பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 11, 2007

கேப்டனை வளர்க்கும் திமுக

இன்று Deccan Chronicleல் வந்த செய்தி:

"Reacting to the DMK president and CM M.Karunanidhi's call to his party men for the youth to ensure the party's growth, film star and DMDK leader Vijayakath demamded to know on Saturday whether the CM would be willing to replace the dozen old ministers in his cabinet with young blood.


இன்று இதற்கு திமுகவிலிருந்து வந்த ரியாக்ஷன் கீழே...

நாட்டில் புதுசு, புதுசாக எத்தனையோ கட்சிகள் தோன்றுகின்றன. அந்தக் கட்சிகளுக்கு கொள்கையோ, லட்சியங்களோ, கோட்பாடு களோ கிடையாது. அவர்களின் ஒரே குறிக்கோள் அடுத்த முதல்வராக தான் வர வேண்டும் என்பதுதான். அதற்கு தி.மு.க. விதிவிலக்காக வந்து உள்ளது. - ஸ்டாலின்


தி.மு.க. பதவிக்காக உரு வாக்கப்பட்ட இயக்கமல்ல. சிலர் கலைஞர் பதவிக்காகவும், அவரது குடும்பத்தினரின் பதவிக்காகவும் உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று பேசுகிறார்கள். அவர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்குள் நான் போக விரும்பவில்லை.

இந்த இயக்கத்தை வீழ்த்துவேன் என்று தலைநிமிர்ந்து ஒருவர் பேசுகிறார். அவர் யார்ப அவர் தமிழக மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்ப அவர்களை அனுமதித்தால் தமிழகம் பேரழிவை சந்திக்கும். தமிழகத்தின் உரிமை பறிபோய், வளர்ச்சி பாதிக்கப்படும். ஒருவர் அவரது மச்சானுக்கும், மனைவிக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கி விட்டு கலைஞர் குடும்ப அரசியல் நடத்துவதாக பேசுகிறார். இதுபற்றி பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது. நமது மாவட்டத்தில் அந்த இயக்கத்தை வீழ்த்திக்காட்ட வேண்டும். அவர்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. - வீரபாண்டி ஆறுமுகம்

2 Comments:

Anonymous said...

கேப்டன் கேட்டதில் எந்த தவறும் இல்லை - ஒவ்வொரு தி.மு.க காரனிடமும் இருக்கும் நியாயமான கேள்வி தான் அது. அதற்கு பதில் சொல்ல துப்பு இல்லாமல் ஸ்டாலினும் வீரபாண்டியாரும் இந்த மாதிரி பதில் சொல்லி இருக்காங்க! இதில் என்ன காமடி என்றால் கேப்டன் குடும்ப அரசியல் பற்றி பேசவே இல்லை! ஆனால் அதற்கு வீரபாண்டியார் பதில் வேறு கூறியிருக்கிறார்! முதல் அமைச்சர் தொடங்கி கடைசி அமைச்சர் வரை ஊழல் பேர்வழிகள் தான் - அமைச்சர்களை மாற்றினால் போது, இந்த ஆட்சியையும் மாற்ற வேண்டும்.

Tamil தமிழ்மணி said...

முகவரி காட்டாத முகமே ...........
கலைஞர் ஆட்சி பற்றி உங்களுக்கு என்ன தரயும்......
தமிழ் நாடு எந்த ஆட்சிஎல் முன்னற்ற்ம் கண்டது தெர்யுமா ?

உங்களை போன்ற ஆட்கள் இருப்பதால் தான் ஐந்து வருடங்களுக் ஊரு முறை வளர்சிலபின் தங்குகிறது