பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 12, 2007

நரேந்திர மோடி மீது வாஜ்பாய் அதிருப்தி

குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி மீது வாஜ்பாய் அதிருப்தி அதனால் ஆதரவு திரட்ட மறுப்பு என்ற செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியலை...

குஜராத், இமாச்சல பிரதேசங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. மாநில தேர்தல்கள் நடக்கும் போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அங்கு சென்று பிரசாரம் செய்வது வழக்கம்.

உடல்நிலை பாதிப்பு காரண மாக அவர் இருமாநிலங்களுக் கும் தேர்தல் பிரசாரம் செய்ய வில்லை. ஆனால் இமாச்சல பிரதேசம் வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதில், "பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்து நல்லாட்சி அமைய வாய்ப்பு தாருங்கள். பாரதீய ஜனதாவால் தான் மாநிலம் வளர்ச்சி அடைய முடியும்'' என்று கூறியிருந்தார்.

ஆனால் குஜராத் வாக்காளர்களுக்கு அவர் எந்த வேண்டுகோளும் விடுக்க வில்லை. முதல்-மந்திரி நரேந்திர மோடி மீது இருந்த அதிருப்தியால்தான் அவர் குஜராத்தை கண்டு கொள்ள வில்லை என்று கூறப்படு கிறது.

குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் விதம் வாஜ்பாய்க்கு ஏற்கனவே பிடிக்காமல் இருந்தது. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரத்தை நரேந்திர மோடி அடக்காமல் விட்டது அவருக்கு இன்னும் அதிருப்தியை அதிகப்படுத்தி யது.

அதன் பிறகு நடந்த தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற சென்றார். அப்போது வாஜ்பாய் மோடி யிடம் "அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி நடத்துங்கள்'' என்று அறிவுரை கூறினார். ஆனாலும் மோடி தன் போக்கிலேயே நடந்து கொண்டார்.

குஜராத் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் கேசுபாய் பட்டேல், சுரேஷ் மேத்தா போன்றவர்களையும் மோடி புறக்கணித்து வந்தார்.

எனவே நரேந்திர மோடியை வாஜ்பாய்க்கு பிடிக்கவில்லை. இதனால் தான் அவர் குஜராத் வாக்காளர்களுக்கு எந்த வேண்டுகோளும் விடுக்க வில்லை என்று தெரிகிறது.

1 Comment:

மகேஷ் said...

உங்கள் சந்தேகம் வாஜ்பாய் வரை போய் விட்டது போலும்.. இதோ குஜராத் வாக்காளர்களுக்கு வாஜ்பாயின் வேண்டுகோள் பற்றிய செய்தி - http://www.rediff.com/news/2007/dec/13gujpoll5.htm