பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 14, 2007

சிபிஐ = மீண்டும் மீண்டும் சிரிப்பு

குவாத்ரோச்சியைப் பிடிக்க சர்வதேச போலீசுக்கு சிபிஐ கடிதம். இந்த செய்தியை படித்தாக் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

போஃபர்ஸ் பீரங்கிப் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய குவாத்ரோச்சியை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை சிபிஐ மீண்டும் நாடியுள்ளது. குவாத்ரோச்சி இத்தாலியில் இருக்கலாம் என்று கருதுவதாக சர்வதேச போலீசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. போஃபர்ஸ் பீரங்கி வாங்கப்பட்டதில் நடந்த 64 கேடி ரூபாய் ஊழல் குறித்தும் இந்தப் பேரத்தில் ஏஜண்டாகச் செயல்பட்ட குவாத்ரோச்சியைக் கைது செய்ய டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பற்றியும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜென்டினாவில் பிடிபட்டார் குவாத்ரோச்சி. எனினும் அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு சிபிஐ கோரியதை அர்ஜென்டினா நிராகரித்து விட்டது. சுதந்திர தினத்தன்று அர்ஜென்டினா அவரை விடுவித்தது. அங்கிருந்து சொந்த நாடான இத்தாலிக்கு அவர் சென்றார். அதற்கு முன்னதாக மலேசியாவில் இருந்த குவாத்ரோச்சியை நாடு கடத்த இந்தியா கோரியதை மலேசியா ஏற்கவில்லை. இத்தாலி நாட்டைச் சேர்நதவர்ளை நாடு கடத்த சட்டம் இடமளிக்கவில்லை என்று ஏற்கெனவே டெல்லிக்கு இத்தாலி தெரிவித்துள்ளது. இந்நிலையில் குவாத்ரோச்சியைப் பிடிக்குமாறு சர்வதேசப் போலீசாருக்கு சிபிஐ கடிதம் அனுப்பியிருப்பது ஒரு சம்பிரதாயத்துக்குதான் என்று போஃபர்ஸ் ஊழல் வழக்கை விசாரித்து வரும் சில அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி சிபிஐ தாக்கல் செய்த வழக்கை அர்ஜென்டினா நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட்டில் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பின் நகலை வாங்கி அனுப்பும்படி அர்ஜென்டினாவில் உள்ள இந்தியத் தூதரை சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

2 Comments:

Anonymous said...

idly see this
http://dmkyouthwing.in/Thalapathi-Sacrifice-History.html

and one more thing make a text box for users to suggest you possible interesting news.....

Bala

cgs said...

இட்லிவடை இப்போதைக்கு நமக்கெல்லாம் தெரிஞ்சு 45,00,000 ஒரே நாளில் இந்தப்படுபாவிகள்(சி பி ஐ) வீண் செய்துள்ளார்கள்.அது பத்தவில்லயோ என்னமோ.