பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 19, 2007

எடியூரப்பாவின் நம்பிக்கை

மர்மமா , திர்ல்லரா, காமெடியா என்று வகைபடுத்த முடியாத கர்நாடக அரசியல்.


கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. அரசு இன்று பெரும்பான்மையை நிருப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் 12 நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை ஏற்று கையெழுத்து இட்டால்தான், அரசில் பங்கேற்கவும், பெரும்பான்மை நிரூபிக்கவும் ஆதரவு தருவதாக கூறியது. ஆனால் எடியூரப்பா முதலில் பெரும்பான்மையை நிரூபித்தபின், நிபந்தனைகளை ஏற்பதாக கூறினார். இதனை ஏற்காத மதசார்பற்ற ஜனதா தளம் தனது ஆதரவு அளிப்தில்லை என அக்கட்சியின் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ( இவர் நம்பிக்கையை பாராட்ட வேண்டும். )

முக்கிய இலாகாக்களை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்ற மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கோரிக்கையை ஏற்க பிஜேபி மறுத்து விட்டது. மேலும் அக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட வேண்டும் என்ற கோரிக்கையையும் பிஜேபி ஏற்கவில்லை.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்வார் என பா.ஜ. கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளது. பா.ஜ. கட்சியினர் எடியூரப்பா தலைமையில் கவர்னரை சந்திக்க இருக்கின்றனர்.கடைசி தகவல்: சட்டசபை வாசலுக்கு அடிக்கடி வந்து குமாரசாமி வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாராம் எடியூரப்ப்பா.
கெளடா-எதியூரப்பாவின் இந்த அரசியல் விளையாட்டை சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்துள்ளனர்.

வாசகர்களூக்கு ஒரு கேள்வி யார் புத்திசாலி
1. எடியூரப்ப்பா
2. குமாரசாமி
3. காங்கிரஸ்

22 Comments:

Anonymous said...

aiyya.. neengaL kELviya maathi ezhuthunga..."yaar muttaaL?"-nnu. you can include the options 1 "Public" 2. Public 3. Public...

Prakash G.R. said...

யாரு புத்திசாலிங்கறது எனக்கு புரியல. ஆனா இவங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தான் அதிபுத்திசாலிங்க ;-)

cgs said...

இட்லிவடை,இதில் என்ன சந்தேகம்?நிச்சயமாக..கண்டிப்பாக...பொருங்க இன்னும் ஒரு நிமிடத்தில் ..

இதோ ரெண்டு நிமிடத்தில்...

அதாவது, வந்து...
அப்புறம்....இதோ சொன்னே...சொல்றேனூ..

இதுக்குமேலே நான் சொல்லவேண்டுமா விடையை?

முத்துகுமரன் said...

//வாசகர்களூக்கு ஒரு கேள்வி யார் புத்திசாலி//

தேவ கவுடா!

Anonymous said...

தேவகவுடா தான் புத்திசாலி.

மணியன் said...

புத்திசாலி யார் என்று தெரியவில்லை, மடையர்கள் மக்களே என இந்திய ஜனநாயகம் மீண்டும் நிரூபித்துள்ளது :(

Anonymous said...

Karnataka Chief Minister Yeddyurappa resigns.

Source
http://www.rediff.com/news/2007/nov/19kgovt5.htm

Anonymous said...

பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எதியூரப்பா ராஜினாமா செய்கிறார். இதையடுத்து பாஜக கூட்டணி ஆட்சி 2 வாரங்களில் கவிழ்கிறது.

இன்று கர்நாடக சட்டசபையில் முதல்வர் எதியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்குமாறு மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு அக் கட்சியின் தலைவர் தேவெ கெளடா உத்தரவிட்டார்.

இதையடுத்து எதியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எதியூரப்பா தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று காலை சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

ஆனால், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அவைக்கே வரவில்லை. இருப்பினும் நம்பிக்கை தீர்மானம் வெல்லும் என பிற்பகல் வரை எதியூரப்பா கூறிக் கொண்டிருந்தார். ஆட்சியைக் காக்க கெளடா தரப்பிடம் கடைசி நிமிடம் வரை பேச்சு நடத்தினார்.

ஆனால், கெளடா தனது நிலையில் தீவிரமாக இருந்ததால் வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்ய எதியூரப்பா முடிவு செய்தார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க அவர் செல்கிறார்.

குமாரசாமியின் முதல்வர் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியை தொடர்வதற்கு சிக்கலை உருவாக்கினார் கெளடா. தனது மகனே ஆட்சியில் தொடரும் வகையில் காங்கிரசுடன் கைகோர்க்க முயன்றார். ஆனால், கெளடா-குமாரசாமியை ஒதுக்கிவிட்டு ஜனதா தளத்தின் பிற தலைவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர காங்கிரஸ் முயன்றது.

இதையடுத்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவின் எதியூரப்பா முதல்வரானார்.

ஆனால், இந்தக் கூட்டணி ஆட்சியை நடத்துவதற்கு 12 விதிமுறைகளை வகுத்த கெளடா அது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் உருவாக்கி அதில் பாஜக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் பெங்களூர் நகர மேம்பாட்டுத்துறையையும் கனிம வளத்துறையையும் தனது கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என கோரினார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பாஜக கையெழுத்திடாமல் இருந்து வந்தது.

இதையடுத்து நேற்று வரை (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு கெடு விதித்தார் கெளடா. ஆனால், அதையும் பாஜக கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட முடியாது என எதியூரப்பா கூறினார். அப்படியென்றால் ஆதரவு வாபஸ் என கெளடா அறிவித்தார்.

இதையடுத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக எதியூரப்பா கூறி வந்தார். ஆனால், இதை ஏற்க கெளடா ஏற்கவில்லை.

இந் நிலையில் தனது கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கெளடா நேற்று அவசரமாகக் கூட்டினார். இதையடுத்து கெளடாவை ஒதுக்கிவிட்டு அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியை சந்தித்துப் பேசினார் எதியூரப்பா. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் தோல்வியே ஏற்பட்டது.

இந் நிலையில் கவர்னர் ராமேஸ்வர் தாக்கூரின் உத்தரவுப்படி இன்று (19ம் தேதி) சட்டமன்றத்தில் எதியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

ஆனால், இன்று காலை கெளடா தலைமையில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் எதியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு தனது எம்எல்ஏக்களுக்கு கெளடா உத்தரவிட்டார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கெளடாவை சமாதானப்படுத்தும் கடைசி கட்ட முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது. ஆனால் அந்த முயற்சிகள் வெல்லவில்லை.

இந் நிலையில் சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆஜராகிவிட்ட நிலையில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் வெகு நேரம் வரை வரவில்லை.

நீண்ட நேரத்துக்குப் பின் அவர்கள் அவைக்கு வந்ததையடுத்து நம்பிக்கை தீர்மானத்தை எதியூரப்பா முன் மொழிந்தார். இதன் மீது விவாதம் தொடங்கியது. ஆனால், தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்வதாக எதியூரப்பா அறிவித்தார்.

இதையடுத்து கவர்னர் ராமேஸ்வர் தாக்கூரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கக் கிளம்பினார்.

இதைத் தொடர்ந்து அரசை கலைத்துவிட்டு மீண்டும் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்வார்.

Anonymous said...

Mr.Yediurappa is waiting another call from Mr Deva gowda to form the govt with the support of JDS with in a day or two.

paddhusjottings said...

தேவேகவுடா- ஆட்சியைக்கவுடா!

புத்திசாலி யாரோ தெரியாது மக்கள்தான் சரியான மக்குகள். தென்னகத்தில் முதல் முதலாக பாஜக ஆட்சி என்று காலரைத் க்கிவிட்டுக்கொண்ட நேரம்கூட ஆட்சியில் இருக்க முடியவில்லை. இப்போது இந்தியா அரசியல் வரலாற்றில் முதல் முதலாக ஏழே நாட்களில் கவிழ்ந்த ஆட்சி என்று பெருமைப்படலாம்- முடிந்தால் கின்னஸ் ரிகார்ட் கூடப் படைக்கலாம்.

இந்த ஒருவார ஆட்சிக்கு எத்தனை அமர்க்களம்?கவர்னர் முன் அப்புறம் ஜனாதிபதி முன் என்று எம். எல். ஏக்களை கொண்டு அணிவகுததென்ன? மத்திய அரசின் மீது பாய்ந்த பாய்ச்சலென்ன- ஆடிய ஆட்டம்தான் என்ன? இத்தனைக்கும் பின்னணியில் பாஜகக்குப்பினால் கத்தியை வைத்துக்கொண்டு கவுடா மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
இப்போதைக்கு அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது- ஜனதாதலத்திற்குள்ளேயே ஒரு பிரிவு எங்கே காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து விடுவார்களோ தன் மகன் குமாரசாமிக்கு பதவி இல்லாமல் போய்விடுமோ என்று பாஜக விற்கு ஆசைவார்த்தை காட்டினார். விவஸ்தை கெட்ட பாஜ கவும் வாலைச் சுருட்டிக்கொண்டு அத்தனை அவமானங்களுக்குப் பின்னரும் கவுடாவின் பின்னால் ஓடியது. இன்று வைத்து விட்டார்கள் சரியான ஆப்பு! இப்போது புலம்பி என்ன பயன்? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமா? அடுத்தபடியாக காங்கிரசிடம் பேசப்போகிறது இந்த ஜனதாதளம்! சிலருக்கு சொன்னாலும் தெரியாது பட்டாலும் புரியாது! அந்த ரகத்தைச் சேர்ந்த காங்கிரசும் கவுடாவிற்குப் பின்னால் ஓடக்கூடும்/
இந்த அரசியலில் என்ன வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! இப்போதுமறு தேர்தல் வந்தால் ஜனதாதளம் (S- சுயநல ம்) ஒரு சீட்டைக்கூடப்பெறாது

டி.எஸ்.பதமநாபன்

Posted by paddhusjottings at 5:22

Sriram said...

இரண்டு, மூன்று மாதங்களாவது குடுமி பிடி சண்டை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி சினிமா, ஒரே வாரத்தில் கிளைமாக்ஸ் சீனுக்கு வந்து விட்டது!

நன்றி.
ஸ்ரீராம்

Anonymous said...

* The presence of Gujarat Chief Minister Narendra Modi at the swearing-in ceremony has irked the JDS no end. The party says that they had given support to the BJP on the assurance that it would uphold secular values. According to the JDS, the presence of Modi gave an extremely communal colour to the coalition.
* Rashtriya Swayamsevak Sangh activists from across the country too were present in large numbers at the swearing in ceremony, thus making it an RSS show. The JDS was irritated by the saffron show, as it gave the impression that they were supporting a communal party.
* JDS chief H D Deve Gowda was also upset when senior BJP leaders, who were in Bangalore for the swearing-in ceremony, did not meet him.
* Yeddyurappa and his Cabinet took several policy decisions without the JDS. The JDS was upset that decisions were being taken before they joined the government.
* The BJP was not in favour of letting Kumaraswamy have a major say in the decision-making while the JDS wanted him to be the chairperson of the Karnataka Development Front (BJP-JDS coalition).

Kamal said...

பா.ஜ.க ஆட்சி கோயிந்தா!!!!!!!!!
மானம் போச்சு மரியாதை போச்சு!!!
எல்லாம் போச்சு....கேவலம் கேவலம்

வசந்தம் ரவி said...

வெறும் அரசியல் பதிவுகள் மட்டும் நம்பி இட்லி வடை ஓடிக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது............சுவாரஸ்யமே இல்ல

Vino said...

I guess it is காங்கிரஸ். The reason being these people both BJB/JD(s) consistently proved they cannot live upto their own commitments. Which would help congress to use as tool for subsequent election. it is total shame on the indian democracy.. they things are dealt K'taka really crazy.

Keyven said...

அதான் எட்டிக்கு ஆப்பு வெச்சாச்சே !! தேவ கவுடா கும்பல நம்பி எடியுரப்பா.. வீணா போனாரு... பாவம்..

தேவ கவுடா ங்கறதுக்கு பதிலா.. அவரோட பெற்றோர் வேற பேரு வெச்சிருக்கலாம்....பொருத்தமா இருந்திருக்கும் ....சரியான வேசி பொழைப்பு..

வைக்கபோருல பூந்த நாயி..தானும் திங்காது.. அடுத்த நாயையும்..திங்க விடாது... அந்த மாதிரி தான் தேவ கவுடா கும்பலும்..

IdlyVadai said...

அனானி, பிரகாஷ்.ஜி.ஆர், மணியன், மற்றும் பலர் - இதை படிக்கும் வாசகர்களை விட்டுவிட்டீர்களே :-)

ஸ்ரீராம் - நல்ல சண்டை நடக்கும் என்று நினைத்தேன். சப்புன்னு முடிஞ்சுபோச்சு

வசந்தம் ரவி ஆமாம் தெரியுது :-)

மற்றவர்கள் கருத்துக்கு ( சும்மா ஒரு பேச்சுக்கு ) நன்றிங்கோ

அருண் said...

இதில் புத்திசாலி யார் என்று தெரியவில்லை ஆனால் வடி கடின முட்டாள் பா.ஜ.க தான். இவர்களுக்கு இது ஒன்றும் புதுசு இல்லை. கேமரா முன்பு லஞ்சம் வாங்குவது, லஞ்சம் வாங்கும் பணத்திற்கு Bill போட்டு கொடுப்பது போன்ற பல விஷயம் போல் இதுவும் ஒன்று. S.V. Sekar Drama பார்ப்பது போல் ஜாலியா இருக்கு...:)

Jahe said...

ஒன் இந்தியா செய்தி :
கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டசபை கலைக்கப்படுகிறது.

இன்று காலை கூடிய அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபை கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது.

பாஜக-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தேவ கவுடா கும்பல் போட்டதிலேயே..இது தான் சூப்பர் மொக்கை.. காரட் கொடுக்கிறதுன்னு சொல்லுறது..இதுதானோ ? Keyven சொன்ன மாதிரி வைக்க போருல தூங்கற நாய்க்கும் தேவ கவுடா & கோ வுக்கும் வித்தியாசமே கிடையாது..

இஞ்சிமொரப்பா said...

கவுடாதான் சூப்பரா ஆப்பு வெச்சுட்டாரே..இனிமே சொல்ல என்ன இருக்கு. அதி புத்திசாலிங்க நாமதான். நாமே ஓட்டையும் போட்டுட்டு நாறிபோய் அலையுறோம்.

nandhusaravanan said...

//வாசகர்களூக்கு ஒரு கேள்வி யார் புத்திசாலி//

நிச்சயமா congress தான் புத்திசாலி
இப்போது தேவே கவுடா டெல்லி போயிருக்கான்
congress கண்டிப்பா இந்த முறை ஒத்துக்க கூடாது.
தேவே கவுடா வுக்கு ஒரு சீட்டு கூட இந்த முறை தேர்தல் வந்தால் கிடைக்காது.

M S said...

அரசியல் and நகைச்சுவை - It makes me wonder what is the difference between these two in the Indian context.