பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 02, 2007

கலைஞர் வாழ்த்து - வசிஷ்டரின் வாழ்த்து - ராமதாஸ் பெருமிதம்

2011ம் ஆண்டு தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும் என்பது வெற்று முழக்கம் அல்ல. திமுக, அதிமுக இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி கூட்டணி ஆட்சி அமைப்பதில் மிகவும் உறுதி யாக இருப்பதாக பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

முதலமைச்சர் கருணாநிதி எந்த நோக்கத்தில் சொல்லி இருந்தாலும் அவருடைய வார்த்தை வசிஷ்டரின் வாழ்த்தாக தாம் ஏற்றுக் கொள்வ தாகவும் அவர் குறிப்பிட்டார். 2009ல் நடைபெறும் நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தான் பாமக இடம் பெறும் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறிய தாவது:
பாமகவுக்கு என்று தனி லட்சியம், கொள்கை, இலக்குகள், தொலை நோக்கு பார்வைகள், சரியான செயல் திட்டங்கள் உள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஊட்டி பிரகடனத்தில் இதனை தெளிவுப் படுத்தியிருந்தோம்.

2020ம் ஆண்டு சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தமிழர்களும், தமிழகமும் எத்தகைய நிலையை எட்டவேண்டும் என்று பாமக விரும்பு வதை ஒரு வரைவு திட்டமாக வெளி யிடுவோம் என்றும் இனி பாமகவின் அரசியல் நடவடிக்கை, பயணம் அதை நோக்கியே அமையும் என்றும் தெளி வுப்படுத்தியிருந்தோம்.

அண்மையில் ஆங்கிலப் பத்திரிகை அலுவலகம் ஒன்று என்னை அழைத்து இருந்தது. அங்கு ஆசிரியர் குழுவினர் மற்றும் செய்தியாளர் களுடன் கலந்துரையாடும்போது 2011 ம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பாமகவின் அரசியல் பயணம் இருக்கும் என்று தெரிவித்தேன்.

இந்த அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்கும் விருப்பமும், லட்சியமும் இருக்கும். சமீபத்தில் கட்சி தொடங்கியவர்கள் கூட ஆட்சியைப் பிடிப்போம் என்று பேசி வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர்களும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதைப்போலவே நான் 2011ம் ஆண்டு பாமக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்தேன்.

அரசியல் கட்சிகளின் இந்த விருப் பம் மற்றும் லட்சியம் குறித்து அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்கு மிக நன்றாகத் தெரியும். அண்மையில் மதுரையில் செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர், "2011ம் ஆண்டு பாமக ஆட்சிக்கு வரப்போகிறது; அப்போது காவல் துறையை அவர்கள் செயல்பட வைக் கட்டும்; முன்கூட்டியே அட்வான்ஸ் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

அவர் எத்தகைய எண்ணத்தில், நோக்கத்தில் கூறியிருந்தாலும், அவரு டைய இந்தக் கருத்தை வாழ்த்துக் களாகஅதாவது வசிஷ்டர் வாயால் கிடைத்த வாழ்த்துபோல நாங்கள் அதை எடுத்துக் கொள்கிறோம்.

ஆட்சியைப் பிடிப்போம், ஆட்சிக்கு நிச்சயம் வருவோம் என்று நாங்கள் சொல்வது வெற்று முழக்கம் அல்ல. 2020ம் ஆண்டு தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு செயல்திட்டங்களை நாங் கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

தொழில் வளர்ச்சி, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி, இளைஞர் களின் மறுமலர்ச்சி உள்ளிட்ட எங்க ளின் திட்டங்களுக்கு கல்வியாளர் களும், அறிஞர்களும், நிபுணர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. எனவே, நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.

திமுகவின் முப்பெரும் தலைவர் களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி கடந்த ஆகஸ்ட் மாதம் பேசும்போது, இனி கூட்டணியே தேவையில்லை என்ற அளவிற்கு கருத்து தெரிவித்த துடன், இனி ஒரு தேர்தல் வந்தால் யார் தயவும் இன்றி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களில் திமுக வெற்றி பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் கருணாநிதியும் அவருடைய கருத்தை ஆதரிப்பது போல, "மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடிபெறும்' என்ற பழமொழியைக் கூறி, நம்மை மதிக்காதவர்களுடன் எப்படி தோழமைக் கொள்ள முடியும்? என்று தெரிவித்துள்ளார்.


அதில் எந்தத் தவறும் இல்லை. அது திமுகவின் நிலைப்பாடு. அதுபோல 2011ம் ஆண்டு பாமக ஆட்சியைப் பிடிக்கும் என்பது எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அரசு விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவர் கலந்துகொண்ட கூட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டதா?

காவல் துறையினரின் முன் அனுமதி பெறப் பட்டதா? அவரது பயணத்திட்டம் குறித்து காவல்துறையினரிடம் அளிக் கப்பட்டதா? என்பது பற்றியெல்லாம் விசாரணை வரம்பு நிர்ணயித் துள்ளனர்

இந்த வரம்புகளை நீக்க வேண் டும்.கிருஷ்ணசாமியின் பாதுகாப்பு சம்பந்தமாக காவல் துறையினரின் கவனக்குறைவு பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டும். ஜனாதிபதி , பிரதமர், முதல்வர் ஆகியோரின் பயணத் திட்டங்களில் தான் எந்த வழியாக அவர்கள் செல்கிறார்கள் என்பது வரைமுறைப் படுத்தப்படும். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் பயணத் திட்டங்கள் எல்லாவற்றையும் காவல்துறை யினரிடம் தெரிவிக்க வேண்டிய தில்லை.

கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திடீர் திடீர் என பயணத் திட்டம் மாற்றப்படும். எனவே, இந்த விசாரணை வரம்பை மாற்ற வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை "தமிழ்நாடு உயர்நீதி மன்றம் சென்னை', "தமிழ்நாடு உயர்நீதி மன்றம்மதுரை' என்று மாற்றம் செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

அரியலூர் மாவட்டம் தாமதமின்றி தனி மாவட்டமாக செயல்பட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ஆட்சியைப் பிடிப்போம் என்று பலமுறை காங்கிரசார் கூறியும் அதற்கு பதிலளிக்காத முதலமைச்சர், நாங்கள் அவ்வாறு கூறியபோது கருத்து தெரி வித்திருப்பது நிச்சயம் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் கருதியிருக்கலாம்.

தென்மாவட்டங்களில் பாமக வளர்ந்து வருகிறது. உதாரணமாக நெல்லை மாவட்டம் திசையன்விளை யில் நடைபெற்ற பாமக செயல்வீரர்கள் கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிக மான பெண்கள் கலந்து கொண்டனர்.

தமிழத்தில் சட்டம்ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை பத்திரிகையாளர் கள்தான் சொல்ல வேண்டும். 2011ம் ஆண்டு திமுக, அதிமுக இல்லாத அணியை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் உங்களுக்கு (நிருபர்களுக்கு) எந்த சந்தேகமும் வேண்டாம்.

2009ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில்தான் பாமக இடம் பெறும். இனி எப்போதும் பிஜேபியுடன் கூட்டணி கிடையாது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

3 Comments:

Anonymous said...

Who is this Vasishtar? Is he aarya or Dravida? Mr. MK and Mr Maram vetti should clarify. Anyway, MK has been given a new title.

suka said...

வசிஷ்டர் என்ற வார்த்தையில் வட மொழி எழுத்து 'ஷ்' உள்ளதே.
மருத்துவர் ஐயா இதை எப்படி உச்சரித்தார்?

Hariharan # 03985177737685368452 said...

கருணாநிதியுடன் போய் வசிஷ்டரை ஒப்பிட்டு திட்டமிட்டு வசிஷ்டரை இழிவு செய்த - ஷேம் ஷேம் பப்பி ஷேம் சைடு கோல் போடும்-மரவெட்டி-தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாஸைக் கண்டிக்கிறேன்!

(தமிழகத்தில் அணையாது எரியும் பகுத்தறிவு நெருப்பில் கொஞ்சம் காய்ந்த)வாழைமட்டைத் தமிழன்!