பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 24, 2007

டி.ஆர். பாலு - ஆற்காடு வீராசாமி - பெயர் மாற்றம் ஏன் ?

குமுதம் ரிப்போட்டரில் வந்த கட்டுரை. ஃபுரூப் கேட்வர்கள் படிப்பார்கள் என்று நம்புவோம்.


ஒரு பக்கம் பகுத்தறிவு முழக்கம்; மறுபுறம் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் அவலம். இதுதான் சில பகுத்தறிவாளர்களின் நிலை என்பதுதான் வேதனை!

ஆம். தி.மு.க.விலுள்ள முன்னணித் தலைவர்கள் இருவர், தங்கள் பெயர்களில் புதிதாக எழுத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் எண்கணித ஜோதிடம்தான் என்று வரும் செய்திகளே நிஜமான பகுத்தறிவாளர்களை வேதனைப்பட வைக்கின்றன!ஒருவர், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இன்னொருவர், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு. இதுவரை ஆற்காடு என். வீராசாமி என்று குறிப்பிட்டு வந்த ஆற்காட்டார், தற்போது தனது பெயரில் ‘W’ என்ற எழுத்தைச் சேர்த்து வீராஸ்வாமி என்று மாற்றி, அதை அரசிதழிலும் வெளியிட்டு இந்த மாற்றத்தை அதிகாரபூர்வமாக்கியிருக்கிறார்.

1989_91_ல் அமைச்சராக இருந்தபோது இடையிலேயே அமைச்சர் பதவி இழந்ததில் தொடங்கி பல்வேறு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்த ஆற்காட்டாரின் பழைய பெயர் எண் _ 5 (பெயரை ஆங்கிலத்தில் எழுதி, அதன் மதிப்புப்படி வரும் கூட்டுத்தொகை) தற்போது மாற்றம் செய்த பிறகு அது ‘2’ என்று ஆகியிருக்கிறது.

‘‘தன் இருப்பையே உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்த பழைய சூழ்நிலை மாறி, தற்போது கலைஞர் குடும்பத்து விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் அளவுக்கு அண்ணனின் நிலை உயர்ந்திருக்கிறது. முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறார் என்று சொல்வதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, இப்படி ‘பெரிய’ அளவில் விமர்சனம் வருவதே ஒரு முன்னேற்றம் தானே? ஆனால் இதற்கெல்லாம் காரணம், இந்தப் பெயர் மாற்றம் தானா என்று தெரியாது’’ என்கிறார்கள் ஆற்காட்டாரின் ஆதரவாளர்கள்.

அடுத்தது டி.ஆர்.பாலு. இந்தமுறை மன்மோகன்சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, பாலுவுடன் சேர்த்து தயாநிதியும் அமைச்சரானார். பாலு சீனியர் என்றாலும், மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு, அரசியல் விவகாரம் என அனைத்துக் குழுக்களிலும் பாலு புறக்கணிக்கப்பட்டு தயாநிதியே முன்னிறுத்தப்பட்டார்.

அந்தச் சமயத்தில் ரொம்பவே வேதனைப்பட்ட பாலு, ‘நான் சாகும் வரை உங்கள் மீதான விசுவாசத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று கண்ணீர் விட்டுக் கலைஞர் முன்பு சொன்னார். அந்தக் காலகட்டத்தில் இருந்துதான் ஆங்கிலத்தில் தன் பெயரை எழுதும்போது ஒரு ‘A’ சேர்த்து எழுத ஆரம்பித்தார் பாலு. அதாவது, பெயர் எண் ஒன்பது என்று இருந்ததை ‘ஒன்று’ என்று வரும்படி மாற்றினார். சமீப காலமாக பாலு தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது இரண்டு ‘A’க்கள் வரும்படி பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார்.

‘‘இப்போ பார்த்தீர்களா அண்ணனின் செல்வாக்கை. சேது சமுத்திரத் திட்டத்தில் அண்ணனை நோக்கித்தான் இந்தியாவின் பார்வையே இருக்கிறது. தயாநிதியின் மூலமாக வந்த இடைஞ்சலும் காணாமல் போய் விட்டது’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள் பாலுவின் ஆதரவாளர்கள்.

‘‘ஐந்தை பெயர் எண்ணாகக் கொண்ட ஒருவர் இரண்டாக மாற்றுகிறார் என்றால், இப்போதுள்ள நிலையை விட உயர்நிலையை அடைய விரும்புகிறார் என்று அர்த்தம். ஏனென்றால், ஐந்து என்பதே நல்ல எண்தான். அதுபோல ஒன்பதை ஒன்றாக மாற்றியதும், ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத்தான். ஒன்பது என்பது யுத்த எண். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையாக அமைய வாய்ப்பு உண்டு. ஒன்றாம் எண், குறிப்பாக 19 (டி.ஆர்.பாலுவின் புதிய எண்) என்பது மூன்று லோகத்தையும் வசீகரிக்கக் கூடிய எண். ஆனால் வெறும் பெயரை மற்றும் மாற்றினால் நினைத்தது நடந்து விடாது. பிறந்த தேதி, ஜாதகம், ரேகை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து மாற்றம் செய்தால்தான் நினைத்தது நடக்கும்’’ என்கிறார் பிரபல ஜோதிடர் மற்றும் எண் கணித நிபுணர் ஒருவர்.

பகுத்தறிவில் நம்பிக்கை உள்ள இவர்கள் எதை எதிர்பார்த்து இந்த மாற்றங்களைச் செய்தார்களோ தெரியவில்லை. ஆனால் பெண்ணடிமை, ஜாதிக்கொடுமை, சமூக ஏற்றத்தாழ்வு போன்ற விஷயங்களில் நல்ல மாற்றங்களை எதிர்பார்த்த தந்தை பெரியார், நல்லவேளை இந்த மாற்றங்களைப் பார்க்க உயிரோடு இல்லை என்பதுதான் ஆறுதலான விஷயம்!
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

17 Comments:

We The People said...

யாரோ ஒருவர் இவர்கள் உண்மையா செய்திருந்தால் அவர்களை எதாலாயோ அடிப்பேன் சொன்னா மாதிரி இருந்ததே! அவர் என்ன சொல்வார் இந்த ஆதாரத்துக்கு :)

Tharuthalai said...

செருப்படிதான். வேற என்னத்த சொல்ல. பார்க்கலாம் அவர்கள் தரப்பில் இருந்து அடுத்த வாரம் ஏதாவது மறுப்பு வருகிறதா என்று.

கருணாநிதி அமைச்சரவையிலும், மத்தியிலும் இவர்கள் இருப்பது கேவலம். கருணாநிதி இனிமேல் ஊருக்கு உபதேசம் பேசக்கூடாது, வாழையிலையில் கிடப்பதை எடுத்து விழுங்கிவிட்டு பேசாமல் போகவேண்டும்.

இதெல்லாம் என் *கருத்து*. நீ யார் இதைச் சொல்ல, எனக்கு உபதேசம் செய்ய, என்றெல்லம் பட்டையைக் கிளப்பாதீர்கள்.
--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

IdlyVadai said...

தறுதலை நான் போனவாரமே முக்கிய திமுக பிரமுகரிடமே கேட்டேன் அவர் சொன்ன பிறகு தான் உங்களுக்கு பதில் சொல்லியிருந்தேன். இவர்களை விடுங்கள், கலைஞர் என்ன சொல்லுவார் என்று தான் பார்க்க வேண்டும் :-)

Anonymous said...

ஐயா இ.வ,

நீங்க போனவாரம் சொன்னபோது எப்படியெல்லாம் தருதலை டான்ஸ் ஆடினாரு...என்னவெல்லாம் பேசினாரு...இப்போ செருப்படியோட நிருத்திக்கிட்டாரா?....இந்த கம்மனாட்டிகளுக்கு வக்காலத்து வாங்கியதுக்காக தானும் அதே செருப்பால 2 அடி அடிச்சுக்குவாரா இந்த தருதலை?....

We The People said...

//இவர்களை விடுங்கள், கலைஞர் என்ன சொல்லுவார் என்று தான் பார்க்க வேண்டும் :-)//

அவர் மனைவியார் சாய் பாபா காலில் விழுந்த போது எப்படி பார்க்காதது போல, எங்கேயோ பார்த்துக்கிட்டு போட்டு போஸ் கொடுத்தாரோ அதே மாதிரி கண்டுக்காம விட்டுவிடுவார் :))

Tharuthalai said...

அனானி, முதல்ல முகத்த கழுவுங்க...

என்ன ஆடினேன். எந்த ஆதரத்துல இத சொல்றீங்கன்னு கேட்டேன். இதுக்கு பேரு அவங்களுக்கு வக்காலத்து வாங்கறதா? நான் சொன்னது, உண்மையாகவும் இருக்கலாம் அல்லது வழக்கமான சோமறி திரித்தலாகவும் இருக்கலாம் என்பதே. இதுக்கு நான் ஏன் செருப்பால அடிச்சுக்கனும். வேனும்னா அவங்கள அடிக்கிற அந்த செருப்பால உங்களுக்கும் ரெண்டு போடறேன்.

இதற்கு மேல் இந்த விவகாரத்தில் சொல்ல ஒன்றுமில்லை.

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

IdlyVadai said...

//இதற்கு மேல் இந்த விவகாரத்தில் சொல்ல ஒன்றுமில்லை.//

எல்லோருக்கும் : வேற டாப்பிக் போகலாம்.. :-)

IdlyVadai said...

அனானி உங்க கமெண்டை நான் அனுமதிக்கலை. அதை அனுமதித்தால் அனுமார் வால் போல் இந்த விவாதம் போகும். யார் யாருக்கு சபோர்ட் என்று எல்லோருக்கும் தெரியும். So very sorry !

Hariharan # 03985177737685368452 said...

டி.ராஜேந்தரின் வீராச்சாமிக்கு இந்த நியூமராலஜியைப் பயன்படுத்தி "வீராஸ்வாமி"ன்னு போஸ்டர் அடிச்சிருந்தா வெள்ளிவிழாப் படம் ஆகியிருக்குமோ? :-))

பேரோட "விஜய" சேர்த்து விஜய.டி.ராஜேந்தரானதால்தான் அரட்டை அரங்கம், சிறுசேமிப்புத்துறை பதவி கிடைச்சதா?

பகுத்தறிவு எண்கணித செண்டிமெண்ட் சுனாமியில் முழுகி முழுக்க நனைந்து விட்ட தமிழகம் மஞ்சள் துண்டு, பச்சைதுண்டு கொண்டு மட்டுமே துவட்டிக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவுகளின் சுயமரியாதை சிந்தனைகள் சரியான காமடி!

Pondy-Barani said...

I THINK AFTER CHANGE NAME TR BALU
DR.K.K GETTING MORE and More problems like sedhu, kalanithi, center Govt oppose against DR.KK
TR Balu getting benefit after his name change but DR.KK getting trouble....................

அருண்மொழி said...

கேவலமான செயல். கவுண்டரின் dialogueதான் நினைவிற்கு வருகின்றது.

Anonymous said...

// யார் யாருக்கு சபோர்ட் என்று எல்லோருக்கும் தெரியும். So very sorry !//

சரிங்க இ.வ. :)

IdlyVadai said...

அனானி புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

கருணாநிதி கைத்தடி said...

தனியாக ஒரு தொகுப்பு தேவைதானா? இட்லிவடை, இப்ப உள்ளூர சிரிக்க்றது உணரமுடியுதுங்க.

திமுகவில் எல்லா தரபட்ட உடன்பிறப்புக்களும் இருக்கிறார்கள். என்ன செய்ய? :-%

IdlyVadai said...

அனானி உங்க பின்னூட்டதை வெளியிட போவதில்லை. படிக்கும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று நினைக்கிறேன். நன்றி & Sorry!

Anonymous said...

என் பின்னூட்டத்தை வெளியிட மறுத்த இட்லி வடையைக் கண்டித்து வேலை மெனக்கெட்டு அடித்த என்னையே என் பிஞ்ச செருப்பால் நாலு அடி அடித்துக் கொள்கிறேன்

IdlyVadai said...

//என் பின்னூட்டத்தை வெளியிட மறுத்த இட்லி வடையைக் கண்டித்து வேலை மெனக்கெட்டு அடித்த என்னையே என் பிஞ்ச செருப்பால் நாலு அடி அடித்துக் கொள்கிறேன்//

:-)))