பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 07, 2007

தீபாவளி ஸ்பெஷல் புது வெடிகள் டாப் 10+4+1

இந்த வருட தீபாவளிக்கு வந்திருக்கும் புது பட்டாசுக்கள். ( நண்பர் பினாத்தலுடன் சும்மா சாட் செய்ய ஆரம்பித்து இந்த பதிவு ரெடியாகிவிட்டது. இந்த வெடிகளை வெடிக்க செய்த அவருக்கு ஸ்பெஷல் நன்றி. )
வெடிகள் விவரம் கீழே...

1. 2011 வாலா வெடி - அன்பாக வைத்தால் அறிவாலயத்தில் மணி அடிக்கும். 2011 ஆம் ஆண்டு

2. ராமர் வெடி - கூலிங்கிளாஸ் போட்டு வெடிக்கனும். கல்யாண மண்டபம் பக்கத்தில் வைத்தால் சத்தம் அதிகமா இருக்கும். மணல் திட்டில் வைத்தால் சத்தம் வராது.

3. க(ன்)னிவெடி - வீட்டுகொல்லை புறத்தில் வைத்து வெடிக்கும் பட்டாசு. பெண்கள் அதிகம் விரும்பும் வெடின்னு சொன்னாங்க, இப்ப வெடிக்கறதைப் பாத்தா அப்படி தெரியல. டெல்லியில கூட இந்த வெடிக்கு மவுசு வந்திருக்காம். உங்களுக்கு அதிர்ஷம் இருந்தால் இந்த வெடி பாகெட்டில் ஏதாவது ஒரு வெடி காலமேக புலவர் பாடல் பாடும்.

4. "கேப்"டன் வெடி - ஒத்தை வெடிதான், வேறெந்த சத்தமும் கூட்டணியிலே வராது, வெடித்தால் சத்தம் விருதாச்சலம் வரை கேட்கும், இந்த வெடி எவ்வளவு டேஞ்சரஸ்னு மக்களுக்கு இன்னும் புரியல. இந்த தீபாவளீக்கு தமிழர்கள் அதிகம் விரும்பி வெடிக்கும் பட்டாசு.

5. கேப்சிங் - சின்ன குழந்தைகள் விரும்பி வெடிக்கும் வெடி. இது வெடி இல்லை என்று சொல்லுபவர்களும் உண்டு. தானாக வெடிக்காது, சோனியா துப்பாகியால் வெடித்தால் தான் வெடிக்கும்.

6. கலைச்சக்கிரம் - தரையிலேயே சுத்தும் பட்டாசு, திடீர்ன்னு வெடிக்கும், சீறும், எந்த பக்கம் வேணாலும் நெருப்பு வரும். இந்துக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

7. லஷ்மி வெடி - மக்களிடம் இருக்கும் எல்லா லஷ்மியையும் வெடிக்க வைக்கும் இந்த வெடி, சிதம்பரத்தில் தான் கிடைக்கும் என்கிறார்கள்.

8. நாட்டு வெடி - நாடார் வெடியை நாட்டு வெடி என்ற பெயர் மாற்றத்துடன் மார்கெட்டுக்கு வந்திருக்கு. புது வெடி என்பதால் மக்கள் இதை வாங்குவார்களா என்று தெரியலை.

9. புஸ்வானம் - இந்த பட்டாசு சிவகாசியில் தாயாராகாமல் சத்திய மூர்த்திபவனில் தயாராகிறது. தீபாவளிக்கு மற்ற வெடிகளுடன் இதை வெடித்தால் தான் தீபாவளி கொண்டாடிய எபெக்ட் இருக்கும். பிகு: இதை வெடிக்க வேண்டும் என்றால் டெல்லியில் பர்மிஷன் வாங்கனும்.

10. இளைஞர் வெடி : பழைய வெடிதான், இப்ப பாங்காக் தொழில்நுட்பத்தில் புதுமையா ராப்பர் மாத்தி வந்திருக்கு. கூடிய சீக்கிரம் இந்த வெடி மார்கெட்டில் முதன்மை வெடியாக சான்ஸ் இருக்கு.

11. போயஸ் வெடி: பாதுகாப்பில்லாத வெடின்னு சிலர்னு சொல்றாங்க, புல்லட் ப்ரூப் வெடின்னு சிலர் சொல்றாங்க. வெடித்தால் ராக்கெட் போல பறந்து நீதிமன்ற வாசலில் போய் விழும்.

12. டபுள் ஷாட் - வெடித்தால் வலது, இடது பக்கமுனு இரண்டு வெடிக்கும். வெடிக்கும் முன் 'புஷ்'ஷ்ன்னு சத்தம் மட்டும் வெடிசத்தத்தை விட பெரிசா கேட்கும். பயம்பட வேண்டாம்.

13. வெங்காய வெடி - பெரிய வெடி, அப்பப்ப நமுத்துப் போகும், அய்யர்திரியை (மன்னிக்கவும்.. அரைத்திரியை) கிள்ளிப்போட்டா மட்டும் வெடிக்கும்.

14. இந்த வெடியெல்லாம் வெடித்த பின் வெடிக்காத பட்டாசுக்களை பொறுக்கிபோட்டு கொளுத்தினால் வெடிக்குமா வெடிக்காதானே தெரியாது. ஆனா ஆர்வமா பார்க்கும் போது வெடிக்காது. இந்த பட்டாசு பேர் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

நமிதா வெடி: மனைவி பக்கத்தில இருக்கும் போது இந்த படத்தை பார்த்தால், யானை வெடியைவிட சத்தமா வெடிக்கும். எப்படியோ இந்த போட்டோவை போட்டச்சு ஹி ஹி :-)

பிகு: வெடியை பெரிசா பார்க்க வெடி படத்தை மட்டும் கிள்க் செய்யவும்!
( படம் உதவி: பினாத்தல் )

எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் ! என்சாய் !!!

9 Comments:

Natrajan said...

வாழ்த்துக்க்ள். அந்த படத்தை சித்த பெரிசா போட்டிருக்கலாம். சரியா தெரியமாட்டைங்குது
நடராஜன்

Anonymous said...

ஆமாய்யா நமீதா படம் ரொம்ப முக்கியம். வர வர உம்ம போக்கு சரியல்ல.உம்மளோட பெண்ரசிகர்களெல்லாம் உமக்கு வெடி வைக்கப்போராய்ங்க....கவனம்.

Anonymous said...

இட்லிவடையாரே

தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்கள் உண்மையைக் கண்டுபிடித்துத் தரும் முயற்சிக்கு ஒரு போட்டி.

நாளை தீபாவளியன்று இவர்கள் என்னென்ன செய்தார்கள் என செய்தி வெளியிடமுடியுமா (முக்கியமாக புத்தாடை உடுத்தினரா ? பட்டாசு கொளுத்தினரா ? ஹேப்பி தீபாவளி சொன்னார்கள் என)

1. மு.க, தயாளு அம்மையார்
2. ராஜாத்தி அம்மையார், கனிமொழி, அரவிந்தன், ஆதித்யா
3. மு.க.ஸ்டாலின், துர்கா அம்மையார், உதயநிதி, மனைவி, மக்கள்
4. மு.க.அழகிரி + குடும்பத்தினர்
5. தயாநிதி மாறன் + குடும்பத்தினர்
6. கலாநிதி மாறன் + குடும்பத்தினர்
7. ஏனைய அமைச்சர்கள் - டி.ஆர்.பாலு, வீராஸ்வாமி, துரைமுருகன் மற்றும் பலர்.

Anonymous said...

இந்த பதிவை எழுதினதே பிராத்தல் சுரேஷ் தானே?

நாகை சிவா said...

10+4+1 ல 1 தான் நச் வெடியா இருக்கு ... ஹிஹி...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தல் வீட்டுல இந்த பதிவைப் பார்த்துட்டு தீபாவளி அமோகமாக் கொண்டாடினாங்களாம். இவருக்குத்தான் வலி அதிகமாப் போச்சாம். :))

Anonymous said...

''வாழ்த்துகள் சொல்லாத, சொல்ல விரும்பாத, சமூக, அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தீபாவளி வாழ்த்துகள்''



மேலே சொன்னது....யார் தெரியுமா??

தாளிக்கும் ஓசை!!!!


உங்களுக்கு இத்தனை நாளாகி இன்னும் அரசியல் தெரியலை இட்லிவடை!!!!!!!!!!!முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டார் பாருங்கள்.

இஞ்சிமொரப்பா said...

மத்த வெடியை எல்லாம் யாருய்யா கேட்டா? அந்த கடைசி வெடியை கொஞ்சம் பெருசா போட்டா, நாங்க என்ன வேணான்னா சொல்ல போறோம்? சரியான கஞ்ச பிசினாரியா இருக்கீரே? அதுதான்யா சூப்பர் வெடி. அந்த வேடியையே கண்கொட்டாம பாத்துக்கிட்டு இருந்ததை எங்க வீட்டு வெடி பார்த்துட்டு, எள்ளும்,கொள்ளுமா போகுது. என்ன மாதிரி வேடிக்கபோகுதோ தெரியலையே?

நல்ல நாளும், கிழமையுமா இப்படி பத்த வச்சுட்டியே? இப்போ சந்தோசமா ராசா....? நல்லா இருங்கப்பா.

Jahe said...

// இஞ்சிமொரப்பா said...

மத்த வெடியை எல்லாம் யாருய்யா கேட்டா? அந்த கடைசி வெடியை கொஞ்சம் பெருசா போட்டா, நாங்க என்ன வேணான்னா சொல்ல போறோம்? சரியான கஞ்ச பிசினாரியா இருக்கீரே? அதுதான்யா சூப்பர் வெடி. அந்த வேடியையே கண்கொட்டாம பாத்துக்கிட்டு இருந்ததை எங்க வீட்டு வெடி பார்த்துட்டு, எள்ளும்,கொள்ளுமா போகுது. என்ன மாதிரி வேடிக்கபோகுதோ தெரியலையே?
//

இஞ்சிமொரப்பா ..

கடைசி வெடிய மட்டும் பாத்தீரா ? இல்ல வெடி வெச்ச இடத்தையும், பொம்பளையும் ..சேர்த்தா ? ரொம்ப அலையுறாபோல தெரியுது ??

பொறகு ஒங்க வீட்ல..வெளக்குமாத்து அடி வேப்பில அடி..சாணி அடி..எல்லாம் விழும்.. இப்பிடி திரிஞ்ச எங்களுக்கு எல்லா அடியும் விழுந்திருக்காக்கும்.. பார்த்து...

இஞ்சிமொரப்பா தின்ன கொரங்கு..