பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 20, 2007

ரஜினி பிறந்த நாளில் பில்லா படம் ரிலீஸ

ரஜினி இரு வேடங்களில் நடித்து 1979-ல் ரிலீசாகி பரபரப்பாக ஓடிய படம் `பில்லா'. இப்படம் அஜீத் நடிக்க மீண்டும் தயாராகிறது. ரஜினி பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆகுது !
`கிரீடம்' படத்துக்கு பின் `பில்லா' ரீமேக்கில் நடிக்க விரும்பினார். ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று அனுமதி கேட்டார். ரஜினி சம்மதம் தெரிவித்த தோடு அவரை வாழ்த்தி புத்தகமும் பரிசாக அளித்தார். பிறகு படப்பிடிப்புதொடக்க விழா பூஜையிலும் பங்கேற்றார்.

படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்தது. மலேசி யாவில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜீத்தை வித்தியாசமான தோற்றத்தில் நேர்த்தியாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விஷ்ணு வர்த்தன். இவர் ஏற்கனவே `பட்டியல்', `அறிந்தும் அறியாமலும்' உள் ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர்.

அஜீத் ஜோடியாக, நயன்தாரா நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் ஆங்கில படநாயகி சாயலில் நயன்தாரா இறுக்கமான உடை துப்பாக்கி சகிதங்களோடு தோன்றுகிறார். இன்னொரு நாயகியாக நமீதா நடித்துள் ளார்.

கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவன் இறந்து விட அவன் தோற்றத்தில் இருக்கும் இன்னொருவனை கொள்ளையனாக மாற்றி அவ்விடத்துக்குள் போலீஸ் அனுப்பி கும்பலை கூண் டோடு பிடிப்பது கதை.

பழைய பில்லாவில் உள்ள சில காட்சிகள் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப விறுவிறுப்பாக மாற்றப்பட்டு உள்ளன. `மைநேம் ஸ் பில்லா' என்ற பாடலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

`டப்பிங் மற்றும் இசை சேர்ப்பு பணிகள் தற் போது நடந்து வருகின்றன. இப்படத்தின் டிரைலர் காட்சி சமீபத்தில் ரஜினிக்காக ஏவி.எம். ஸ்டுடியோவில் திரையிட்டு காட்டப் பட்டது. அதை பார்த்த ரஜினி அஜீத்தையும் விஷ்ணு வர்த்தனையும் வெகுவாக பாராட்டினார்.

பாடல் கேசட் வெளியீட்டு விழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது. படத்தை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ரிலீஸ் செய்ய அஜீத் விரும்பினார். இயக்குனர், தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக்கொண்டனர் இதையடுத்து ரஜினி பிறந்த நாளில் `பில்லா' ரிலீசாகிறது.

4 Comments:

இஞ்சிமொரப்பா said...

பாவம் தல...ரொம்ப நாளா ஒண்ணும் உருப்படியா அமையல ( இடையில் ஒரு "வரலாறு" தவிர). பெரிய தல யோட "பில்லா" வாவது பாஸ்மார்க் கொடுக்குதா பார்ப்போம்.

மகேஷ் said...

அந்த பிட் வரும் பாடல் - வெள்ளி மலரே
படம் - ஜோடி

Anonymous said...

idly vadai.. murugan idly kadai-la idly vadai saptrukiyabaa?

Jahe said...

தலை..வரலாறுல..தமுக்கா நடிச்சி..ஒப்பேதிடுச்சி... இந்த படமாவது ... வெற்றி அடையட்டும்...

பி.கு : தமுக்கு ன்னா ... திரு நங்கை / அரவாணி.. என்று அர்த்தம்..