பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 19, 2007

சிம்பு Vs பப்லு - சண்டையின் நிஜமான பின்னணி!

சிம்புவிற்கும் பிருத்விராஜூக்கும் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சியில் சண்டை நடந்த அன்று, பிருத்வி அரங்கை விட்டு வெளியோரியதை பலர் பார்த்திருப்பீர்கள். பாதியில் கோவித்துக்கொண்டு வெளியேறினார் என்பதால் அவர் ஆட்டத்திலிருந்து நீக்கபடுகிறார் என்று அன்றே அறிவித்தார்கள். ( சிம்புவும் வெளியேரினார், ஆனால் அவர் ஜட் என்பதால் திரும்பவும் வந்து கைத்தட்டலுடன் உட்கார்ந்துக்கொண்டார் )

சண்டை நடந்த அடுத்த வாரம், சிறப்பு விருந்தினாராக நடிகை ஸ்நேகா கலந்துக்கொண்டார், அன்று அவர் பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஆன்று ஆடிய ஜோடிகளில் பிருத்வி மிஸ்ஸிங். ஆனால் குமுதத்தில் வந்த ஜோடி-1 நிகழ்ச்சியின் போட்டோக்களில், ஸ்நேகாவிற்கு பொக்கே கொடுக்கும் போட்டோவும் ஒன்று. இதில் என்ன ஆச்சரியம் ? ஆச்சரியம் பிருத்திவியும் அதிலே சிரித்துக்கொண்டு இருக்கிறார். சிகப்பு சொக்கா போட்டுகிட்டு, உமாவும் அதே சிகப்பு சொக்காவுடன் இருக்கிறார். ஆட்டத்திலுருந்து விதிகளின் படி நீக்கபட்டவர், எப்படி இங்கே வந்தார் ? என்று எனக்கு தெரிந்த சிலரிடம் கேட்டேன், அவர்கள் 'அவள் விகடன்' பாருங்கள் விடை கிடைக்கும் என்றார்கள் அதன் விபரம் கீழே....
( குமுதம் படம் ஆன்லைனில் இல்லை, முடிந்தால் ஸ்கேன் செய்து போடுகிறேன் )

சிம்பு Vs பப்லு - ரிமோட் ரீட்டா
சின்னத்திரை சண்டையின் நிஜமான பின்னணி!

‘ஜோடி நம்பர் ஒன்‘ நிகழ்ச்சியில சிம்புவும் பிருத்விராஜும் (பப்லு) சண்டை போட்டாலும் போட்டுக்கிட்டாங்க.. பிள்ளை யார் கோயில் பிராகாரங்கள்லருந்து கேர்ள்ஸ் காலேஜ் கேன்டீன் வரைக்கும் மேட்டர் பத்தி எரியுதுங்க.

‘‘சிம்பு எப்பவுமே இப்படித்தாம்பா, ரொம்ப சென்ஸிடிவ்’’, ‘‘பிருத்வியும் கோவக்காரர்-தாம்ப்பா’’னு போயிட்டிருந்த விசாரிப்பு, போகப் போக உருமாறிடுச்சு. ‘‘இது ஜோடி நம்பர் ஒன் இல்லப்பா.. ஜோடிப்பு நம்பர் ஒன். அவங்க போட்ட சண்டை எல்லாமே செட்டிங்’’னு டி.வி வட்டாரங்கள்லயே பேசிக்கிறாங்க.

‘‘உண்மையிலயே ஏதாவது சண்டை நடந்தா, அதை சமாதானப்படுத்தாம இப்படி வளைச்சு வளைச்சு ஷூட் பண்ணவா செய்வாங்க? அது பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி தானே.. ‘லைவ் டெலிகாஸ்ட்’ இல்லையே.. எடிட் பண்ணிக்கூட போட்டிருக்கலாமே!’’னெல்லாம் நம்ம வாசகிகள் பலரும் புத்திசாலித்தனமா கேள்வி கேட்டிருந்தாங்க. ‘‘உண்மையைக் கண்டறிய ரீட்டாவே கிளம்பி வா’’னு அத்தனை பேரும் பின்குறிப்பாலயே உசுப்பேத்தவும், ‘ஸ்கூட்டி’ய ஆபீஸ்லயே விட்டுட்டு ஜூ.வி ரிப்போர்ட்டர்கிட்ட ‘ஸ்டார் சிட்டி’ வாங்கிக்கிட்டு சூர்யா மாதிரி கிளம்பினேன் (இது பரபரப்பான மேட்டர்ல..?)

முதல்ல போன இடம்.. திருவான்மியூர்ல இருக்குற பிருத்வியோட வீடு!

‘‘தெளிவா தெரியுது ரீட்டா.. இது விஜய் டி.வி-யும் சிம்புவும் சேர்ந்து நடத்தின நாடகம்தான். நீயே பார்த்திருப்பே.. சிம்பு ஆரம்பத்துல இருந்தே என் விஷயத்துல சரியில்லை. சுத்தி இருக்குறவங்க அத்தனை பேரும் என்னைப் பாராட்-டினப்பவும், ‘எனக்குப் பிடிக்கலை.. எனக்குப் பிடிக்கலை’ன்னே சொல்லிக் கிட்டிருந்தார்.

உண்மையிலயே சொல்றேன் ரீட்டா, இந்தப் போட்டி ஆரம்பிச்சதுல இருந்து என்னோட நினைப்பெல்லாம் எப்பவும் டான்ஸ் டான்ஸ்னு அதைச் சுத்தியேதான் இருந்துச்சு. அப்படிப் பட்டவனைப் பார்த்து உனக்கு ஆடவே தெரியலைங்கற மாதிரி பேசினா எவ்வளவு கோவம் வரும்..? இத்தனைக்கும் நடிப்புலயும் சரி.. டான்ஸ்லயும் சரி, நான் சிம்புவை விட சீனியர்’’னு டென்ஷன் ஆனார். உடனே,

‘‘இதான் ரீட்டா.. இப்படி நான் டென்ஷனா-குறதைத்தான் அவங்க பயன்படுத்திக்கிட்டாங்க. புரோக்ராம்ல ஏதாவது பிரச்னைன்னா டி.ஆர்.பி ரேட்டிங் எகிறுமில்ல.. அதனாலதான், பிளான் போட்டுஎன்னை வெறுப் பேத்தி கடைசியில அவங்க நினைச்சதை சாதிச்சுக் கிட்டாங்க..’’னு அவர் ஆதங்கத்தைக் கொட்டவும் சந்தேகம் இன்னும் அதிக மாச்சு.

‘‘இவ்வளவு கோவத்துல இருக்குற நீங்க, அடுத்த ரவுண்டான ரீ-மிக்ஸ் ரவுண்ட்ல போய் கலந்துக் கிட்டிருக்கீங்க. சமீபத்துல ஒரு பத்திரிகையில சீஃப் கெஸ்ட் சினேகாவோட நீங்க நிக்கிற மாதிரி போட்டோ வெல்லாம் வந்திருக்கே ஸார்.. அது எப்படி?’’னு நான் ஷார்ப்பா கேள்வி கேக்க, யோசிச்சு யோசிச்சு பதில் சொன்னார் பிருத்வி..

‘‘அன்னிக்கு கோவத்-தோட வெளியேறினதுதான் எனக்குத் தெரியும் ரீட்டா. அதுக்காக போட்டியில இருந்து எங்களை விலக்கிட்டாங்கனு தெரியாது. சரி, நடந்து முடிஞ்ச விஷயம்னு நானும் உமாவும் அடுத்த ரவுண்டுக்குப் போயி ஆடினோம். ஆனா, சண்டை வந்த எபிஸோடை டி.வி-யில போடும்போது, ஏதோ நான்தான் வம்பிழுத்தேன்ங்கற மாதிரி காட்டி, எங்களை போட்டியில இருந்து விலக்குறதா ‘வாய்ஸ் ஓவர்’ல சொன்ன பிறகுதான், கடுப்பாகி, அந்தப் பக்கமே போகக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறம் என்னைக் கூப்பிட்டு சிம்புகிட்ட சமாதானமா போகச் சொன்னாங்க. முடியவே முடியாதுனு அடிச்சு சொல்லிட்டேன்’’னு பிருத்வி ஒரு விளக்கம் கொடுத்தார். இதை நம்புறதும் நம்பாததும் நேயர் விருப்பம்!

அடுத்த விசாரணைக்கு நான் போனது, ‘ஜோடி நெம்பர் ஒன்’ நிகழ்ச்சியோட டைரக்டர் பிரதீப் மில்ராய் பீட்டர்கிட்ட.

‘‘பிருத்வி என்ன சார் இப்படி கவுத்துட்டார்.. உங்க புரோக்ராமே சுத்த நாடகமாமே’’னு நான் எடுத்த எடுப்புல இடியை இறக்கினதும் ஆடிப் போயிட்டார் மனுஷர்.

‘‘இது அபாண்டம் ரீட்டா. சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் மாதிரி வி.ஐ.பி-க்களை எல்லாம் புரோக்ரா-முக்காக இப்படி நடிக்க வைக்க முடியுமா? நீயே யோசிச்சுப் பார்’’னு அவர் சொல்ல, ‘‘அப்புறம் ஏன் சண்டையை ‘டெலிகாஸ்ட்’ பண்ணினீங்க? எடிட் செஞ்சிருக்கலாமே’’னு ஒரு புடி புடிச்சேன்.

‘‘போட்டியில கலந்துக்கிட்ட பிருத்வி, திடீர்னு வெளியில போயிட்டா நாங்க எதைக் காட்டுறது? அவர் ஏன் போனார்னு மக்கள் காரணம் கேக்க மாட்டாங்களா? இப்படித்தான் சண்டை போட்டுட்டுப் போனார்னு சொல்லத்தான் அதையெல்லாம் காட்டினோம்’’னு அவரு சமாளிக்க..

‘‘அவரு எங்க ஸார் கோவிச்சுக்கிட்டுப் போனார்? அதான் அடுத்த ரவுண்டுல வந்து ஆடியிருக்காரே’’னு நான் கேக்க, ‘‘அப்படி யெல்லாம் இல்லையே’’னு சாதிச்சார் பீட்டர். அந்தப் பத்திரிகையில வந்த போட்டோவை ஆதாரமா காட்டினப்புறம் அவர் சைடுல இருந்து பெரிய சைலன்ஸ்.

‘‘கொஞ்சம் இருங்க’’னு ஆபீஸுக்குள்ள போய் என்னவோ டிஸ்கஸ் பண்ணிட்டு வந்தவர், ‘‘இதோ பாரு ரீட்டா, நாங்க ஒவ்வொரு ரவுண்டையும் கொஞ்சம் அட்வான்ஸா எடுத்து வச்சுப்போம். இப்போ அவர் சமாதானமாகிட்டா, அவர் சம்பந்தப்-பட்ட விஷயங்களை ஒளிபரப்புவோம். இல்லைன்னா ஒளிபரப்ப மாட்டோம். முடிவு அவர்கிட்டதான் இருக்கு’’னு ஏதோ.. அவரால முடிஞ்ச வரைக்கும் குழப்புனாரு டைரக்டர்.

‘சரி, பிருத்வியும் விஜய் டி.வி-யும்தான் குழப்புறாங்க. சிம்பு என்ன சொல்றார்னு கேக்கலாமே’னு நேரா சிம்புவைப் போய்ப் பார்த்தேன்.

‘‘என் வாய் இருக்குதே ரீட்டா.. அது ரொம்ப மோசம். எவ்வளவு கன்ட்ரோல் பண்ணினாலும் சும்மாவே இருக்க மாட்டேங்குது’’னு ஏற்கெனவே டி.வி-யில மூணு முறை கேட்டு போரடிச்சுப் போன (அட.. அந்த புரொக்ராமைத்தான் நடுவுல ஏகப்பட்ட விளம்பரங்களோட மூணு தடவை டெலிகாஸ்ட் பண்ணி விஜய் டி.வி அள்ளிட்டாங்களே..) அதே டயலாக்கை திரும்பவும் சொல்ல ஆரம்பிக்க.. தடுத்து நிறுத்தி கேள்வியை எடுத்து விட்டேன்..

‘‘ஹீரோவா இருந்துக்கிட்டு நீங்க ஏன் ஸார் ஒரு டி.வி புரோக்ராம்ல போய் கரகரனு அழுது கலவரப்படுத்தினீங்க?’’னு பளிச்னு கேட்டுட்-டேன்.

‘‘அது ஒவ்வொருத்தர் கேரக்டர் ரீட்டா. பெரிய பலசாலிகள்கூட குழந்தை மாதிரி.. சின்ன சின்ன பிரச்னைக்-கெல்லாம் அழுதுடுவாங்க. நானும் அப்படித்தான். எங்கப்பா மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவேன். நான் கேள்விப்பட்ட வரைக்கும் என் வளர்ச்சியை பிடிக்காதவங்கதான், பிருத்வியை இப்படித் தூண்டிவிட்டு என் இமேஜைக் குறைக்குறாங்கனு நினைக்-கிறேன்’’னு அவர் சொல்ல அதிர்ந்துட்டேன். ‘எல்லாம் அண்டை நாடுகளின் சதி’னு அரசியல்வாதிகள் சொல்ற மாதிரியே இருந்துச்சு அது.

‘‘நீங்களும் சேர்ந்துதான் டிராமா பண்றீங்கனு பிருத்வி சொல்றாரே.. அது உண்மையா?’’னு கேட்டேன்.

‘‘சினிமாவுல நடிக்கலாம். பார்க்க நல்லா-யிருக்கும். அதுக்குனு நிஜத்துலயும் நடிக்க முடியுமா ரீட்டா? நான் இப்போ ரெண்டு படம் நடிச்சிட்டிருக்கேன். ‘இத்தனை பிஸியான ஷெட்யூல்க்கு இடையில டைமை வேஸ்ட் பண்றீங்களே’னு நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க. நான் என்னோட மைண்ட் ரிலாக்ஸுக்காகத்தான் அந்த புரோக்ராமுக்குப் போறேன். அப்படி போற இடத்துல வேணும்னு யாராவது இப்படி பிரச்னை பண்ணி நிம்மதியைக் கெடுத்துப்பாங்களா? எனக்கு ‘கட்’ சொன்ன பிறகு நடிக்கத் தெரியாது ரீட்டா.. நிஜ வாழ்க்கையில நடிக்கவே தெரியாது..’’னு சிம்பு உணர்ச்சிவசப்படவும்..

‘‘நீங்க, ‘நான்தான் எலிமினேட் ஆகறேன்’னு சொல்லிட்டு, புரொக்ராம்ல இருந்து வெளியில போய்ட்டு திரும்ப வந்தப்பவும், பிருத்விகிட்ட ஆர்கியூ பண்ணின சமயத்துலயும் டென்ஷன்ல தலையை குனிஞ்சிருந்த நேரத்துல, உதட்டோரமா லேசா சிரிச்சீங்களே.. அது ஏன்?’’னு வாய் வரைக்கும் வந்த கேள்வியைக் கேக்கக்கூட மனசில்லாம கெளம்பி வந்துட்டேன்.

அடுத்து, நான் போனது உமா ரியாஸ்கான் வீட்டுக்கு.

‘‘சிம்பு - பப்லு (பிருத்வி) பிரச்னையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை’’னு முதல்லயே தெளிவா சொன்னவங்க, ‘ஜோடி நம்பர் ஒன்’ புரோக்ராம் பத்தின தன்னோட ஏமாற்றத்தை அடுக்கினாங்க.

‘‘ரொம்ப எதிர்பார்ப்போட இந்தப் போட்டிக்குப் போனேன் ரீட்டா. ஆனா, எல்லாமே வெறுத்துப் போச்சு. கூட ஆடுற எல்லாருமே நம்ம ஃப்ரெண்ட்ஸ்னு நினைச்ச எனக்கு சில ரவுண்டுகள் போன பிறகுதான் புரிஞ்சது.. யாருமே இதை ஆரோக்கியமான போட்டியா எடுத்துக்கலைனு.

எல்லாரும் தனித் தனி தீவுகளாதான் இருக்காங்க. எனக்கு கால்ல நரம்பு பிராப்ளம் இருந்துச்சு.. பிராக்டீஸ் பண்ணும்-போது கால் வீங்கி வலி எடுக்கும். எங்க அம்மாவுக்கும் உடம்புக்கு முடியாம ஆபரேஷன் அளவுக்குப் போயிடுச்சு. இதையெல்லாம் தாண்டி மும்முரமா பிராக்டீஸ் பண்ணி கலந்துக்கிட்டேன்..’’னு சொன்னவங்க,

‘‘அதுலயும் நானா எந்தத் தப்பும் செய்யாம என்னை போட்டியில இருக்கு வெளியேத்துறதா அறிவிப்பே செஞ்சப்புறம், இனிமேல் என்ன நடந்தாலும் யார் சொன்னாலும் நான் அங்க ஆடப் போக மாட்டேன்’’னு உறுதியா சொன்னாங்க.

இப்படி ஆளாளுக்குப் பிச்சிக்கிட்டுப் போறேன்னுதான் சொல்றாங்க. ஆனா, இன்னொரு பக்கம் அடுத்த ரவுண்டு ஷூட்டிங் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதைப் பத்தி கேட்டா யாருமே சரியான பதிலைச் சொல்லல.

சிம்புவுக்கு கோவம் பிருத்வி மேல.. பிருத்விக்கு கோவம் விஜய் டி.வி மேல.. டீம்ல ஒற்றுமை இல்லைன்னெல்லாம் கோவப்படுறாங்க உமா ரியாஸ்..

எல்லாருமே கோவமா இருக்குற மாதிரிதான் காட்டிக்கிறாங்க. ஆனா, காரணம் எதுவுமே ரொம்ப வலுவா இல்ல.

மண்டை காய்ஞ்சு நின்னப்-போதான் ‘‘விஜய் டி.வி-யில ஏற்கெனவே சிம்புவையும் பிருத்வியையும் வெச்சு, இன்னொரு எபிஸோட் ஷூட் பண்ணிட்டாங்க. டி.வி-யில வர்றவரைக்கும் அது வெளியில தெரியக்கூடாதுனுதான் இப்படி ஆளாளுக்கு திட்டிக் கிறாங்க..’’னும்..

‘‘வேணா பாரேன்.. சீக்கிரத்துல சிம்புவையும் பிருத்வியையும் கூப்பிட்டு வெச்சு ஒரு சமாதான டிராமாவும் டெலிகாஸ்ட் ஆகப் போகுது..’’னும் இண்டஸ்ட்ரியில வேற வேற மாதிரி தகவல்களும் பரவிக்கிட்டு இருக்கு.

எது உண்மையோ.. எல்லாம் விஜய் டி.வி-க்கும் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்குமே வெளிச்சம்!

ஆனா, உண்மை எதுவா இருந்தாலும், இப்போ சேனல் உலகம் கொஞ்சம் கோணலாதாங்க போயிட்டிருக்கு!

* சன் டி.வி-யில கிட்டத்தட்ட ‘ஜோடி நம்பர் ஒன்’ மாதிரியே வந்துட்டிருக்குற ‘மஸ்தானா மஸ்தானா’ நிகழ்ச்சியோட டைரக்டர் சிரான்கிட்டயும் இதப்பத்தி கேட்டு வச்சேன்.. ‘‘நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதெல்லாம் உண்மையா இருக்க முடியும்னு தோணலை. எனக்கும் சரி, எனக்கு தெரிஞ்ச சர்க்கிளிலும் சரி.. விஜய் டி.வி பக்காவா ப்ளான் போட்டு பண்ணின டிராமா இதுனுதான் தோணுது. இப்போ சீரியல்லல்லாம் யாரோட காலாவது உடையப் போற மாதிரி காட்டி அப்படியே நிறுத்தி, ‘அடுத்த எபிசோட்ல என்ன நடக்குமோ’னு ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்குவாங்கள்ல.. அப்படித்தான் இதுவும். சில சினிமாக்களை வெளியிடுற புரொட்யூசர்ஸ் அவங்களே ஆள் வெச்சி அது மேல கேஸ் போடுவாங்க. அதனால பத்து நாள் தள்ளி படத்தை ரிலீஸ் பண்ணும் போது அதுல அப்படி என்னதான் இருக்குனு ஒரு ஆர்வத்தோட மக்கள் போய் பாப்பாங்க. அப்படி ஒரு மார்கெட்டிங் ஸ்டைல் இது. பலபேர் பேர் பார்க்குற நிகழ்ச்சியில ஒரு ஜட்ஜை எதிர்த்து ஒருத்தர் பேசுறது.. ஜட்ஜ் கோவிச்சுகிட்டு வெளியே போறது.. அப்புறம் அவரை சமாதானப்படுத்தி அழைச்சுட்டு வர்றது.. அப்புறம் அவர் அழுதுகிட்டே பேசறதுனு எல்லாமே பாக்குறதுக்கு பரபரப்பா இருந்துச்சு. உண்மையா நடந்திருந்தா ஓ.கே.. விஜய் டி.வி-யோட பிளான்னா, நிஜமாவே சூப்பரா பண்ணியிருந்தாங்க.. இதையெல்லாம் பாராட்டணும்’’னு கிண்டலா பேசினார் அவர்.
( நன்றி: அவள் விகடன் )

தொடர்புடைய லிங்க்ஸ் :
வம்பு செய்தாரா சிம்பு...?
நல்லா நடிக்கிறாங்கப்பா

12 Comments:

ஹரன்பிரசன்னா said...

You are giving so much importance to this useless program and useless matter.

IdlyVadai said...

ஹரன்பிரசன்னா டி.ஆர்.பி ரேட்டிங் மாதிரி வலைப்பதிவுக்கும் சில ரேட்டிங் இருக்கு என்ன செய்ய :-)

Anonymous said...

இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம். வேற வேலையப் பாருங்கப்பா, கரடிக் குட்டிக்குக் கோடி கோடியா காசு கிடைக்குது நமக்கு என்ன கிடைக்குது?

Anonymous said...

iam a fan of this program,and this fight makes program much interesting..great to watch...
good work vijay tv.

Anonymous said...

யொவ் இட்லி...ஏன்யா இந்த கொலவெறி .....ரொம்ப ஒவெரா இருக்கு.....சிம்பு இதெல்லாம் படிச்சா எவ்வளவு வருத்தப்படுவான்னு யோசித்தீரா?????

IdlyVadai said...

//யொவ் இட்லி...ஏன்யா இந்த கொலவெறி .....ரொம்ப ஒவெரா இருக்கு.....சிம்பு இதெல்லாம் படிச்சா எவ்வளவு வருத்தப்படுவான்னு யோசித்தீரா?????//

அதுக்கு தான் நன்றி அவள் விகடன் என்று போட்டிருக்கேன். ஆனா நிச்சயம் சிம்பு ரொம்ப வருத்தபடுவார். அவரின் ஆண் ரசிகர்கள் எல்லாம் இப்ப காலி. ( ஆண்கள் அதிகமாக படிப்பது அவள் விகடனை தான் தெரியுமா ? )

VIJI said...

hello,
enndhha makkala songallennu simbu patthi poddamma viddudhaniingga....
i am following it...simbu is not that bad !

Anandha Loganathan said...

என்னய்யா உமக்கு சிம்பு மேல கோபம்.
கடந்த 2 நாளா ஒரே சிம்பு மேட்டராவே இருக்கு.

ரசிகன் said...

யோவ்,இட்லி,என்ன தெகிரியமிருந்தாக்கா.. நம்ம ரீட்டாவ கரடி குட்டிக்கிட்ட.. பேட்டி எடுக்க அனுப்பியிருப்ப?.அதுவும் தனியா?..அந்த ஆளு lipkiss கருமாந்திரம் போட்டோவ வலையில பாக்கலயா..[அந்த ஆளே ரிலீஸ் பண்ணதோ?..].வயசு பொண்ணுக்கு ஒரு பாதுகாப்பு வேணாம்?..என்னிய துணைக்கு கூப்பீட்டிருந்தாக்கா... போயிருப்பேனில்ல..அது சரி வடை எங்க?...

cheena (சீனா) said...

வலைப்பதிவின் ரேட்டிங் கூடுவதற்காக தேவையற்ற பதிவுகள் தேவையா ?? - தேவை தேவையற்றது என்பது யார் தீர்மானிப்பது ??

ILA(a)இளா said...

இட்லி,
சிம்புவுக்கு வலைப்பதிவு பத்தியும் சொல்லிதான் வெச்சு இருக்கோம். (நண்பர்கள் வட்டத்துல அவரு ஜூனியர்). இதை படிச்சாலும் படிக்கலாம், வீட்டுல இப்போ பதிவெல்லாம் படிக்கிறதா ஒரு பேச்சு என் காதுக்கு வந்துச்சுங்க.

Chandra said...

Nice one !!!