பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 19, 2007

நீதிபதிகள் பற்றி பெரியார்..

குமுதத்தில் பெரியார் அவர்கள் நீதிபதிகளை பற்றி கூறிய விமர்சனம் "படித்ததும், கிழித்ததும்" பாமரன் பக்கத்தில் வந்த ஒரு பகுதி..

ஆனால்....இன்று நேற்றல்ல.....47 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் காமராசரையும் அவரது அரசையும் கடுமையாகப் பழி சுமத்தி நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு எதிராக தந்தை பெரியார் போட்ட போடு இருக்கிறதே.....அது பெரும் போடு. கோர்ட்டாவது....அவமதிப்பாவது...கவலையே படவில்லை.
யான் பெற்ற இன்பம் பெற வேண்டாமா இவ்வையகம்? இதோ பெரியார்:


“100 அய்க்கோர்ட் ஜட்ஜுகளும் சரி...ஒரு மந்திரியும் சரி..அய்க்கோர்ட் ஜட்ஜாக இருக்கட்டும்...சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாக இருக்கட்டும். அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு சிப்பந்தி. ஜட்ஜ் என்றால் அவர் கவுரவ ஆளல்ல. சம்பள ஆள்தான். மந்திரி அப்படி அல்லவே? மக்களுடைய பிரதிநிதி! லட்சக்கணக்கான மக்கள் வோட் கொடுத்து நியமித்த ஒரு ஆள். ஆட்சிக்குரியவர். அவருக்கு மேல் மக்கள்தான். யோக்கியமாக இருக்கிற ஒருவன், நாகரீகம் படைத்தவன், அரசியல் தன்மை தெரிந்தவன் மந்திரிகளை எப்படி நினைக்க வேண்டும்? நீ யார்? உனக்கு மேல் அப்பீல் உண்டு. முறைப்படி பார்த்தால் ஜட்ஜுகள் 100க்கு 90 பேர் யோக்கியப் பொறுப்பற்ற குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே? அய்க்கோர்ட் நீதிப் போக்கே இப்படி இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிற அடிப்படையே தப்பாக இருப்பதுதான்.’’

8 Comments:

We The People said...

//இன்னும் மூன்று தொப்பி பாக்கி இருக்கு :-)//

நல்லா பாருங்க தல, நாலு தொப்பி என் கண்ணுக்கு தெரியுதே!!! கண்ணாயிரத்துக்கே நம்ம சொல்லித்தரவேண்டியிருக்கே :))))

IdlyVadai said...

நீங்க என்ன அதிமுக-வில் இருக்கீங்களா தொப்பி கணக்கு சரியா சொல்றீங்க :-)))

We The People said...

//நீங்க என்ன அதிமுக-வில் இருக்கீங்களா தொப்பி கணக்கு சரியா சொல்றீங்க :-)))//

நாங்க எதிர் கட்சியாச்சே!(எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ;)

We The People said...

அந்த காலத்தில் இருந்த நிலையை அன்று பெரியார் சொன்னதை, இன்றைய காலத்துக்கு பொருத்திப்பார்பது கேனத்தனமாக தெரியுது! இன்று அரசியல்வாதிகள் காமராஜ் மாதிரியா இருக்கங்க! நீதிபதி சொன்னா தான் பந்தை விட்டுட்டு வேலைய பார்க்க போகிறார்கள்!!!

ஐயா சாமிகளா இந்த பழைய பேப்பர்களை தேவைக்கு மட்டும் ரெப்ரெண்ஸா வைத்துக்கொள்ளுங்க! பெரியாரே சொல்லியிருக்காரு "இந்த ஈரோடு ராமாசாமி சொன்னான் என்று பகுத்தறியாமல் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்" என்று! எவன் அவர் சொன்னத கேட்கிறான்! It all converted another form of Idol worship!!! This is the IRONY to the core!!!

IdlyVadai said...

W.T.P, என்னடா பெரியார் பதிவில் இவ்வளாவு ஜாலியா பேசிக்கிறோம்-ன்னு பார்த்தேன் ... :-)

( மூணு பின்னூட்டதுக்கு மேல தாங்கது போல )

வெங்கட்ராமன் said...

நாங்க எதிர் கட்சியாச்சே!(எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ;)

அட ஜெய் நீங்களும் நம்மள மாதிரி தானா. . .?

(நம்ம இந்த நிலைமை சிலருக்கு புரிஞ்சா கொஞ்சம் நல்லா இருக்கும்).

Boston Bala said...

துக்ளக் கார்ட்டூன் தூள் :)))

கருணாநிதி கைத்தடி said...

ஜட்ஜுகளும் சரி... மந்திரியும் சரி சம்பள ஆள்தான். காமராசர் ஒன்றும் கருணாநிதி அல்லவே. பெரியார் ஒன்றும் முதல்வர் அல்லவே. நான் ஒன்றும் யோகியன் அல்லவே.

லைப் ஒன்றும் இசி அல்ல.