பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 25, 2007

நியூஸ் பிட்ஸ்

* பாமக மாநில துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன், தன் ஆதரவாளர் களுடன் அக்கட்சியிலிருந்து விலகி இன்று விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தார்.
(இதனால் பாமக வளர்ந்துள்ளதா ? அல்லது தேமுதிக வளந்துள்ளதா ? )

* மருத்துவ படிப்புக்கான காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
(பிரதமர் அலுவலகத்தில் குப்பை தொட்டி இருக்கிறதா ? )

* அதிருப்தி தலைவர்கள் போர்க்கொடி - தேவேகவுடா கட்சி 2 ஆக உடைகிறது; பா.ஜனதா- காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவல் ( இன்னும் இது நடக்கலையா ? )

* நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்க, நிஷிகாந்த் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளார். ( வாரிசு அரசியல் மாதிரி வாரிசு சினிமா. ஆளவந்தாளுக்கு வாழ்த்துக்கள்! )

6 Comments:

மாயவரத்தான்... said...

மருத்துவர் ஙொய்யாவுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தானா? இல்லாங்காட்டி பொதுக்குழு முடிவு பண்ணிச்சுன்னு சொல்லி மாநில துணைத் தலைவரா ஆக்கிடலாம். ஓ.. அந்த மாதிரி பசங்க இருந்தா மந்திரியா மட்டும் தான் ஆக்குறதுக்கு பொதுக்குழு பர்மிஷன் கொடுக்குமோ?!

வால் பையன் said...

//இதனால் பாமக வளர்ந்துள்ளதா ? அல்லது தேமுதிக வளந்துள்ளதா ? //
மிக மிக யோசிக்க வேண்டிய கேள்வி,
பா.ம.க வின் ஒவொரு நாள் அறிக்கையும் எனக்கு ஏற்படுத்திய குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல,
தனி தமிழ் நாடு என்னால் மறக்க முடியாத ஒன்று

//மருத்துவ படிப்புக்கான காலத்தை நீட்டிக்கக் கூடாது //
காலத்தை குறைக்க,நீடிக்க எவ்வளவு உரிமை அரசுக்கு உள்ளதோ,
அதே அளவு அவர்கள், படிக்கும் மாணவர்களின் உரிமையை யோசிக்க வேண்டும்,
சரி இது தேவை என்றாலும், பாரத நாட்டில் கற்று விட்டு வெளி நாட்டில் வேலை செய்யும் கணினி நண்பர்களுக்கு என்ன தண்டனை,
அவர்கள் சேவை தேவையில்லை என்று அர்த்தமா?
அல்லது கிடைத்தவரை லாபம் பார்க்கும் நோக்கமா ?

ஸ்ருதி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

நல்ல கலை குடும்பத்தில் இருந்து ஒருவர் வந்தால் வரவேற்கலப்ப!

வால்பையன்

Anonymous said...

பிரதமர் அலுவலகத்தில் குப்பை தொட்டி இருக்கிறதா

There are many. One is exclusively reserved for latters and faxes from M.Karunanidhi who happens to be the President of DMK and CM of Tamilnadu.

NINAIVELLAM said...

ஏன் ஒரு வருடம் நீட்டிக்கக் கூடாது. எங்களைப்போன்ற கிராம மக்களை உறிஞ்சி நாங்கள் சிந்தும் வியர்வையில்தானே அந்த நாய்கள் மருத்துவம் படிக்கின்றன.

NINAIVELLAM said...

ஏன் ஒரு வருடம் நீட்டிக்கக் கூடாது. எங்களைப்போன்ற கிராம மக்களை உறிஞ்சி நாங்கள் சிந்தும் வியர்வையில்தானே அந்த நாய்கள் மருத்துவம் படிக்கின்றன.

வால் பையன் said...

//நாங்கள் சிந்தும் வியர்வையில்தானே அந்த நாய்கள் மருத்துவம் படிக்கின்றன//
மன்னிக்க வேண்டும் ''நினைவெல்லாம்''
கிராமத்திற்கு இப்பொழுது மிக தேவையானது விவசாய புரட்சி,
விவசாயம் படிக்கும் மாணவர்களையும், பொறியியல் படிக்கும் மாணவர்களையும்
ஒரு வருடம் கிராம புற மேம்பட்டு திட்டத்திற்கு அனுப்பலாமே,
மருத்துவம் மட்டுமே தேவை என்று எப்படி சொல்கிறிர்கள்

www.valpaiyan.blogspot.com

வால்பையன்