பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 11, 2007

அத்வானி

பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.,வை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி வழிநட்த்திச்செல்வார் என்றும், மேலும் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு பா.ஜ., தலைவர் வாஜ்பாய் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குஜராத் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா இந்த முடிவை எடுத்துள்ளது. அத்வானிக்கு ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளின் ஆதரவு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"அத்வானி, பிரதமர் ஆக நினைப்பது பகல் கனவாகவே முடிவடையும். பா.ஜனதாவை சேர்ந்தவர் பிரதமர் பதவியை அடையும் சூழ்நிலை ஏற்படாது. ஏதோ பிரதமர் பதவி வேட்பாளர் என்ற அளவுடன் அத்வானி திருப்தி அடைய வேண்டியதுதான்" - இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் ஏ.பி.பரதன்

"மற்ற கட்சியினராலும் வாஜ்பாய் மதிக்கப்படுகிறார். ஆனால் அத்வானிக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலவுகிறது. எனவே, அவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொலிட்பீரோ உறுப்பினர் எம்.கே.பாந்தே

0 Comments: