பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 31, 2007

டாப் 5 பதிவுகள் முடிவுகள்

வழக்கம் போல் இந்த வருடமும் இட்லிவடை டாப் 5 பதிவுகள். ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி.


1. பினாத்தலார் - கணினியில் ஃப்ளாஷ் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தவர், சமீபங்களில் wifeology க்காக ட்யூஷன் எடுத்து, தேர்வுவைத்து, விடைத்தாளை அவுட் ஆக்கி, அனைவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியாதவர். சர்வே'சனுக்கு நிகராகப் பேசப்படுபவர். இவை எல்லாம் இருந்தால் கூட அரசியல் தமிழ்மணம் இந்த ஆண்டின் சிறந்த பதிவு. இந்த அண்டு இவருக்கு தான் முதலிடம் வாழ்த்துக்கள்

2. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் ஸ்ரீரங்கத்திலிருந்து மும்பைக்கு போய் அரிசி உப்புமா எப்படி செய்வது என்று பதிவு எழுதுபவர். ரஜினிக்கு சிவாஜியில் மேகப் போடுவது போல் இவர் செய்யும் பதார்த்தகங்களுக்கு இவர் போடும் மேகப்புக்கு(நிச்சயம் கொத்தமல்லி, மிளகாய் மிதக்கும்) நிறைய ரசிகர்கள் உண்டு. சமிபகாலமாக இவர் பதிவைவிட பின்னூட்டத்தில் நடக்கும் 20-20 மேட்ச் படிப்பதற்கு நன்னா இருக்கு. பெண்களிடம் இவர் ஒரு ஓட்டு கூட வாங்காமல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


3. காயத்ரி : பாலைத் திணை என்பதை
காதலும் காதல் சார்ந்த இடமும், கவிதைகளும் கவிதை சார்ந்த இடமும்,வலைப்பதிவுக் காதலர்களும் காதலர் சார்ந்த இடமும், என்றெல்லாம் இலக்கணத்தை மாற்றிய பதிவு.
ஒருவர்கூட, "கவிதை புரியவில்லையே" என்று சொன்னதில்லை என்பது கூடுதம் சிறப்பு. :)


4. ஆசிப் - அப்துல் ஜப்பாரின் மகன், சிறுகதை எழுத்தாளர், கவிப் பகைவன், இலக்கியவாதி, அமீரக தமிழர்களை ஒன்றிணைப்பது(!), வலைப்பதிவர் மாநாடு நடத்துவது என்று பல அவதாரங்கள் இருந்தாலும், பெண்ணியக் கருத்துகளுக்காக பெண்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பதிவாக திகழ்கிறது!.

ஐந்தாம் இடதுக்கு இருவர்:

5.1தருமி - நாத்திகப் பதிவுகளால் திரும்பிப் பார்க்கவைத்தவர், ஆன்மிகம், இறைவழிபாடு, ஜோசியம், மூடநம்பிக்கைகள் எல்லாவற்றையும் பதிவுலகத்தை நோக்கிக் கேள்விகேட்டுக்கொண்டிருந்தவர், சாலை வரத்து இடைஞ்சல்கள் முதல் இயந்தரமயமாக்கவேண்டிய மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுவரை அரசையும் கேள்விகேட்கும் அளவு வளர்ந்திருக்கிறார். எழுத்திற்காகவோ அல்லது எண்ணங்களை வலிக்காமல் சொல்லும் பாங்கிற்காகவோ ரசிகர்களை வைத்திருக்கும் மதுரைக்காரர்.

5.2 இலவசம் : மாசத்துக்கு 5-6 பதிவு எழுதினாலும் சளைக்காமல் எல்லோருக்கும்

வணக்கம்,

ஏன் இன்னும் இதை படிக்கலை ?
படிக்க: http://elavasam.blogspot.com/
வந்து கருத்து கந்தசாமிகளா ஆகுங்கப்பா!

அன்புடன்
இலவசம்


என்று எல்லோரையும் அன்புடன் பழிவாங்கும் மின்னஞ்சல். இவர் பதிவுகளைவிட இவர் மெயிலை படித்தவர்கள் தான் அதிகமாம். அப்படியா ?


எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

6 Comments:

நரேந்திரமோடி said...

மோ(ச)டி தேர்தல் மாதிரி தெரியுது. இலவசமெல்லாம் டாப் 5லே வந்தது பார்த்தா சாதிப்பாசம் தேர்தல்லே முன்னுக்கு நின்னது தெரியுது.

யோசிப்பவர் said...

இவை வாக்காளர் தேர்வா? இல்லை இட்லிவடையின் சொந்த தேர்வா?

ஹரன்பிரசன்னா said...

இந்த ஐந்து பதிவர்களும் 'ஏதோ விதி நடந்துட்டு' என்று மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டுகிறேன்.

Anonymous said...

நல்ல காலம், நாம ஓட்டு போட்டது ஜெயிச்சவங்களுக்குத்தான் போச்சு...
தோத்தவங்களுக்கு ஓட்டு போட்டிருந்த கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கும். :)))

கூடவே ஒவ்வொருத்தரும் எவ்வளவு வாக்குகள் வாங்கினாங்க எல்லாம் சொன்னா இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும், ஜஸ்ட் மிஸ் பண்ணவங்க கொஞ்சம் உற்சாகமடையவும் உதவியா இருக்குமே :)

IdlyVadai said...

நரேந்திர மோடி, 14 சென்னை வரும் போது இது பற்றி பேசலாம்.

யோசிப்பவர் - இந்த சந்தேகம் எனக்கும் இருக்கு

ஹரன்பிரசன்னா நடத்துங்க நடத்துங்க

ஸ்ரீகாந்த் யார் எவ்வளவு ஓட்டு, யார் யாருக்கு போட்டாங்க என்பது எப்போதும் இட்லிவடையில் வெளிவராது.

Boston Bala said...

:)