பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 01, 2007

சட்டம், ஒழுங்கு, புலிகள் பற்றி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை திருப்தி அளிப்பதாக இல்லை
* புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு பிரபாகரன் தான் காரணம்
* தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவிற்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் கவிதை எழுதியதை ஏற்றுக் கொள்ள முடியாது

என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்


தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினாலோ, கூட்டம் நடத்தினாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு பிரபாகரன் தான் காரணம். எப்போதும் விடுதலைப்புலிகளின் அறிக்கைகள் தமிழ்ச்செல்வன் பெயரில் தான் வரும். ஆனால் சமீப காலமாக அப்படி அறிக்கைகள் வெளிவரவில்லை.

பிரபாகரனுக்கு நிகரான தமிழ்ச்செல்வன் அதிகாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் என்பது இலங்கை ராணுவத்திற்கு எப்படி தெரியும்? எனக்கு கிடைத்த பல்வேறு தகவல்களின் படி தமிழ்ச்செல்வன் மறைவிற்கு காரணம் பிரபாகரன் தான். அவரை இலங்கை ராணுவத்திற்கு பிரபாகரன் தான் காட்டிக் கொடுத்தார் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

தமிழ்ச்செல்வன் மறைவிற்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் கவிதை எழுதியது தவறு. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகளை ஆதரிப்பவர்களை நாங்கள் எதிர்ப்போம். புலிகளின் ஆதரவு செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று கொள்கைகள் உள்ளன. இதேபோல திமுகவுக்கும் கொள்கைகள் உள்ளன. அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படும் போது எங்களுக்கு உடன்பாடு இல்லாத கொள்கைகளில் எதிர்ப்பு தெரிவிப்போம். அதனை ஏற்க மாட்டோம். அந்த வகையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சி ஏற்காது.

தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு நிலைமை திருப்தியளிக்கவில்லை. காவல்துறையினரின் நடவடிக்கையை இன்னும் முடுக்கி விட வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், என்னுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 27 மாதங்கள் ஆகின்றன. இது சம்பந்தமாக முதலமைச்சரை நான் சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மூன்று முறை உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் ஒன்றும் தெரியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் புலனாய்வு மிகவும் பலவீனமாக உள்ளது. சரியான புலனாய்வு இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

காவல்துறையினரின் நடவடிக்கை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்று கவலைப்படுகிறேன். காவல்துறையினரின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் நடத்திய வன்முறையை ஏற்க முடியாது. கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே அரிவாள் கொண்டு சென்று தாக்குதல் நடத்தியது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்வங்கள் இனி எந்த காலத்திலும் நடக்கக்கூடாது.

மலேசிய தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு இந்தியா அறிவுறுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் தொடர்ந்து ஆங்கில மொழியே நிர்வாக மொழியாக நீடிக்க வேண்டும். வேறொரு மொழியை கொண்டு வரும் வகையில் சட்டத்தை திருத்தக் கூடாது.

மருத்துவ மாணவர்களின் படிப்புக் காலத்தை நீட்டிக்கக் கூடாது. ஐந்தரை ஆண்டுகளிலேயே அவர்கள் மருத்துவப் பட்டம் பெற வேண்டும். அவர்களுடைய கோரிக்கை நியாயனமாது. அது ஏற்கப்பட வேண்டும். அதேசமயம் கிராமப்புற சேவையும் தேவையானதே.

விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய வகையில் நெல்லின் கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.

2 Comments:

jangiri said...

ha... ha...ha...
congress.congress..thaan.
S.R.B.Means,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,

naan sollanuma,

,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,

haiyo,,haiyo,,,
"VETHU VETTUGALAA"
innuma puriyala???

Sunny said...

I think he lost... he might listen what he is talking about. this interview seems he would like to show he is IN> non-sense information and useless talk