
நேற்று நடந்த புத்தக வெளியீட்டுவிழா. புத்தக வெளியீட்டு விழா என்றால் எவ்வளவு பேர் கலந்துகொள்வார்கள் ? 50 ? 100 ? 150 ? நேற்று நடந்த விழாவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டார்கள் என்று பேச்சு. அந்த ஆயிரம் பேரில் பத்ரியும் ஒருவர்!
இது இலக்கிய கூட்டமா அல்லது இலக்கிய மாநாடா என்று தெரியலை, நேற்று கொடி எதுவும் ஏற்றினார்களா என்று தெரியலை கொஞ்சம் லேட்டாக போயிட்டேன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, December 31, 2007
இலக்கிய மாநாடு ?
Posted by IdlyVadai at 12/31/2007 03:46:00 PM
Labels: புத்தக கண்காட்சி - 2008
Subscribe to:
Post Comments (Atom)











12 Comments:
Kalachuvadu and Uyirmmai are competing with each other
in inviting kanimozhi and
ravikumar. What a great combination
DMK+left+'little' magazine owners.
Is it not shameful that kalachuvadu and Uyirmmai are
trying to win the attention
of third rate authors who happen
to be in DMK and related to powerful families. The shameless
Sukumarans,Kalyanjis attend such
functions.
என்னத்தைச் சொல்ல?
ஜெயகாந்தனா அந்த ஓரத்தில் நிற்பது? எப்படியிருந்த மனுஷன்? எல்லாம் காலம் செய்யும் கோலம் :-)
இந்தக் கூட்டத்துக்கு நான் போனது எந்த விதத்தில் பெரிய நியூஸ்? நான் எவ்வளவோ இலக்கிய, அரசியல் கூட்டங்களுக்குப் போகிறேன்:-)
1,000 எல்லாம் இருக்காது. சுமார் 300-350 பேர் இருக்கலாம். கவிஞர் புகாரி இதே இடத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தனது கவிதை நூலுக்கு ஒரு விழா நடத்தினார். வைரமுத்து வந்திருந்தார். அப்பொழுதும்கூட அந்த அரங்கில் சுமார் 250 பேர் வந்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
நிற்க! நீங்கள் கூட்டத்தில் என்னைப் பார்த்திருந்தால் எனக்கு ஒரு ஹலோ சொல்லியிருக்கலாமே!
//இந்தக் கூட்டத்துக்கு நான் போனது எந்த விதத்தில் பெரிய நியூஸ்? நான் எவ்வளவோ இலக்கிய, அரசியல் கூட்டங்களுக்குப் போகிறேன்:-)//
பெரிய நியூஸ் எப்படி என்று நான் ஓபனா சொல்றேன் கோவிச்சிக்க கூடாது.
உயிர்மை கூட்டம் என்றால் சில Default விருந்தாளிகள் இருப்பார்கள், அவர்கள் இந்த கூட்டதில் மிஸ்ஸிங். பெயர் சொல்ல மாட்டேன். நீங்க உயிர்மை கூட்டதுக்கு அவ்வளவாக வந்தது கிடையாது ஆனால் இந்த கூட்டதுக்கு நீங்க வந்ததை பார்த்து சிலர் புருத்தை உயர்த்தினார்கள் அன்பது நிஜம் :-)
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு உயிர்மை போடாமல் கிழக்கு போடுகிறது என்பதற்கு நான் புருவம் உயர்த்தினேன் :-) 700 பக்க சிறுகதை தொகுப்பு என்று கேள்விப்பட்டேன்.
//நிற்க! நீங்கள் கூட்டத்தில் என்னைப் பார்த்திருந்தால் எனக்கு ஒரு ஹலோ சொல்லியிருக்கலாமே!//
உங்களை ஆபிஸுக்கே வரேன் சந்திக்கலாமா :-)
சொல்ல மறந்துட்டேன்
//கவிஞர் புகாரி இதே இடத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தனது கவிதை நூலுக்கு ஒரு விழா நடத்தினார். வைரமுத்து வந்திருந்தார்.//
வைரமுத்து வந்தால் நிச்சயம் அந்த கூட்டதுக்கு பா.விஜய் வரமாட்டார் தெரியுமா ? அடுத்த முறை கவணித்து பாருங்க :-)
//உங்களை ஆபிஸுக்கே வரேன் சந்திக்கலாமா :-)//
எங்க ஆபிஸுக்கு வாங்க அட்ரஸ் தரேன் , வேணா ஆட்டோ அனுப்பறேன் :-)
இட்லிவடை: வாருங்களேன். ஆஃபீஸில் சந்திக்கலாம். முகவரி இருக்கும் என்று நினைக்கிறேன். எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை, சென்னை.
உயிர்மை நடத்தும் பல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றுள்ளேன். யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் தொகுப்பு கிழக்கு மூலம் வருவதில் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். எல்லாம் வெளிப்படையாகவே நடக்கின்றன.
இல்லாத பாலிடிக்ஸ் இருப்பதுபோல சிலர் ஏன் நினைக்கவேண்டும்?
மற்றும், விழாவில் மேடையில் கலந்துகொண்ட கவிஞர் சுகுமாரன் எங்களது நிறுவனத்தின் மலையாளப் பதிப்பான புலரிக்கு முழுநேர ஆசிரியர். அதே சமயம் அவரது பல புத்தகங்கள் உயிர்மை மூலமே பதிப்பாகிறது என்பதும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று:-)
அழைப்புக்கும் தகவலுக்கும் நன்றி.
"இல்லாத பாலிடிக்ஸ் இருப்பதுபோல சிலர் ஏன் நினைக்கவேண்டும்?"
இருக்கிற பாலிடிக்ஸை சிலர் இல்லை என்று மறுப்பதால் :)
-----------------------------------
"ஜெயகாந்தனா அந்த ஓரத்தில் நிற்பது? எப்படியிருந்த மனுஷன்? எல்லாம் காலம் செய்யும் கோலம் :-)"
அமைச்சர் ராசா, கனிமொழி முன் ஜெயகாந்தனுக்கு கிடைக்கும் மரியாதை அவ்வளவுதான். இதை அவர் புரிந்து கொள்ள வேண்டுமே:(. மனுஷ்யபுத்திரன் காலச்சுவட்டில் பணியாற்றிய போது சு.ராவின்
விசுவாசி, இடதுசாரி,திராவிட இயக்க எதிர்ப்பாளர்.இப்போது புத்தக வெளியீட்டாளர்/வியாபாரி;பல கட்சிகளின் ஆதரவு தேவை.திமுக வில் உள்ள இலக்கிய 'நிபுணர்கள்' தயவு அதிகம் தேவை. எனவே ஞாநியை கண்டிக்கும் கூட்டத்தில் பங்கேற்ப்பு, தமிழச்சி நூல் வெளியீடு, அதில்
கனிமொழி,அ.ராசா பங்கேற்ப்பு போன்றவை. சிறுபத்திரிகை மணம் சேர்க்க பெருங்காயம், கறிவேப்பிலை போல் சுகுமாரன்,வண்னதாசன். உண்மையான இலக்கியவாதிகள் இப்படிப்பட்ட மேடைகளை தவிர்க்க வேண்டும். சோசலிச யதார்த்தவாதத்தினை நிராகரித்தவர்கள் இன்று திராவிட இயக்க/இல்லகியத்திற்கு சாமரம் வீசுகிறார்கள், பல்லக்கு தூக்குகிறார்கள்.
மனுஷ்யபுத்திரன் திமுக இலக்கிய அணியில் சேர்ந்துவிடுவது இன்னும் நேர்மையாக இருக்கும்.
தமிழச்சி தங்கபாண்டியன் நூல் வெளியீட்டுவிழாவிற்கு வருகை தந்திருந்தவர்களின் எண்னிக்கை குறித்து இட்லி வடை பதிவிற்கு பத்ரி எழுதியிருந்த பதிலை பார்த்தேன். அந்த விழா ஏற்பாட்டாளன் என்ற முறையில் ஒரு சிறிய விளக்கம். ஒரு கூட்டத்தில் எண்ணிக்கை என்பது ஒரு அளவு கோல் அல்ல என்ற போதும் இலக்கிய கூட்டங்கள, புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு வரும் எண்ணிக்கையை நாம் அலட்சியப்படுத்தவேண்டியதில்லை என்றே கருதுகிறேன். தமிழ்ச்சி தங்கபாண்டியனின் நிகழ்சிக்கு முந்தைய நாள் ரஷ்யன் கலாச்சார மைய்யத்தில் ம்ணாவின் ' எம்.ஆர்.ராதா: காலத்தின் கலைஞன் நூல் வெளியீட்டு விழாவிற்கு சுமர் 350 பேர் வந்திருந்தனர்.(220 இருக்கைகள் நிறைந்து மீதிபேர் நின்றுகொண்டிருந்ததை வரவேற்புரையற்றிவிட்டு மேடையில் இருந்து எண்ணிக் கொண்டிருந்தேன். அத்தனை பேர் நின்றிந்தது மிகவும் வருத்தமாக இருந்தது) தமிழச்சியின் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் நிச்சயமாக இதைவிட இரண்டு மடங்கு அதிகம். அவ்வளவு பேருக்கு இடையே பேசவே எனக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. அரங்கை ஒரு கணம் திரும்பிப் பர்த்த யாரும் இதை அறிந்து கொள்ளலம். அன்றைய புத்தக விற்பனையும் அதற்கு சாட்சி. இந்த விழாக்களின் இத்தகைய வெற்றி உயிர்மைக்கு மட்டுமல்ல கிழக்கிற்கும் பிற பதிப்பாளர்களுக்கும்கூட மிக முக்கியமானது. 15 ஆண்டுகளாக பதிப்புச் சூழலில் வேலை செய்பவன் என்ற முறையில் இது மிகப் பெரிய மாற்றம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
மனுஷ்ய புத்திரன்
இந்த விழாக்களின் இத்தகைய வெற்றி உயிர்மைக்கு மட்டுமல்ல கிழக்கிற்கும் பிற பதிப்பாளர்களுக்கும்கூட மிக முக்கியமானது. 15 ஆண்டுகளாக பதிப்புச் சூழலில் வேலை செய்பவன் என்ற முறையில் இது மிகப் பெரிய மாற்றம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
Yes, the more copies you sell,
you can make more money and please
your new masters in DMK too.
Post a Comment