பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 07, 2007

நரேந்திர மோடிக்கு நோட்டீஸ

இன்றைய நரேந்திர மோடி நியூஸ்!

நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்
சோராபுதின் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பேசியது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
.
இது குறித்து சனிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீசில் தெரிவித்துள்ளது.

மதம் மற்றும் சாதி உணர்வுகளை தூண்டும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்று அந்த நோட்டீசில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மோடியின் பேச்சு குறித்து சூரத் மாவட்ட கலெக்டர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சிடி ஆதாரங்களையும் மாவட்ட கலெக்டர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
எதிராக வழக்கு
குஜராத்தில் சோராபுதின் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை நரேந்திர மோடி பேசியிருந்தார்.
இதை எதிர்த்து சோராபுதினீன் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்டு நீதிபதி தருண் சாட்டர்ஜி தலைமையிலான பெஞ்ச் இதனை திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர். மோடிக்கு எதிராக ஜாவீத் அக்தர் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மோடிக்கு தடை: கம்யூ. கோரிக்கை

குஜராத் சட்டபேரவை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

1 Comment:

Ram said...

"ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது தான்-என்ஆர்எஸ்ஏ"

ஏன் இதை மீடியா மற்றும் இட்லி வடை கவர் செய்யவில்லை ??

http://www.aol.in/tamil/news/2007/12/08/india-ram-setu-man-made-says-govt-publication.html