பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 06, 2007

ஜெயா டிவியின் 2 புதிய சேனல்கள்

ஜெயா டிவியின் இரண்டு புதிய சேனல்கள் ஒளிபரப்பு இன்று தொடங்கியது. ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் ஆகிய சேனல்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை தொடங்கி வைத்தார்.

புதிய சேனல்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"1999ம் ஆண்டு உங்கள் நல்லாசியுடன் ஜெயா டிவி தொடங்கப்பட்டது. நீங்கள் அளித்த அமோக ஆதரவினால் ஜெயா டிவி பெரும் அளவில் வளர்ச்சி அடைந்து வெற்றிகரமாக 8 ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போது 9வது ஆண்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நல்ல நேரத்தில் "ஜெயா பிளஸ்' என்ற புதிய டிவி சேனலை தொடங்கி இருக்கிறார்கள். ஜெயா பிளஸ் புதிய டிவி சேனலுக்கு நீங்கள் உங்கள் மனப்பூர்வமான ஆதரவை வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஜெயா பிளஸ் மேலும் மேலும் வளர்ச்சி அடையவும், உலகம் முழுவதும் பரவவும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் உங்களுக்கு மேலும், பல விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக "ஜெயா மேக்ஸ்' என்ற மற்றும் ஒரு தொலைக்காட்சி சேனல் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை நீங்கள் ஜெயா டிவிக்கு அளித்து வந்துள்ள ஆதரவைப் போலவே, ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிக்கும் உங்கள் மேலான ஆதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி மேலும் மேலும் வளர்ச்சியடைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
செய்தி: மாலைசுடர்

3 Comments:

cgs said...

இருக்கிர குப்பை பத்தாது போல. இன்னும் என்ன காட்டபோறாங்க புது சா?சினிமா சினிமா சினிமா...

Sunny said...

புது சானி?

Jahe said...

இப்போ இருக்கிற ஜெய டிவி யே..சப்பை சேனல்.. உருப்படியா 2 ப்ரோக்ராம் கூட தேறாது..இதில இன்னும் அரசியல் நியூஸ் போட மற்றும்...மைனாரிட்டி தி முக ன்னு..இன்னும் 2 சேனல் ள்ள சொல்ல போறாங்களாம்..

வெறி புடிச்ச கொரங்கு.... பேன் பாக்குறேன் ன்னு முடிய பிச்சி போட்ட கதை தான்..