பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 08, 2007

FLASH: குமாரசாமி ராஜினாமா செய்கிறார்

கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பகிர்வு விவகாரம் புயலை கிளப்பியுள்ள நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு மாநில கவர்னர் ராமேஸ்வர் தாகூர் இன்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து ராஜ் பவன் சென்ற முதல்வர் கவர்னருடன் பேசினார். அப்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி நடத்த மெஜாரிட்டி இல்லாததை சுட்டி காட்டிய கவர்னர், ராஜினாமா பற்றியும் குமாரசாமியிடம் பேசினார். இதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமி இன்று ராஜினாமா செய்யவிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காது. ஆட்சிப் பகிர்வு பிரச்னையால் பெரும்பான்மை இழந்த குமாரசாமி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்துமாறு கவர்னரை கேட்டுக் கொள்‌கிறோம் என்றனர்.

0 Comments: