பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 01, 2007

`விடுதலைப்புலிகளாக மாறுவோம்' - மலேசிய தமிழர்கள் எச்சரிக்கை

"எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படா விட் டால் விடுதலைப்புலிகளாக மாறுவோம்'' இதுவரை நாங்கள் காந்தியைத்தான் தலைவராக ஏற்று அஹிம்சை வழியில் போராடி வருகிறோம். மலேசிய அரசின் அடக்கு முறை நீடித்தால் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை எங்கள் லட்சியத்தலைவராக ஏற்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும்''


மலேசிய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி

இப்படி பேசியதற்காகவே இவரை கைது செய்ய வேண்டும். இந்த மாதிரி பேசுபவர்களை மலேசிய அரசாங்கம் தயவு தாட்சன்யம் பார்க்காமல் ஒடுக்க வேண்டும். நம் அரசியல் தலைவர்கள், ஒரு கையில் வாயையும், மற்ற கையில் வேற எதையாவது பொத்திக்கொண்டு இருப்பது நலம்.


மலேசியா நாட்டு மக்கள் தொகையில் 7சதவீதம் பேர் இந்தியர்கள். இதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அங்கு நூற்றாண் டுக்கு மேலாக வாழும் தமிழர் குடும்பங்கள் ஏராள மாக உள்ளன. மலேசி யாவிலேயே பிறந்து, வளர்ந்த 3-வது தலைமுறை தமிழர்கள், தற்போது பல் வேறு பிரச்சினைகளை சந் திக்கும் சூழ்நிலைக்கு தள் ளப்பட்டுள்ளனர்.

மலேசிய வாழ்தமிழர்க ளுக்கு அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்கப்படுவது இல்லை. இலங்கையில் ஈழத் தமிழர்கள் நடத்தப்படுவது போல மலேசியாவிலும் தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவது உள்பட பல விஷயங்களில் தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

சமீபகாலமாக மலேசிய பல் கலைகழகம், கல்லூரிகளில் தமிழர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவது இல்லை. இந்து கோவில்களும் இடிக் கப்படுகின்றன. இதை யெல்லாம் கண்டித்தும் சம உரிமை கோரியும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சுமார் 10 ஆயிரம் தமிழர்கள் பிரமாண்ட பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட் டனர்.

சுமார் 200 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பிரச்சினை தற்போது தமிழ்நாட்டிலும் எதிரொ லிக்கத் தொடங்கி உள்ளது. மலேசியாவை கண்டித்து மத்தியஅரசு குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளது.

சம உரிமைக்காக போராட்ட களத்தில் குதித்துள்ள மலேசியத் தமிழர்களில் பலர், சர்வதேச சமுகம் குறிப் பாக இந்தியா தங்களுக்கு உதவிக்கரம் நீட்டாவிட்டால், விடுதலைப்புலிகளிடம் உதவி கேட்போம். சமஉரிமைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் என்று ஆவேச மாக கூறி உள்ளனர். மலே சியத் தமிழர்களில் கணிசமா னவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதிஉதவியும், ஆயுதம் வாங்க உதவியும் செய்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. எனவே விடு தலைப்புலிகளாகமாறுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

மலேசிய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி கூறுகையில், "எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படா விட் டால் விடுதலைப்புலிகளாக மாறுவோம்'' இதுவரை நாங்கள் காந்தியைத்தான் தலைவராக ஏற்று அஹிம்சை வழியில் போராடி வருகிறோம். மலேசிய அரசின் அடக்கு முறை நீடித்தால் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை எங்கள் லட்சியத்தலைவராக ஏற்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும்'' என்றார்.

இதற்கிடையே மலேசியத் தமிழர்களுக்கு சமஉரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்பட பல நாடு கள் மலேசியாவை வலியுறுத் தத்தொடங்கி உள்ளன. காமன்வெல்த் அமைப்பும் மலேசியத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு சார்பில் இங்கிலாந்து ராணிக்குஎழுதப் பட்டுள்ள கடிதத்தில்
கூறப்பட்டிருப்பதாவது :-

மலேசியாவில் வாழும் இந் தியர்களில் 94 சதவீதம் பேர் தமிழர்கள் அவர்களுக்கு எல்லா அடிப்படை உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும் என்று காமன்வெல்த் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதம்எழு தப்பட்டு விட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லை.

மலேசியத் தமிழர்கள் போராட தொடங்கி உள்ளனர். இலங்கையில் தமிழர்கள் ஆயு தம் ஏந்தி போராடுவது போல மலேசியத் தமிழர்களும் போராளிகளாக மாறி விடுவார்களோ என்று பயப் படுகிறோம்.

3 Comments:

Jahe said...

நம்ம கு....யே நாறும்போது.. அடுத்தவனுக்கு ஏன் சொறிஞ்சி விடனும் ??

நண்டு கதா தெரியுமா ? அதில தமிழ் நண்டு கால வாறுரதில ரொம்ப famous.... அப்புறம் ஏன் மலேசியகாரன் உதைக்க மாட்டான் ??

நச்சுவாயன் வீட்டில நாரவாயன் சாப்பிட போன கதை தான்...

செந்தழல் ரவி said...

ஏனிந்த கொலைவெறி இட்லிவடை அவர்களே ?

kavin said...

non sense