பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 01, 2007

FLASH: உண்ணாவிரதம் வாபஸ்

தமிழகத்தில் பந்த் நடத்தக்கூடாது என்று நேற்று பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாததை கண்டித்த சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு முதல்வர் கருணாநிதி அல்லது தமிழக தலைமை செயலாளருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

"“If this is the attitude of the DMK, the UPA government should not feel shy of dismissing it and imposing President's Rule"

"If there is no compliance with our order, it is complete breakdown of Constitutional machinery. We will then have to direct the government to impose President's rule" - Court


11.30 மணியளவில் கருணாநிதி உண்ணாவிரத மேடையில் இருந்து புறப்பட்டு சென்றார். பா.ம.க. நிறுவனர் ராமதாசும் பாதி‌யிலேயே உண்ணாவிரதத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

உச்ச நீதி மன்ற கண்டனம் பற்றி தனக்கு ஒன்னும் தெரியாது - கலைஞர்

* எங்க அலுவலகத்தில் 365 வந்தாலும் வரும் சீக்கிரம் கிளம்புங்க என்று சொல்லிவிட்டார்கள்.

* நேற்று சைதாபேட்டை, தி.நகர், மற்றும் பல இடங்களில் நாளை கடையை மூடுங்க இல்லை கடையே இருக்காது என்று திமுகவினர் அன்பாக எச்சரிக்கை செய்தார்கள். அப்படியும் சில கடைகள் இன்று திறந்திருக்கிறது.

* டாஸ்மார்க் கடைகள் திறந்திருக்கிறது :-)

* சென்னை உள்ளிட்ட நகரங்களில் மதியம் 12 மணி முதல் பஸ்கள் ஓடத் துவங்கின.

* கலைஞர் கொஞ்சம் மூடவுட் ஆகியிருக்கிறார். எந்த கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறார்.

* உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் கண்ணாடிகள் உடைப்பு.(அவர்களே விருப்பபட்டு கண்ணாடிகளை உடைத்தனர் என்று கூட சொல்லலாம் :-) )

* உண்ணாவிரதத்தில்பங்கேற்ற கலைஞர், அமைச்சர்கள் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, அன்பழகன் உள்ளிட்டோரும் தலைமை செயலகத்துக்கு சென்று வேலையை துவங்கினர். அவர்களே விருப்பபட்டு வேலைக்கு சென்றார்கள்.

தலைமைச் செயலாளர்

தமிழகத்தில் இன்று பேருந்துகள் ஓடத் தயாராகவே இருக்கின்றன. ஊழியர்கள் வராததால் பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் 51 பேருந்துகள் மட்டுமே ஓடியுள்ளன. நிலைமை இன்னும் சில மணி நேரங்களில் படிப்படியாக சீரடையும் என்றார்

( இரண்டு மணியில் செய்ய முடிந்ததை ஏன் இதை காலையிலேயே செய்யவில்லை )


மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி
முதல்வர் கருணாநிதி மிகப் பெரிய தலைவர். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். அவர் உச்சநீதிமன்றத்திற்கு முரணாக நடக்கவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறவில்லை. மகாத்மா காந்திய வழியைத்தான் அவர் பின்பற்றுகிறார். காந்தி போதித்த அற வழியில்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசும், முதல்வர் கருணாநிதியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மிக மிக முக்கியமானவர்கள்.

updates follow..

26 Comments:

Anonymous said...

இட்லி வடை

நான் அமெரிக்காவில் இருந்து உங்கள் பதிவையும் தினமலரையும் ஒரே நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவில் செய்தி முன் கூட்டியே வருகிறது நீங்கள் போட்டு 15 நிமிடம் கழித்துதான் தினமலர் உண்ணாவிரத வெளிநடப்புச் செய்தியைப் போடுகிறது. செய்தியை சுடச் சுடத் தரும் இட்லி வடை வாழ்க. கருணாநிதியை சுப்ரீம் கோர்ட் கைது செய்ய வேண்டும் அல்லது அது கோர்ட்டை இழுத்து மூடி விட்டுப் போகலாம்,

Anonymous said...

It is likely that MK and Chief Secretary will face music before courts. As a face saving device they may run buses now and allow shops to be opened. Beyond a point congress will not support him. The irony is that of all parties AIADMK talks of violation of court's order and goes to court seeking contempt of court against DMK government.

Anonymous said...

This is what TR balu has said about SC. This is available in the NDTV site.

" ''Courts are not infallible. That is why there are higher courts of appeal. What was the need for a special hearing on Sunday? Haven't we heard of corruption in the judiciary?'' said T R Baalu, Union Shipping Minister."

So, these guys are sitting on pride and say any thing even about SC.

Anonymous said...

கருணாநிதி டி ஆர் பாலு சீஃப் செகரட்டரி, டி ஜி பி அனைவரையும் திஹார் ஜெயிலில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் இந்தியா உருப்ப்டடும் இல்லா விட்டால் எவனும் எதையும் மதிக்க மாட்டான். பாக்கிஸ்தானிலும் பர்மாவிலும் கூட ஒழுங்கான ஜனநாயகம் நடக்கிறது. ஒன்று கருணாநிதியை உள்ளே போட வேண்டும் அலல்து சுப்ரீம் கோர்ட்டே ஏதாவது வழி பண்ணி ராணுவ ஆட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இந்தியாவுக்கு அழிவு கருணாநிதியின் வடிவில் வருகிறது

Anonymous said...

நேற்று சூப்ரிம் கோர்ட் அவ்வளவு சொல்லியும் கேட்க மனதில்லாமல் தினவுடன் அடங்காப்பிடாரியாகத் திரியும் இந்த பெருசு ஒரு தடவையாவது சூப்ரீம் கோர்ட் படி ஏறவைக்க வேண்டும்.

இந்த முறை 5 ஆண்டுகள் ஆளாது தூக்கியெறிய இதோ ஒரு வாய்ப்பு, வாருங்கள் வாணவேடிக்கையுடன் கொண்டாடுவோம்....

Anonymous said...

Jai sriRam...Jai sriRam...Jai sriRam

Anonymous said...

ராமரை அவமரியாதையாய் பேசுபவன் விளங்க மாட்டான். இந்த முறை சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு காட்டவில்லையெனில் நாளைக்கு ஒரு நாய் கூட சுப்ரீம் கோர்ட்டை மதிக்காது. கருணாநிதியை சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்து உள்ளேயும் தள்ளினால் நான் இட்லி வடைக்கு ஸ்பெஷல் ட்ரீட் அளிக்கிறேன், எந்த ஹோட்டலில் வேண்டும் என்று இட்லி வடை தெரிவிக்கவும்

Tharuthalai said...

மனு நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வண்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் என்பது அவாள்களுக்கு மட்டும் அல்ல.

கருணாநிதி மனு நீதிமன்ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும். ஆட்சி மீது கைவைத்துப் பார்க்கட்டும். தேர்தல் வந்தால் அது தி.மு.கவுக்கு சாதகமாகவே இருக்கும்.

சட்டம் என்ற குப்பையை வைத்துக்கு கொண்டு இன்னமும் மனு நீதியை நிலைநாட்டும் இந்த மனு நீதிமன்றத்தை எதிர்த்து போராட்டங்களும் கண்டனங்னகலும் வெளிப்படையாக தெரிவிப்போம்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

.நீதி அமைப்புக்கள் மூன்று நாட்களுக்குள் இரு வேறு தீர்ப்புகளை
அளித்துள்ளன.நீதிமன்றத்தை அவமதிப்பதில் அ.தி.மு.கவும் தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
பாரதீய ஜனதா தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்துக்களின் மன உணர்வுகளை
பயன்படுத்த எண்ணுகிறது.மொத்தத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்காக மக்களுக்கு இடையூறு
எற்படுத்தியுள்ளன. சபாஷ்! நடக்கட்டும் நாடகம்!

Anonymous said...

MK attends to work at Secretariat. Ministers are also work. So no holiday for idlyvadai :). Jokes apart the very fact that MK attends office, and breaks the fast mid way and refuses to comment on strictures indicate that he is now a scared person.
The bandh and fast have ended as
a fiasco. They are forced to run
buses. MK by now would have realised that with 40 MPs he cannot do whatever he wants or get away with his actions at all times.
The SC has done a wonderful job in
instilling fear in him.

Anonymous said...

It is likely that MK and Chief Secretary will face music before courts. As a face saving device they may run buses now and allow shops to be opened.

I am the annoy who wrote this sitting somewhere in the world.

Anonymous said...

//மனு நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வண்மையாகக் கண்டிக்கிறேன்.//

ஏய்யா தருதலை...நீ தருதலைங்கறத நல்லா நிருபிக்கறய்யா.....

இதே சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜெ.வை எதிர்த்து போனது உங்க கழகம் தானே, உங்க பொதுச் செயலாளர் தானே கேஸ் போட்டார்?. அப்போ இந்த கோர்ட் மனுகோர்ட்டா இருந்ததா இல்லை கழகத்தின் உடன்பிறந்த கோர்ட்டா இருந்ததா?

எப்படிய்யா இப்படி உங்க நோக்கத்துக்கு எதிரா (தவறு, இது உங்க நோக்கம் கூட கிடையாது, உங்கள் ஆண்டகையின் நோக்கம்) ஒன்று நடக்கிறது (அ) எதிர்ப்புன்ன உடன் அதனை மனு மண்ணாங்கட்டின்னு சொல்ல தெரியுது?

Sambar Vadai said...

MK seems to be missing a genuine helping hand in Delhi (like Dayanidhi Maran or Murasoli Maran). They (DM or MM) would have guided differently.
With Sonia in Newyork and Manmohan indisposed, and SC rapping the both centre and state, the next steps of MK will be watched. People like TR Balu (who has been handling delhi affairs) did not anticipate the North Indian backlash (on Ramar issue) and the subsequent SC rappings properly. And there was none in Cong.high command echleons to provide right tips to MK.

Even now it is not late. if only MK can get some good advisor at this point he can come out triumpant (by forcing his resignation - and elevate Stalin at this juncture) and then fight this issue in public forums.

IdlyVadai said...

Sambar Vadai நீங்க சொல்லுவதில் உண்மை இருக்கு. சன் டிவி, தயாநிதி மாறன் இல்லாதது இவர்களுக்கு ஒரு நஷ்டம் தான்.

Anonymous said...

இவர், இவரது அமைச்சர்கள் ஒருநாள் வேலை பார்க்கவில்லை என்றால் ஒன்றும் பெரிதா ஆகாது, ஆனா மற்ற தனியார் அலுவலகங்கள், பஸ், கடைகளை மிரட்டுவதும்?

Tharuthalai said...

மனு அநீதி மன்றத்த வேற எப்படி சொல்ல முடியும்.
கருணாநிதி செய்யறது சரியா தப்பங்கறது வேற விவாதம்.

ராஸ்கல் ராமன் பேரச் சொல்லி திட்டத்த நிறுத்துனது யாரு அதுக்கு வெளக்கு புடிச்சிகிட்டு போன மனு அநீதி மன்ரத்த அப்படியே விடுறதா?

மனு அநீதி மன்றத்தின் செயல்களை வெளிச்சம் போட்டுகாட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத மனு அநீதி மன்றத்து தூக்கி கிட்டு போனது செல்வி ஜெயலலிதா. கருனாநிதி இல்ல.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

அரவிந்தன் said...

ஆறு மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வினை உயர்த்தும் ஒரு திட்டத்திற்க்கு பரதேசி கட்சிகள் இல்லாத ராமன் பெயரில் முட்டுகட்டை போடுவதெல்லாம் உச்ச நீதிமன்றத்திற்க்கு தெரியவில்லை.

மக்கள் நலனுக்காக நடத்தப்படும் ஒரு அறவழிப்போராட்டத்தை ஆட்சிகலைப்பு என்ற பெயரில் தடுக்க நினைக்கும் முயற்சி முறியடிக்கப்படும்.

இட்டிலியாரே உங்கள் கருத்து என்ன

அன்புடன்
அரவிந்தன்

Anonymous said...

Idly Vadai, Hats off to you for instant news flashes & updates. As I had mentioned in my comments to your other post. TN Chief Mafia had ran away from his FAST UNTO LUNCH (Ha..Ha...Thunda Kaanom...Hey...Hey...Thuniya Kaanom). You know one thing? The TN Govt. in its submissions to SC on Sunday had given an undertaking that TN GOVT IS NOT AGAINST AN ALTERNATIVE ALIGNMENT TO SETHU PROJECT. So much for this hyprocrites who inflame passions among the masses in public & do the opposite quitely in order to safeguard their official/ constitutional positions. Yet another BULTI from TN Chief Mafia is his reciting a HINDI POEM in sunday's public meeting. Late Gyanodhayam or Kan Ketta Pinne Suriya Namaskaram by Manjal Thundu Mafia chief.

அருண்மொழி said...

//So, these guys are sitting on pride and say any thing even about SC.//

SC?? SO WHAT?? மனுநீதிமான் சபர்வால் பற்றிய செய்திகளை படிக்கவில்லையா? Please read it.

IdlyVadai said...

//ஆறு மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வினை உயர்த்தும் ஒரு திட்டத்திற்க்கு பரதேசி கட்சிகள் இல்லாத ராமன் பெயரில் முட்டுகட்டை போடுவதெல்லாம் உச்ச நீதிமன்றத்திற்க்கு தெரியவில்லை.

மக்கள் நலனுக்காக நடத்தப்படும் ஒரு அறவழிப்போராட்டத்தை ஆட்சிகலைப்பு என்ற பெயரில் தடுக்க நினைக்கும் முயற்சி முறியடிக்கப்படும்.

இட்டிலியாரே உங்கள் கருத்து என்ன//

என்னிடம் கருத்து கேட்டு என்னை பெரியாளாக ஆக்கிவிடாதீர்கள்.

உச்ச நீதி மன்றத்தின் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.

இந்துக்களுக்கு ராமர் இருக்கிறார். மற்றவர்களுக்கு ராமன் இல்லை. ஆனால் சப்போர்ட் செய்யும் மக்களில் 90% பேருக்கு ராமர் இருக்கிறார். தெரியுமா ?

சேது கால்வாய் திட்டதை நிறைவேற்றட்டும் அதில் தப்பில்லை. இந்து மதத்தை, நம்பிக்கையை ஏன் தூற்றனும். அதுவும் ஒரு முதலமைச்சர் ? என்னை பரதேசி என்றோ பன்னாடை என்றோ கூப்பிட்டுக்கொள்ளுங்கள் எனக்கு ஆட்சோபனை இல்லை. நான் இந்து என்று சொல்லிக்கொள்ளுவதில் பெருமை படுகிறேன்.

நேற்று நாங்கள் இருக்கும் தெருவில் கடைகளை மூடிவிட வேண்டும் இல்லை என்றால் கடைகள் இருக்காது என்று திமுக தொண்டர்கள் அன்பு கட்டளை இட்டார்கள். இன்று சொரனைகட்ட சிலர் கடைகளை திறந்து வைத்திருந்தார்கள். இவர்களை என்ன சொல்லுவது.

சொரனையுள்ளவர்களுக்கு இன்று ஒரு நாள் நஷ்டம்.

நீங்கள் டியூப் லைட் இல்லை அதனால் உங்களுக்கு சொல்லுகிறேன் இந்த தகவலை - பந்த் நடத்தினால் 700 கோடி நஷ்டம் என்று உங்களுக்கு தெரியுமா ? இவ்வளவு கிராமங்களுக்கு டியூப் லைட் போடலாம் தெரியுமா ?

ஏற்கனவே இன்னிக்கு நிறைய சிரித்துவிட்டேன், நீங்க வேற அறவழி போராட்டம் என்று சொல்லி என் வயிறை புண்ணாக்காதீர்கள்.

கடைசியாக...

"கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பது பிரச்னையே அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்னை"


இது கலைஞர் பாபா விழாவில் சொன்னது.

IdlyVadai said...

அனானி நன்றி

VS said...

Dear Idly Vadai and others,

Read Gnanis' Oopakkangal in Vikatan. Sharp opinion without bias. More relevant to todays' happenings.

Anonymous said...

Dear Idly Vadai,

Am a regular follower of your blog!
For God sake, don't publish comments which are insulting Hindu Gods & hurting the readers' sentiments!

Thanks!

IdlyVadai said...

//Am a regular follower of your blog!
For God sake, don't publish comments which are insulting Hindu Gods & hurting the readers' sentiments!//

கெட்டவார்த்தை, மற்றும் அடிக்கடி சொல்லும் சில வார்த்தைகளை கொண்ட பின்னூட்டங்களை அனுமதிப்பதில்ல. நன்றி.

IdlyVadai said...

//Read Gnanis' Oopakkangal in Vikatan. Sharp opinion without bias. More relevant to todays' happenings.//
போன வாரமே படித்து விட்டு Draftல் வைத்திருந்தேன். நினைவூட்டியதற்கு நன்றி. பிரசுரித்துவிட்டேன்.

Anonymous said...

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் ஒரு தலித்.

இருந்தும் மனுநீதி மன்றம் என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

அஞ்சா நெஞ்சன் அழகிரி தலைமை நீதிபதியாக தமிழினத்தலைவரால் நியமிக்கப்பட்டால்தான் அதனை, தனக்கு எதிராக தீர்ப்பு வரும்போதெல்லாம் மனுநீதி மன்றம் என்று சொல்வதை நிறுத்துவார்கள்.