பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2007

நிலாவில் சாய்பாபா தரிசனம்

நிலாவில் சாய்பாபா தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டதால் புட்டபர்த்தியில் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா ஆசிரமம் உள்ளது. அங்குள்ள பிரசாந்தி நிலையத்தில் பக்தர்களிடையே நேற்று மாலை ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, 'விஸ்வரூப விராத்' தரிசனம் தருவார், அதை காண காத்திருங்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 'விஸ்வரூப விராத்' தரிசனம் என்பது, நிலாவில் தோன்றி தரிசனம் கொடுப்பது ஆகும்.

இதனால் நிலாவில் சாய்பாபாவின் தோற்றத்தை காண பக்தர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. தங்களது உறவினர்களும், நண்பர்களும் கூட அந்த தரிசனத்தை காண வேண்டும் என்று அந்த அறிவிப்பை கேட்ட பக்தர்கள் நினைத்தனர். எனவே, உடனடியாக தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு செல்போன் மூலமாகவும், இ&மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பக்தர்கள் ஆர்வ மிகுதியால் புட்டபர்த்திக்கு படையெடுத்தனர். மாலை 6.30 மணியளவில் புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் திரண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர். சாய்பாபா தரிசனம் எப்படி இருக்கும் என்பதை காண ஒவ்வொருவர் முகத்திலும் பரவசம் நிறைந்து காணப்பட்டது.

இந்த காட்சியை காண சாய்பாபாவும் மைதானத்துக்கு வந்தார். அவரை பக்தர்கள் மேள, தாளங்களுடன் வரவேற்றனர். சாய்பாபா உள்பட அனைவரும் வானத்தை பார்த்தபடியே இருந்தனர். ஆனால் வானத்தில் சந்திரனே வரவில்லை. இதனால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்னொரு நாள் தரிசனம் அளிப்பதாக கூறிவிட்டு சாய்பாபா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இருப்பினும், சாய்பாபா மனம் மாறி இன்றே தரிசனம் தருவார் என்று கருதி சில பக்தர்கள் தொடர்ந்து அங்கேயே வானத்தை பார்த்தபடி இருந்தனர்.

கோபலபுரத்தில் : கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன் பார்த்தார்கள் என்று சொல்லுகிறார்கள். கலைஞர் ஏமாற்றம் அடைந்து இரவு தூங்கியபின் கனவில் பெரியார், அண்ணா, சாய்பாபா தோன்றினார்கள்.

டிவியில்: ரஜினி மனிதன் படத்தில் "வானத்தை பார்த்தேன்., பூமியை பார்த்தேன்.. மனிஷனை இன்னும் பார்கலையே.." என்ற பாடல் நேயர் விருப்பமாக வந்தது.


4 Comments:

ஹரன்பிரசன்னா said...

//நிலாவில் சாய்பாபா தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டதால் //

அட ராமா!

//கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன் பார்த்தார்கள் என்று சொல்லுகிறார்கள். கலைஞர் ஏமாற்றம் அடைந்து இரவு தூங்கியபின் கனவில் பெரியார், அண்ணா, சாய்பாபா தோன்றினார்கள். //

:))

மஸ்கிட்டோ மணி said...

நேற்று தேய்பிறை நவமி. சந்திரோதயம் இரவு 2.30 க்கு பிறகு தான் நடக்கும்.. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் வானத்தை பார்த்தால் எப்படி?

Anonymous said...

Hello,
I'm regular reader of your blog. Now, I've moved my desktop to Linux. After that I'm unable to read it in FireFox on Linux.
I could just see only boxes of characters..Nothing..
Can you pl. help me..

Anonymous said...

anon:
http://www.mozilla.org/projects/fonts/unix/enabling_truetype.html