பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 04, 2007

ஆன்மிக செய்திகள்

பூமி பூஜை:
திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் தி.மு.க., இளைஞரணி மாநாட்டிற்க்கான பந்தலமைக்கும் பணி பூமி பூனஜயுடன் துவங்கியது. பந்தலமைக்கும் பணியை தி.மு.க., துணை பொது‌ செயலாளரும் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருமான ஸ்டாலின் பார்வையிட்டார்.

என்ன பிரசாதம் கொடுத்தார்கள் என்ற தகவல் இல்லை.

யாகம்
சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி திருக்கோயிலில் வரும் 7ம் தேதி தன்வந்திரி ஹோமமும், 9ம் தேதி லட்சுமி குபேர தனாகர்ஷண ஹோமும் நடைபெறுகிறது. பக்த்தர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

இன்று ஒரு தகவல்:
கண்ணாடி சுத்தமாக இருக்கும்போது, அதன் முன் நாம் நின்றால் நம்மை அப்படியே பிரதிபலிக்கும். அதில் அழுக்கு படர்ந்திருக்கும்போது, பிம்பம் சரியாக தெரியாது. மனிதர்களின் மனமும் கண்ணாடி போன்றதே. மனம் தீய குணங்கள் எதுவுமின்றி சுத்தமாக இருக்கும்போது இறைவன் குறித்த எண்ணங்கள் பிரதிபலிக்கும். அதேமனம் அழுக்கடைந்திருக்கும்போது, தீய சிந்தனைகள் மட்டும் இருக்கும். ஆகவே, மனதை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

0 Comments: