பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 30, 2007

கிருஷ்ணசாமியைக் காத்த ராமர் டாலர்!

கிருஷ்ணசாமியைக் காத்த ராமர் டாலர்! இந்த பதிவுக்கு ஏதாவது நான் கமெண்ட் அடித்தால் அது நாகரிகமாக இருக்காது. ராமர் பத்தியையும், துன்பத்தில் இருக்கும் ஒருவரையும் கிண்டல் அடிப்பது போல இருக்கும். அதனால் செய்தி மட்டும் கீழே...

தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமியை அவர் அணிந்திருந்த ராமர் படம் போட்ட டாலர் தான் காப்பாற்றியுள்ளது. நெஞ்சுக்குப் பாயவிருந்த வேல் கம்பு டாலரில் பட்டதால், வழுக்கி வயிற்றில் பாய்ந்துள்ளது.

மதுரை அருகே நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை ஒரு கும்பல் வழி மறித்து பயங்கரத் தாக்குதல் நடத்தியது. வேல் கம்பால் அவரைக் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணசாமியைக் காத்தது அவர் அணிந்திருந்த ராமர் படம் போட்ட டாலர்தான் என்று காங்கிரஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ராமர்தான் எங்களது தலைவரின் உயிரைக் காத்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது, எங்களது தலைவர் கிருஷ்ணசாமி, பெரிய டாலர் ஒன்றை அணிந்திருந்தார். அதில் ராமர் படம் இருந்தது. வன்முறைக் கும்பல் வேல் கம்பால் குத்தியபோது அந்த டாலர் மீது வேல் கம்பு பாய்ந்தது.

டாலரில் வேல் கம்பு பாய்ந்ததால், நெஞ்சில் குத்துப் படாமல் தலைவர் தப்பித்தார். அந்த டாலர் மட்டும் இல்லாதிருந்தால் நிச்சயம் எங்களது தலைவரின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறினர்.

0 Comments: