பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 27, 2007

FLASH: திரும்பவும் இட்லிவடை

நண்பர்களுக்கு வணக்கம் !

இன்று மதியம் என் பாஸ்வோட் களவு போனது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதை பற்றி பல பதிவுகளில் பார்த்தேன்.

அதை பற்றிய சில அப்டேட்

* என் வலைப்பதிவை மீட்டுவிட்டேன். எப்போதும் போல் இயங்கும். ( எப்படி செய்தேன் என்று பொதுவில் சொல்லி அதையும் அந்த ஹாக்கருக்கு சொல்லிதர வேண்டாம் என்று பார்க்கிறேன் )

* என் gmail மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன்.


* இனி என் மெயில் ஐடி : idlyvadai2007 ( gmail, gtalk ) அன்பர்கள் பயபடாமல் முன்பு போல் பேசலாம். சந்தேகம் இருந்தால் என்னிடம் Secret கேள்வி கேட்கலாம் :-)


* மதியம் முழுக்க நண்பர்கள் எனக்கு பல Tips தந்த வண்ணம் இருந்தார்கள், அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

* "உங்களுக்கு பிடித்த அடுத்த முகவரி" என்ன என்று இதுவரை ஓட்டு போட்டவர்களுக்கு என் நன்றி.

முக்கிய எச்சரிக்கை: idlyvadai@gmail.com மற்றும் idlyvadai கூகிள் டாக்கில் யாராவது ஏதாவது அனுப்பித்தால் அதை டெலிட் செய்யவும். நன்றி.


பிகு:

என் பதிவுக்கே FLASH நியூஸ் தர வேண்டியிருக்கிறது என்ன செய்ய. அப்பறம் அக்டோபர் 27, 2003 இதே நாள், நான் நான் போட்ட முதல் பதிவு :-) Coincidence !

22 Comments:

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள். மீண்டு(ம்) வந்ததுக்கு.
தனியாகவாவது எப்படின்னு சொல்லிக் குடுங்க.

அப்புறம் ஒரே நாளில் அதிக போஸ்ட் போட்டதுக்கான ரெகார்டாமே. அப்படியா?

Anonymous said...

how can we trust that you are the same idlyvadai. why you cant be the one who has hacked the original account and pretending as if... ? Jus telling this to make sure or identity.

IdlyVadai said...

அனானி நானே முகமூடி, இப்ப இன்னொரு முகமூடி என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் துக்ளக் அட்டை படம் இருக்கே சைடில இன்னுமா உங்களுக்கு சந்தேகம் ?

வற்றாயிருப்பு சுந்தர் said...

மீள் பதிவு கேள்விப்பட்டிருக்கோம். வலைப்பதிவே மீள்பதிவா வர்றது இப்பத்தான் நடக்குது போல! :-)

இது ஒரிஜினல் இட்லி வடையா இல்லாட்டி அதை மூடின வாழையிலையாங்கறது யாருக்கு வேணும்? நமக்கு வேண்டியது இட்லி வடை பதிவு. அதை ஒரிஜினல் நடத்தினா என்ன அல்லது ஹாக்கர் நடத்தினா என்ன? இட்லியும் வடையும் வழக்கம்போல கிடைக்கற வரைக்கும் கவலையில்லை! :-))

'அடப் பாவிகளா?'ன்னு திட்டறீங்களா? நல்லாத் திட்டிக்கோங்க!

முகமூடி said...

// அனானி நானே முகமூடி, இப்ப இன்னொரு முகமூடி என்று வைத்துக்கொள்ளுங்கள். //

யோவ்.. இருக்குற கொயப்பம் பத்தாதா?

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள். மீண்டு(ம்) வந்ததுக்கு.

Anonymous said...

நீங்கள் உண்மை இட்டலி வடையானால் தமிழிச்சிக்கும் மீட்க உதவலாமே.....

Anonymous said...

idlyvadai 2007 name is idiotic. What will users think abt u r url when 2008 starts, better stick to idlyvadai.wordpress.com

Tamil KeyBoard said...

The person behind the attack is pathivan@gmail.com and the site which helped is http://www2.fiberbit.net/form/mailto.cgi

cheena (சீனா) said...

வாழ்த்துகள் - சில காலம் கழித்தாவது மீட்ட கதையைச் சொல்லவும்

IdlyVadai said...

//யோவ்.. இருக்குற கொயப்பம் பத்தாதா?// வாங்க வாங்க

//ஹாக்கர் நடத்தினா என்ன? இட்லியும் வடையும் வழக்கம்போல கிடைக்கற வரைக்கும் கவலையில்லை! :-))
//

அத்தானே

ILA(a)இளா நன்றி

//நீங்கள் உண்மை இட்டலி வடையானால் தமிழிச்சிக்கும் மீட்க உதவலாமே.....// கண்டுபிடித்த உடனே செய்ய வேண்டிய ஒன்று. இப்ப காலம் கடந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஹாக்கர் என் அகவுண்டை எடுத்தவுடன், என்னிடம் ஒரு session இருந்தது அதனால் முடிந்தது.

IdlyVadai said...

//idlyvadai 2007 name is idiotic. What will users think abt u r url when 2008 starts, better stick to idlyvadai.wordpress.com//


idlyvadai என்றால் கூட அப்படி தான் நினைப்பார்கள் ::-), ஏதோ மூணு வாருஷமா உங்களுக்கு கேட்டுகேட்டு பழகியதால் இப்படி சொல்றீங்க. நன்றி

//The person behind the attack is pathivan@gmail.com and the site which helped is http://www2.fiberbit.net/form/mailto.cgi//

ஆமாம் நானும் பார்த்தேன். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியிருக்கேன்.

//cheena (சீனா)
வாழ்த்துகள் - சில காலம் கழித்தாவது மீட்ட கதையைச் சொல்லவும்//

நிச்சயமா சொல்றேன். நன்றி

Ram Vibhakar said...

வாழ்த்துக்கள் இட்லி வடையாரே!! இதில் ஏதோ சதி இருக்கும் என்றே தோன்றுகிறது.. உங்கள் gmail id recover செய்த பிறகு holyox@gmail.com இன் ip address ஐ கண்டுபிடியுங்கள். அதற்கு உங்களுக்கு இந்த சுட்டி உதவியாக இருக்கும் http://aruljohn.com/info/howtofindipaddress/. இதை வைத்து அவனது Location ஐ கண்டுபிடிக்கலாம்.

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துக்கள், திரும்ப வந்ததுக்கு. அப்புறம் இந்த இட்லிக்கு ஊற வைக்கும்போது அவல் போடறது இருக்கே, அதிலே ரொம்ப கவனமா இருக்கணும், கொஞ்சம் கூடப் போயிடுச்சுன்னாலும் காலை வாரிடும், அதையும் சேர்த்தே சொல்லுங்க, டிப்ஸ் கொடுக்கும்போது! :P

Rajasekar said...

//The person behind the attack is pathivan@gmail.com and the site which helped is http://www2.fiberbit.net/form/mailto.cgi//

pathivan is a one more id from malayasia moorthi and he is also involved in a group blog organized from nammakal sibi

Anonymous said...

வாழ்த்துக்கள்! :-))))

-நேற்று உங்களோடு 'சாட்'டியவன்

~பொடியன்~ said...

//ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com //

மீண்டு(ம்) வந்த்ததெல்லாம் சரிதான். அறிமுகத்துல உங்க ஐடி ய மாத்தற ஐடியா இல்லயா அங்கிள்?

டொமைன்க்கும் சப் டொமைன்க்கும் கூடவா வித்தியாசம் தெரியாம மாட்டிப்பிங்க? அதுவும் ஆர்குட் பேர்ல.. என்ன அங்கிள் நீங்க? :))
( இதான் யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பார்க்கிறது)ச்ச்சும்மா டமாசு மாமா...

IdlyVadai said...

பொடியன் நீங்க சொல்றது சரி தான். அடுத்த முறை இந்த மாதிரி மெயில் வந்தா உங்களூக்கு ஃபார்வட் செய்கிறேன்.

அறிமுகத்தில ஐடி மாத்திட்டேன். வேற எங்காவது இருந்தால் சொல்லுங்க நன்றி.

நாகை சிவா said...

நல்ல காலம் பிறக்கும் பாத்தா தப்பிச்சுட்டீங்களே ;)

ஐந்தாவது வருடத்தில் அடி(!!) எடுத்து வைப்பதுக்கு வாழ்த்துக்கள்....

சு. க்ருபா ஷங்கர் said...

நான் நீயா, நீ நானா? நீயா நானா?

Anonymous said...

வாழ்த்துக்கள். நானும் கேனையாய் போய் அதுல மாட்டிக்கொண்டேன். ஆனால் உடன் PW மாத்தி தப்பி விட்டேன்.
நடராஜன்

IdlyVadai said...

//நான் நீயா, நீ நானா? நீயா நானா?//

வேகமா படிச்சா 'நீ நாயா' என்பது போல இருக்கு :-)