பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 13, 2007

தேவேகவுடா கட்சி உடைந்தது!

தேவேகவுடா கட்சி உடைந்தது - எம்.பி. பிரகாஷ்- 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விலகல்

கர்நாடகத்தில் தேவேகவுடாவின் போக்கு பிடிக்காமல் ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் தலைமையில் அதிருப்தியாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். மத சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் நீடிப்பதா? அல்லது அக்கட்சியில் இருந்து விலகுவதா? என்பது பற்றி முடிவுக்கு ஆதரவாளர்கள் கூட்டத்தினை எம்.பி. பிரகாஷ் கூட்டினார். நீண்டநேரம் நடந்த ஆலோ சனைக்குப்பின் ஜனதா தளம் கட்சியில் இருந்து அனைவரும் ராஜினாமா செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update:

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து சிலர் வெளியேறி யிருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

1 Comment:

Anonymous said...

ada devu(agow)da :P