பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 03, 2007

வேணுகோபால் நீக்கம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

இந்திய மருத்துவ கழகத்தின் இயக்குனர் வேணுகோபால் கடந்த சில நாட்களுக்கு முன் அவசர சட்டத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மத்திய அரசு எய்ம்ஸ் டைரக்டரின் வயதை 65ஆக குறைத்து அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்புதலும் பெற்றது. இதனை தொடர்ந்து வேணுகோபால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 65 ஆக மாற்றி சமீபத்தில் மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.

இதையடுத்து அதன் இயக்குனர் டாக்டர் வேணுகோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சட்டத்தை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இது குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இன்று உத்தர விட்டுள்ளது. இது குறித்து 15 தினங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறியுள்ள உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே, இந்த மனு தொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரையில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக பதவியேற்றுள்ள கே.கே.டோக்ரா நீடிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வேணுகோபால் போன்ற உயர் பொறுப்பில் உள்ளவர் இது போன்ற சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனையில் நீதிமன்றம் வேணுகோபாலுக்கு ஆதரவாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது.

சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், உத்தரவு எதையும் தற்போது பிறப்பிப்பது கடினமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments: