பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 03, 2007

சென்னையில் பெரியாருக்கு 95 அடி உயர சிலை !


நல்ல வேளை பெரியார் இல்லை இந்த கூத்தை பார்க்க. தமிழ் நாட்டில் பிள்ளையார் சிலைக்கு அடுத்து நிறைய சிலைகள் பெரியாருக்கு தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நாய்குட்டிக்கு ஏன் வீரமணி பால் வாங்கவில்லை என்று கீழே படித்தால் சிரிக்காத உம்மனா மூஞ்சி கூட சிரிக்கும்.

படம்: கருப்பு பணம் வெள்ளை பணம் ஆகலாம், அதே போல் கருப்பு துண்டு மஞ்சள் துண்டு ஆகலாம் !

நேற்று கி.வீரமணி விடுத்த கோரிக்கையை ஏற்று கருணாநிதி சென்னையில் பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பாராட்டு விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி பிறந்த நாள் விழா மலரையும், கி.வீரமணியின் ``வாழ்வியல் சிந்தனைகள்'' (பாகம்-4) நூல், பாடல்கள் குறுந்தகடு ஆகியவற்றை வெளியிட்டார். பெரியார் நடமாடும் புத்தக சந்தை வாகனத்தையும் கருணாநிதி தொடங்கி வைத்து பேசினார். கி.வீரமணிக்கும், அவரது மனைவி மோகனாவுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் கருணாநிதி பேசியது:

வீரமணிக்கும், எனக்கும் ஏற்பட்ட பழக்கம் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. அன்று முதல் இன்று வரை நானும் அவரும் இணைந்தே இருக்கிறோம். இடையிலே சில காலம் கசப்பு ஏற்பட்டாலும் கூட, அந்த கசப்பு கரும்பின் அடிப்பாகம் இனிப்பாக இருந்தாலும், நுனிப்பாகம் சிறிது கசப்பாக இருக்கும், ஆனாலும் கரும்பு கரும்பு தான் என்பதைப் போல, எங்களுக்குள் இடையிலே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், கரும்பு கரும்பு தான்.

பெரியார், அண்ணாவால் உருவாக்கப்பட்ட நாங்கள் இருவரது கொள்கைகளையும் இரண்டற கலந்து இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் உழைத்திருக்கிறோம். அவரைவிட 9 ஆண்டுகள் நான் அதிகம் பணியாற்றியிருக்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உழைப்பேன். அந்த உழைப்பு எனக்காகவோ, தனிப்பட்ட யாருக்காகவும் அல்ல, தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அவர்களுக்காக.

அதைத் தான் சத்யராஜ் இங்கு கூறினார், யாரோ ஒருவர் கடல் கடந்த ஒருவர் உம்முடைய வேலையை பாரும் என்று கூறியதற்கு, சத்யராஜை விட வேறு யாரும் இவ்வளவு நாசுக்காக பதில் அளித்திருக்க முடியாது. இதைவிட வேறு என்ன வேலை இருக்கிறது. நான் என்னுடைய வேலையைத் தான் பார்க்கிறேன்.

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி. பெரியார் தனது நாய் குட்டிக்கு பால் வாங்கிவரும்படி வீரமணியிடம் கூறினார். கடைக்கு சென்ற வீரமணி பால் வாங்காமல் திரும்பி வருகிறார். பெரியார், ஏன் பால் வாங்க வில்லை என்று கேட்டதற்கு பிராமணர் ஓட்டலாக இருந்ததால் வாங்கவில்லை என்று வீரமணி கூறியுள்ளார்.

பெரியார் பிராமணர் ஓட்டலில் எதுவும் வாங்க கூடாது என்று கூறியதற்காக நாய்க் குட்டிக்கு கூட பால் வாங்காமல் வரும் அளவுக்கு அவ்வளவு பிடிவாதமாக கொள்கையை காப்பாற்றியவர் வீரமணி என்கிற போது புளகாங்கிதம் அடைந்தேன்.

(இதுக்கு பேர் தான் சாதி ஒழிப்பு )
என்னையே பாராட்டிக் கொள்கிறேன் எவ்வளவு பெரிய சகோதரனை பெற்றிருக்கிறேன்.


வீரமணியின் 75-வது பிறந்த நாளை கொண்டாட திராவிடர் கழக முன்னணியினர் நினைத்த போது அவர் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்தார். என்னிடம் பரிந்துரைக்குமாறு சொன்னார்கள். நான் தான் கட்டாயப்படுத்தி இந்த விழா நடந்தே தீரவேண்டும் என்றேன்.

பெரியார் அவரது சிலை திறப்பு விழாக்களிலே கலந்து கொள்வார். அப்போது அவரிடம் நான் இதனை சிலர் கேலி செய்கிறார்களே என்று நான் கேட்டேன். அதற்கு பெரியார் சிலை திறப்பு விழா எனக்காக நடைபெறும் விழா அல்ல, என் கொள்கைகளை பிரச்சாரம் செய்யப்படுகிற விழா தான் சிலை திறப்பு விழா. இதுபோல் இன்னும் 100 சிலைகளை திறக்க வேண்டும் என்று சொன்ன ஒரே தலைவர் பெரியார் தான்.

ஒரு சிலை என்று இருந்தால் அதனை பார்ப்பவர்கள் யார் இவர்? என்று கேட்பார்கள். இதன் மூலம் நமது கொள்கைகள் பரவும். தங்கள் எதிர்கால சந்ததியினர், வழித்தோன்றல்கள் அறிய அந்த சிலைகள் உதவியாக இருக்கும். அதனால் தான் சிலை வேண்டாம் என்று அவர் கூறியதில்லை.

கி.வீரமணி பெரியாருக்கு சென்னையில் 95 அடி உயர சிலை வைக்க வேண்டும் என்றார். 9 அடி, 10 அடி சிலைகள் வைக்கும்போதே பகுத்தறிவு பிரச்சாரம் இவ்வளவு வேகமாக நடைபெறும் போது, 95 அடி அல்லது 100 அடி உயரத்தில் சிலை வைத்தால் இன்னும் வேகமாக பகுத்தறிவு பிரச்சாரம் நடைபெறும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

கி.வீரமணி கூறியதை பெரியார் இட்ட கட்டளையாக கருதி இதனால் என்ன விளைவு வந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப்படாமல் அதை அமைத்து தருவேன். கொள்கைக்காக பாடுபட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்றார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காங்கிரஸ் அரசு உதவிய போது, அதை எண்ணிப்பார்த்து மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவித்தொகை தந்தால் என்ன என்று எண்ணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவி வழங்கினோம்.

சில நல்லவர்கள் இதற்கு தடை ஆணை பெற்றனர். தேசிய மொழியை எதிர்த்தவர்கள் என்பதால் இதற்கு தடை பெற்றதால், இந்தி என்ற சொல் இருந்தால் தானே வம்பு என்று மொழிப் போராட்ட தியாகிகள் என்று மாற்றி வழங்கினோம். இப்போது இதற்கு சில சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இதனை தீர்ப்பது குறித்து விவாதித்து வருகிறோம்.

சாதி ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் சிக்கல் வராது என்று கருதுகிறேன். ஏனென்றால் நாம் எந்த ஜாதியையும் குறிப்பிடப் போவதில்லை. எனவே தகராறு வராது. அந்த கருத்தை பொது கருத்தாக ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் ஜாதி ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. அரசு உதவும். அவர் கூறிய இரு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

வீரமணியும் அவரது துணைவியாரும் வாழ வாழ்த்துகிறேன். அவர்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும். தமிழர்கள் வாழ்வார்கள். திராவிடர்கள் வாழ்வார்கள்.திராவிடர் கழக தலைவர் வீரமணி :

தமிழர்களுக்கு இந்த ஆட்சியை விட்டால் வேறு நல்ல ஆட்சி கிடைக்காது. தமிழர்களுக்கு இந்த தலைவனை விட்டால் வேறு தலைவன் கிடைக்க மாட்டான். பெரியாருடைய திட்டங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் தான் சட்டமாக்கப்படுகின்றன. இங்கே கூடியிருக்கும் இளைஞர்கள், இளைய சமுதாயத்தினர் இன எதிரிகளை வீழ்த்தும் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த விழாவில் 2 கோரிக்கைகளை முதல்-அமைச்சருக்கு வைக்க கடமைப்பட்டுள்ளேன். மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி தொகை போல் சாதி ஒழிப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற 3 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களுக்கும் ஒரு நல்ல திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

மற்றொன்று கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளூவருக்கு சிலை அமைத்து பெருமைப்படுத்தியது போல் தந்தை பெரியாருக்கு சென்னையிலோ அல்லது மகாபலிபுரம், பழவேற்காடு, கிழக்கு கடற்கரை சாலையிலோ ஏதாவது ஒரு இடத்தில் 95 அடிக்கு குறையாத கல் சிலை அமைக்க வேண்டும். இந்த 2 கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சத்யராஜ்

உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழர்கள் தான். அந்த தமிழனுக்காக முதல்-அமைச்சர் குரல் கொடுப்பதில் என்ன தவறு. மலேசிய தமிழர்களுக்கு கலைஞர் குரல் கொடுத்ததை அந்த நாட்டு மந்திரி விமர்சிக்கிறார். கலைஞரை பார்த்து உங்கள் வேலையை பாருங்கள் என்கிறார். நான் அவருக்கு சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். கலைஞர் தமிழனை பாதுகாக்கும் வேலையை தான் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஒட்டு மொத்த தமிழர்களின் அடையாளமாக கலைஞர் விளங்குகிறார்.

அந்த தமிழர்களுக்கு ஏதாவது என்றால் கலைஞர் குரல் கொடுப்பார். தமிழன் ஒற்றுமைக்காக நாம் ஒன்று சேர வேண்டும். சுப.தமிழ்செல்வன் மறைவிற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி இரங்கல் கவிதை பாடியதற்காக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கண்ணீர் வந்தால் ஆட்சியை கலைப்பீர்களா? கண்ணீர் வந்தால் சிறையில் அடைப்பீர்களா? அப்படியென்றால் சிறையில் அடைத்துக்கொள்ளுங்கள்.

சேது சமுத்திரம் திட்டம் வந்தால் கப்பலோட்டிய தமிழன் போல் கலைஞருக்கும் பெயர் வந்து விடும் என்று நினைப்பவர்கள் தான் ராமர் பெயரை சொல்லி கூத்து அடிக்கிறார்கள். கடவுளை நம்பாதவர்களுக்கு வீரமணி, கலைஞர் இருக்கிறார். கடவுளை நம்புகிறவர்களுக்கு சுடலை மாடன், மதுரை வீரன் சாமிகள் இருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் யாருக்கும் ராமர் தேவையில்லை. சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

8 Comments:

Hariharan # 03985177737685368452 said...

மெய்யரசன் (சத்யராஜ்) இப்படி கருணாநிதியின் கொபசெ / அடிவருடியாக இருப்பது புரிகிறது. தனது / தன்மகனுடைய படங்களுக்கு கழக கண்மணிகள் ஓப்பனிங் ஆடியன்ஸாக வருவார்கள், கட் அவுட், பாலாபிசேகம் எல்லாம் நடத்துவார்கள் என்கிற நப்பாசை!

விஜய டி.ராஜேந்தர் போன்ற லட்சியம்!

ரெண்டு தமிழர்கள் வாழ்வு பொருளாதார ரீதியாக நிலைத்து மேம்படுகிற விஷயம்!

வாழ்க பகுத்தறிவு!
அது என்ன 95 அடி? வாஸ்து? இல்லை 100 அடிக்கு ஈவெராவினும் தகுதி தனக்கே இருப்பதாக கருணாநிதி /வீரமணி திங்கிங்?

Anonymous said...

Veeramani did not bring milk for his dog because he did not want to get it from a brahmin shop.kARUNANIDHI IS ECSTATIC ABOUT IT. hOW LONG THE LATE DR,. RAMAMURTHY WAS HIS PHYSICIAN FOR HIM , LET HIM SAY FRANKLY/.

Anonymous said...

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி. பெரியார் தனது நாய் குட்டிக்கு பால் வாங்கிவரும்படி வீரமணியிடம் கூறினார். கடைக்கு சென்ற வீரமணி பால் வாங்காமல் திரும்பி வருகிறார். பெரியார், ஏன் பால் வாங்க வில்லை என்று கேட்டதற்கு பிராமணர் ஓட்டலாக இருந்ததால் வாங்கவில்லை என்று வீரமணி கூறியுள்ளார்.

பெரியார் பிராமணர் ஓட்டலில் எதுவும் வாங்க கூடாது என்று கூறியதற்காக நாய்க் குட்டிக்கு கூட பால் வாங்காமல் வரும் அளவுக்கு அவ்வளவு பிடிவாதமாக கொள்கையை காப்பாற்றியவர் வீரமணி என்கிற போது புளகாங்கிதம் அடைந்தேன்.


But look at the CD that has songs
on Veeramani. You will find brahmin singers (Anuradha Sriram,
Mamadhi) in the list. So why did they choose brahmins for such songs. Could they not find a muslim or dalit singer for that.
Murasoli Maran married a brahmin
girl. His son Dayanidhi married
an Iyengar girl. Did Karunanidhi
feel sad about them.

வராகி said...

கருணாநிதியின் சாதி ஒழிப்பு அவர் அமைச்சர் ஒதுகிடில் சாதி வாரியாக கொடுத்த போதே தெரிந்துவிட்டது. சதியரசுகு படம் எதுவும் இல்லை அதன் இப்ப காசு வாங்கிட்டு மேடைல பேசறாரு.
- வராகி

Hariharan # 03985177737685368452 said...

எனது விரிவான பதில் தனிப்பதிவாக
இங்கே

வந்துட்டான்யா said...

அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை - நாய் குட்டிக்கு பிராமணர் ஹோட்டலில் பால் வாங்காமல் வந்த வீரமணியை பாராட்டுவதா? இல்லை இந்த செய்கையை பாராட்டிய கலைஞரை பாராட்டுவதா?

9, 10 அடி சிலை வைக்காமல் 95 அடி சிலை வைத்தால் தான் பகுத்தறிவு சிந்தனை வளரும் என்று கூறிய கலைஞரின் பகுத்தறிவை என்னவென்று கூறுவது?

உலகத்தமிழரின் தலைவராக கலைஞர் இருபதால் தான் மலேசியா தமிழர்களை பற்றி பேசுகிறாராம். சத்தியராஜ் சார், பகுத்தறிவு வேண்டாம் சார், அறிவு இருந்தா போறும் - உன்னொரு நாட்டு குடிமகனுக்காக நீங்க எப்படி சார் போராட முடியும்?
அடுத்த தடவை ஸ்டார் நைட் மலேசியாவில் நடந்தால் வசூல் நடக்கணுமே? அந்த கவலை உங்களுக்கு!!

கொஞ்சம் தமிழுணர்வை குறைச்சுகொங்க மற தமிழர்களே !!

கலைஞர் கைத்தடி said...

வீரமணியை டர் டர் ஆக்கிய கலைஞருக்கு நன்றி. அது என்ன 95 அடி சிலை? ஒரு வேலை இப்படி இருக்குமோ..பெரியார் வாழ்ந்தது 94+ வயதுவரை (September 17, 1879 - 24 December 1973) என்பதை காட்ட 95 அடி சிலை. இப்ப சரி.

Jahe said...

இது வரைக்கும் கேட்டதிலேயே இது தான் சூப்பர் மொக்கை நியூஸ்... செத்த கழுதைக்கு ஜாதகம் பர்ர்கிறாங்க கலைஞரும் ..வீரமணியும்...இதுக்கு ஜால்ரா நம்ம சத்யராஜ் ....

இப்போ இவங்க..ஜாதி வெறி பாக்குறாங்களா ? இல்ல பாப்பானுங்கள வெறுப்பு எத்துராங்களா ன்னு தெரியல...

சும்மா கெடந்த நாசுவன் பணங்கொட்டய சிரைச்சானான்... அது மாதிரி இல்ல இருக்கு இது...