பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 06, 2007

சென்செக்ஸ் குறியீடு மீண்டும் 20Kயை எட்டியது

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் 20 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. இதே போல் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடும் இன்று 6 ஆயிரம் புள்ளிகளை மீண்டும் தாண்டியது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதல் 5 நிமிடங்களில் சென்செக்ஸ் 326 புள்ளிகள் அதிகரித்தது. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

சென்செக்ஸ் குறியீடு கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. பின்னர் வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி 18,182 புள்ளிகளாக குறைந்தது.

எனினும் சர்வதேச அளவில் இன்று பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக இன்று மீண்டும் 20 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. எனினும் வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் சற்று குறைந்து 19,940 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி குறியீடு 87 புள்ளிகள் உயர்ந்து 6027 புள்ளிகளாக உள்ளது.

0 Comments: