பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 13, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-11-07

இந்த வாரம் இட்லிவடை, முனிக்கு தீபாவளி நிகழ்ச்சிகளை பற்றி மட்டும் எழுதும் கடிதம்

ஹாய் முனி,

என்ன தீபாவளி எல்லாம் ஆச்சா ?
தீபாவளி டிவி நிகழ்ச்சி பத்தி இந்த கடிதத்தில். நோ அரசியல். ஓ.கேவா ?

பட்டாசு சத்தத்தால் சீக்கிரம் எழுந்து டிவியை போட்டேன்.

சங்கராச்சாரியார் கைதுக்கு பிறகு அவர் டிவிக்களில் (குறிப்பாக ஜெயா டிவியில்) அருளுரை வழங்குவதில்லை. அதே போல தீபாவளி மலர்களில் (கல்கியில் உட்பட) அவர் படம் வருவதில்லை. பொதிகை டிவியில் கூட அகோபில மடம் ஜீயர், பங்காரு அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், குன்றக்குடி ஆதீனம் அருள் உரை வழங்கினார்கள். ஆனால் ஜெயேர்ந்திரர் மிஸ்ஸிங். ஒரு மாறுதலுக்கு ராஜ் டிவியில் இந்த முறை சங்கராச்சாரியார் அருளுரை வழங்கினார்(ராஜ் டிவி கலைஞர் கட்சி என்பதாலா என்று ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம்).

கலைஞர் டிவியில் விஜயின் அம்மா ஷோபா கர்(not)டிக் பாடல் பாடினார்.
கார்ட்டூன் நெட்வர்கில் - தி பவர்பப் கேர்ள்ஸ் வந்தது.

சில பட்டி மன்றங்களை பார்க்கநேர்ந்தது அதிகம் நடத்தியது, ஒன் அன் ஒன்லி லியோனி.

விஜய் டிவியில் லியோனி ("குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா?' என்ற தலைப்பில்) எப்போதும் போல் சினிமா பாடல்களை பாடி வெறுப்பேத்தினார். அதே போல் ஜெய டிவியிலும் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

சன் டிவியின் பட்டிமன்றம் தான் பார்க்க கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.

75 ஆண்டு கால தமிழ் சினிமா மக்களுக்கு தந்து இருப்பது சாதனையாப அல்லது வேதனையா. இதை தலைப்பாக வைத்துக் கொண்டு சாலமன்பாப்பையா தலைமையில் சிங்கப்பூரில் நடந்த பட்டிமன்றத்தை சன் டி.வி. ஒளிபரப்பியது.

வேதனைகளே என்ற தலைப்பில் ராஜா, பாரதி பாஸ்கர் மற்றும் 2 சிங்கப்பூர் தமிழர்கள் பேசினார்கள். சாதனைகளே என்ற தலைப்பில் பாரதிராஜா, சத்யராஜ், குஷ்பு, ஸ்ரீபிரியா பேசினார்கள்.

நவீன மாற்றங்களுக்கு வழிகாட்டுவதும் சினிமாதான். இதில் தொப்புளை காட்டி விட்டார்கள் என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. தொப்புளை காட்டுவது ஏன்ப பள்ளிக்கூடத்துக்கு வா என்றால் வர மாட்டான். மிட்டாய் தருகிறேன். மதியம் உணவு தருகிறேன் என்றால் பள்ளிக்கூடத்துக்கு வந்து விடுவான். அது மாதிரிதான் தொப்புளை காட்டித்தான் நல்ல விஷயங்களை பார்க்க அழைக்க வேண்டியதுள்ளது என்றார் பாரதிராஜா வடிவேலு, விவேக் எல்லாம் ஜாக்கிரதையா இருக்கனும். தமிழுக்கு அடுத்த காமெடி நடிகர் கிடைத்துவிட்டார்.

75 ஆண்டு தமிழ் சினிமா சாதனைகள் நிறைந்தது என்று தீர்ப்பளித்தார் சிவாஜியில் நடித்த சாலமன் பாப்பையா. அதன் பின் தமிழ் சினிமா பற்றி டி.ராஜேந்தர் என்னவெல்லாமோ பேசினார், அடுக்கு மொழியில் பேச வேண்டுமே என்பதற்காக ஏதேதோ அடுக்கினார். "அரச்ச மாவை அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா" என்ற பாடலுக்கு விளக்கம் கொடுத்தார் பாருங்க ஐயோ தங்கலடா சாமி. நான் சாலமன் பாப்பையாவாக இருந்தால் இந்த ஒரு காரணத்துக்காகவே தீர்ப்பை மாத்தி எழுதியிருப்பேன்.

இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, சில பேட்டிக்களையும் பார்த்தேன்...

இந்த முறை நடிகர் விஜய் செய்த இரண்டு நிகழ்ச்சிகள் சூப்பர். ஒன்று
நடிகர் விஜய் ராணுவ கிராமத் துக்கு சென்று அந்த கிராம மக்களுடன் நடிகர் விஜய் கொண்டாடிய தீபாவளி நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள்.
அந்த ராணுவ கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தலா இரண்டு அல்லது மூன்று பேர் ராணுவத்தில் சேர்ந்து நம் நாட்டின் எல்லையை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த ஒரு வீரருக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார்.

"நான் படத்தில்தான் ஹீரோ. ஆனால் நாட்டில் நிஜமான ஹீரோ நீங்கள்தான் என்று அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் கூறியது சூப்பர்.

"சிறையில் விஜய்" என்ற டிக்கர் தீபாவளிக்கு முந்தின நாள், கலைஞர் டி.வி-யில் ஓட அதை கொஞ்சம் நேரத்தில் "சிறைக் கைதிகளுடன் விஜய் உணர்ச்சிகரமான சந்திப்பு" என்று அறிவிப்பை மாற்றினார்கள். விஜய் ரசிகர்கள் டென்ஷன் தான் இதற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள். கலைஞர் டிவி என்பதற்காக இவர்களுக்கு அனுமதி அளித்தார்கள் என்றும் பேச்சு.

நடிகர் சிம்பு விஜய் டி.வி.க்காக இந்திய கடற்படையின் மிகப்பெரிய கப்பலுக்கு சென்று கடற்படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்திய சிம்பு கடைசியில் "என் ஆசை மைதிலி ரீ-மிக்ஸ் பாடலுக்கு ராணுவ வீரர்களுடன் குத்தாட்டம் போட்டார். கப்பலுக்கு விஜயகாந்த் கேப்டனாக வருவார் பார்த்தேன் கடைசி வரை வரலை.

'நம் நமிதா' நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் நமுத்து போகாமல் இருந்தது.

"கவர்ச்சி காட்டி நடிக்கிறீர்களே.... என்ன காரணம் ?"

நமிதா பதில்: "எனக்கு பிளஸ்-பாயிண்டே கவர்ச்சிதான். அதனால்தான் இப்பவும் நான் கவர்ச்சியா வந்து இருக்கேன். இன்னும் ஒரு வருஷத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு கவர்ச்சி நடிப்பில் இருந்து கேரக்டர் நடிப்புக்கு மாற திட்ட மிட்டுள்ளேன்" எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.

"தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம் ? எது"

பதில்: கவர்ச்சி ஆட்டத்துக்கு குறைவான பாடல்கள் கொடுப்பது பிடிக்கவில்லை. தமிழில் நிறைய திறமையான கலைஞர்கள் இருப்பது பிடித்துள்ளது"

பிடித்த நடிகர் யார்?
"ரஜினிதான் பிடிக்கும். ஒரே ஒரு படத்திலாவது ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க வேண்டும்" என்பது நமீதாவின் தீராத ஆசையாம்.

தலை தீபாவளி கொண்டாடும் நடிகர்கள் என்று ஸ்ரீகாந்த் வந்தனா ஜோடியின் பேட்டியை காண்பித்தார்கள். ஸ்ரீகாந்த் வழிந்ததை பார்த்தால், இவர்களா இவ்வளவு சண்டை போட்டார்கள் என்று வியப்பு தான் ஏற்பட்டது.

ஸ்பெஷல் ஷோ இரண்டு பார்த்தேன்.

கலைஞர் டிவியில் மெயின் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா முழுமையாக ஒளிபரப்பானது. நடிகைகள் போட்ட குத்தாட்டதால் ரிமோட்டை மாத்தாமல் கலைஞர் டிவியையே பார்க்க முடிந்தது.

கேடிவியில் முன்பு கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவை மீண்டும் ஒளிபரப்பி, தயாநிதி மாறனை காண்பித்தது. சிரிப்பை அடக்க முடியலை.

தீபாவளிக்கு அதிகம் பேரால் பார்க்கபட்ட நிகழ்ச்சி விளம்பரங்கள் - சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், கோல்ட் வின்னர் வாங்கியதற்கு தேங்க்ஸ் சொன்ன சிறுமி. மற்றும் வடிவேலு பேட்டி.

தீபாவளி நிகழ்ச்சியில் 95% சதவீத நிகழ்ச்சிகள் சினிமாவை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில், (தீபாவளி)மருந்து சைசுக்கு கூட சினிமா தவிர்த்து எதையும் காண்பிக்கவில்லை.

பல சமயம் எந்த சேனலை பார்த்துக்கொண்டிருக்கோம் என்று கீழே தெரிந்த லோகோவை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

மக்கள் டிவியை இந்த சமயத்தில் பாராட்ட வேண்டும். கட்சிக்கு கொள்கை இருக்கோ இல்லையோ, அட்லீஸ்ட் டிவிக்கு இருக்கு. அதனால் தான் என்னவோ மற்ற டிவி லோகோவை போல் கீழே இல்லாமல் மேலே இருக்கு.

தீபாவளி அன்று மக்கள் டிவி பார்க்காதவர்கள் போல, தீபாவளி பண்டிகையை கொண்டாடாத கிராமங்களைப் பற்றி, அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் ஒரு நல்ல நிகழ்ச்சி. சுவாரசியமாக இருந்தது. சபாஷ்.

தூக்க கலக்கதுடன்,
இட்லிவடை

7 Comments:

வால் பையன் said...

உண்மையில் சினிமா இல்லாமல் டிவி இல்லை என்ற வார்த்தையை மக்கள் தொலை காட்சி உடைத்து வருகிறது. நான் ஆவலோடு எதிர் பார்ப்பது உலக சினிமா,
எப்போதென்று தெரிந்தால் தெரிவிக்கவும்,
நன்றி

cgs said...

நம்மை ஆளுகிறவர்கள் எல்லாம் சினிமா சம்பந்தப்பட்டே இருப்பதால் தான் இந்த தலை வலி.

பாரதிராஜாவின் ஆனந்தவிகடன் பேட்டியிலேயே தெரியுது அவருடய வண்டவாளம்.'இனிமேலாவது ஒரு தமிழன் ஆளட்டும்'.இவர் மருமகள் கேரளத்து பெண்.இவர் ஹீரோயின் மற்றும் ஹீரோக்கள் ,தமிழர் அல்லாதவர்கள்.கேட்டா ,கலைஞன் என்பார்கள்.இந்த செலெக்டிவிடி தான் புரியமாட்டேங்குது.

இந்த ஆளையெல்லாம் சீரியசாக எடுக்கிரதானால் தான் நாம் இப்படி இருக்கிறோம்.

இட்லிவடை அது என்ன நீயா நானா 'ஞானி..'பதில்?

cheena (சீனா) said...

இத்தனை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்து(??) அதற்கு விமர்சனமும் எழுதி ...... அப்பப்பா - பொறுமை அதிகம்

ஹரன்பிரசன்னா said...

நான் எந்த நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. கண்ணில் பட்டது இரண்டு நிகழ்ச்சிகள். ஒன்று, டி.ராஜேந்தர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவை மரியாதைக் குறைவாகப் பேசியது. இரண்டாவது, பிறவியிலேயே பேசமுடியாத, காது கேட்காத குழந்தைகளுடன் பரத் பேசிய நிகழ்ச்சி.

பின்னர் கிரிக்கெட் பார்த்தேன்.

வால் பையன், மக்கள் தொலைக்காட்சி ஐந்து ஈரானிய திரைப்படங்களை தமிழ் சப்-டெக்ஸ்டோடு ஒளிபரப்பப் போகிறது. இது ஒரு சாதனை. பத்து நாள்களுக்கு முன்பு விளம்பரம் பார்த்தேன். இன்னும் நேரம் அறிவிக்கவில்லை. நேரம் அறிவித்த பின்பு உங்களுக்குச் சொல்கிறேன்.

நன்றி, பிரசன்னா

Anonymous said...

ஜுனியர் விகடன் 11.11.2007 தேதியிட்ட இதழில் 'ஹோதா என்ன சாதாவா'

can you republish it in your blog.

அருண் said...

நல்ல பதிவு.

Sun TV பட்டிமன்றம் கொஞ்சம் சுமாராக இருந்தது. அதிலும் ராஜா, பாரதி பாஸ்கர் இவர்களுது பேச்சு மட்டுமே கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. ஏனையோர் பேச்சு ஏதோ சொற்பொழிவு கேட்பது போல் இருந்தது. TR மேடை ஏறியவுடன் Channel மாற்றிவிட்டேன்.
Match இருந்த காரணத்தால் பல நிகழ்ச்சிகள் பார்க்காமல் தப்பித்தேன் :)

Siva said...

நல்ல வர்ணணை