பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 01, 2007

FLASH: மீண்டும் உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம்

தமிழகத்தில் பந்த் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்த போதிலும் மாநிலம் முழுவதும் இன்று பஸ்கள் ஓடவில்லை. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் பஸ்கள் ஓடாததற்கும், தி.மு.க. நடத்தும் போராட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு தயங்கக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்து திமுக தொண்டர்கள் தங்கள் பண்பாட்டை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஜாதியை ஆராய்ந்து, கண்டனம் செய்வார். கலைஞர்

மற்ற செய்திக்கு கீழே.. ( உங்க இடத்தில் நிலவரங்களை பின்னூட்டமாக போடலாம் )


மாநிலம் முழுவதும் பஸ்கள் எதுவும் இன்று ஓடவில்லை. சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி என அனைத்து நகரங்களிலும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடாததால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த் இல்லை என்பது வெறும் கண்துடைப்பாகிப் போனது.

கோவை:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை சாய்பாபா காலனியில் ஓருசில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த ஒரு கும்பல் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியது. கற்களை வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

மதுரை
மதுரையில் இயக்கப்பட்ட தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கப்பட்டது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசியது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.

கரூர்
கருர் பஸ் நிலையம் அருகில் கோவை ரோட்டை வழிமறித்து பிரமாண்ட உண்ணாவிரத பந்தல் போடப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளும் பங்கு கொண்டுள்ளன. மேலும் வர்த்தக நிறுவனங்களை மூடச் சொல்லியும் திமுகவினர் நிர்பந்தித்து வருகின்றனர்.
இதனால் கரூரில் கடைகள், ஹோட்டல்கள், மெடிக்கல் ஷாப்கள், பால் வழங்கும் நிலையங்கள்,பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் அரசு, தனியார் பஸ்கள் ஒடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.


7 Comments:

We The People said...

எல்லா எரியாவிலும் டாஸ்மாக் திறந்திருக்குங்கோ!!!

Anonymous said...

from trichy, my uncle told that when he went for morning walk,gundas came and asked to close the hotel near main guard gate. Also they told the passengers waiting in chathiram bus stand to go away as they wont allow the buses to run. a police constable in kaki uniform standing in the busstand doesnt even care about this.

ithellam oru democratic country-a? che !
-ananth

அருண்மொழி said...

//உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஜாதியை ஆராய்ந்து, கண்டனம் செய்வார். கலைஞர்//

இதில் என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கு?? அவா நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே நன்னா தெரியுமே!!!

Anonymous said...

சுப்ரீம் கோர்ட் கருணாநிதியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் அல்லது கோர்ட்டை இழுத்து மூடி விட்டுப் போக வேண்டும்.

Anonymous said...

If karunas is able to understand the supreme court's warning and if he has any sense of shame he has to quit the government , go home and continue his fast along with his henchmen indefinitely. A lot of food materials can be saved.

Anonymous said...

புதுக்கோட்டைக்கு ஒருமுறை இங்கிருந்த எனது நண்பர் அருணாச்சலத்தின் வீட்டுக்கு வந்தேன். நான் திருவாரூரிலிருந்து வர வேண்டும். நான் கிளம்ப வேண்டிய நேரத்தில் எனது மனைவிக்குப் உயிருக்குப் போராட வேண்டிய சூழ்நிலை. டாக்டர்கள் கை விட்டு விட்டார்கள். போவதா, வேண்டாமா என்று நான் தயங்கிக் கொண்டிருந்தேன்.அப்போது அருணாச்சலமே அங்கு வந்து விட்டார். மனைவியைப் பாருங்கள் என்றேன். எப்படியும் கூட்டம் நடத்த வேண்டும், விளம்பரம் எல்லாம் செய்து விட்டேன் என்றார் அவர். எனது மனைவியின் நிலையைப் பார்த்து அவரும் அழுதார். வீட்டில் உள்ளவர்களும் அழுதார்கள். இந்த நிலையில் கூட்டிச் செல்கிறீர்களே என்று அருணாச்சலத்திடம் கேட்டார்கள். கேட்டவர்களின் கண்ணீரைத் துடைத்து விட்டு, வாருங்கள் போகலாம் என்று அருணாச்சலத்துடன் இங்கு வந்தேன். பேசி விட்டுத் திரும்பிச் செல்ல ரயில்லோ, பேருந்தோ கிடைக்காத காரணத்தால் ஒரு லாரியில் ஏறி திருவாரூரைச் சேர்ந்தேன்.என்னுடைய மனைவியைப் பார்க்க உள்ளே போனால், மனைவியைப் பார்க்க முடியவில்லை. மனைவியின் சடலத்தைத்தான் பார்த்தேன்.-ரயில்லோ, பேருந்தோ கிடைக்காத காரணத்தால் ஒரு லாரியில் ஏறி திருவாரூரைச் சேர்ந்தேன்- Do you remember this? If you conduct Bandh how People who want to go and meet their family can use Bus or train or lorry! If you sufferd, you tom tom it for 100 years! But others suffering, you dont bother!

balaji said...

நிச்சயமாக பாதிப்பு எல்லா இடத்திலும் இருந்தது,......இதில் உச்சக்கட்டமாக தலைமை செயலர் கூறியிருப்பதுதான் மொத்தம் 61 பேருந்துகள்தான் ஓடின இன்னும் ஒரு மணி நேரத்தில் நிலைமை சரியாகிவிடும் அவர் சொன்னபோது நேரம் சரியாக 1 மணி,.........ஆனால் இப்பொழுதும் நிலைமை (இரவு9,30) சரியாகவில்லை,........இன்று ரெயில்கள் மட்டும் ஓடின என்ன பயன்......ஆட்டோக்களுக்கு இன்
று நல்ல டிமாண்ட் மொத்தத்தில் இந்த பந்த் மக்கள் விரோத பந்த் மக்களுக்கு பயணளிக்கக்கூடியதல்ல,.........