையில் வந்து அமர்ந்தார். அவருடன் அமைச்சர்களும், அவரது குடும்பத்தாரும் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

மாநாடு பந்தல் பற்றி மு.க. ஸ்டாலின், கருணாநிதியிடம் விளக்கிக் கூறி கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் முதலமைச்சரை அணுகி, அவரை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

உடனே அவர் அங்கிருந்து எழுந்து செய்தியாளர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தார். மாநாடு பற்றி இரண்டு வார்த்தை கூறுங்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். உடனே அவர் தனக்கே உரிய நகைச்சுவையுடன், மாநாடு 2 மணிக்கு தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் என்று கூறியவாறே சிரித்து கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஸ்டாலின் பேட்டி:
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற பட்டதாரிக்கும், பணி வாய்ப்புகள் வழங்குவதை தான் இளைஞர்களுக்கான முக்கியத்துவம் என்று குறிப்பிட்டேன். திமுக மாநாடு என்றாலே திருப்புமுனை தருவதாக தான் அமையும்.

அந்த அடிப்படையில் தான் இந்த மாநாட்டையும் திருப்புமுனை மாநாடு என்று கூறினேன். மற்றபடி பத்திரிகையாளர்கள் தான் திருப்புமுனை என்பதற்கு பல்வேறு யூகச்செய்திகளை எழுதி வருகிறார்கள்.

திமுகவை பொருத்த வரை ஏற்கனவே இளைஞர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே, இளைஞர்களுக்கு திமுகவில் புதிதாக எதுவும் கொடுக்க வேண்டும் என்ற நிலையில்லை.

உள்ளாட்சி தேர்தலில் கூட இளைஞர்கள் தான் சுமார் 50 சதவீதம் பேர் வெற்றிப்பெற்று பொறுப்பு களுக்கு வந்துள்ளார்கள். தமிழக அமைச்சரவையிலும் நான் உட்பட பல இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது

2 Comments:

Sunny said...

ஸ்டாலின்: "தமிழக அமைச்சரவையிலும் நான் உட்பட பல இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது"?

enna kodumai ஸ்டாலின் idhu?

Anonymous said...

muttalukku makudama