பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 05, 2007

விஷவாயு கசிவானதால் சென்னை மக்கள் பீதி

சென்னையில் பரவலாக விஷவாயு கசிவானதால் மக்கள் பீதி அடைந்துள்ளார்கள். இந்த மர்ம வாயு கோபால புரத்திலிருந்து வராததால் ஜெ அறிக்கை விட முடியவில்லை. நேற்றைய ராமதாஸ் பேட்டியினால் இந்த விபரீதம் நடந்திருக்குமா என்றும் புலனாய்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஒரு செய்தி!
எது எப்படியோ செய்தி கீழே...

சென்னை நகரில் செவ்வாய் கிழமை உருவாகிய விஷவாயு கசிவு இன்று புதன் கிழமையும் நீடித்தது. சென்னை அண்ணா சாலை, குரோம்பேட்டை பகுதிகளிலும் இன்று விஷவாயு பரவியது. இந்த விஷவாயு தாக்குதலால் மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விஷவாயு தாக்குதலால், பரவலாக மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது. விஷவாயு தாக்கியதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சென்னையில் நேற்று மாலை காற்றில் ஒருவித விஷவாயு பரவியது. திருவிக நகர், கண்ணதாசன் நகர், குளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விஷவாயு பரவியது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல சிலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஆளாகினர். வாகனத்தில் சென்றவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இது குறித்து, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு மணலி, தண்டையார்பேட்டை பகுதிகளில் ‌உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


1 Comment:

Anonymous said...

It came from idlies and vadais cooked in a blog :).