பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 25, 2007

ஞாநி கட்டுரை - சோ கருத்து

எனக்கு வியப்புதான் ஏற்படுகிறது

கே : கருணாநிதிக்கு ஓய்வு தேவை என்கிற அளவிற்கு உடல்நலம் மிகவும் குன்றியிருப்பதால், அவர் முதல்வராக நீடிப்பது நல்லதல்ல – என்ற கருத்து பற்றி?

ப : ஓய்வெடுப்பதும், எடுக்காததும் அவர் இஷ்டம். ஆனால் இவரை விட உடல்நலம் மிக நன்றாக இருக்கிற முதல்வர்கள் பலரைவிட, கலைஞர்தான் அதிகம் உழைக்கிறார்; ஞாபக சக்தி உட்பட எந்த ஒரு விஷயத்திலும் மற்ற முதல்வர்களை விட அவர் பின்தங்கியிருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் முதல்வர் பதவியை வகிக்க இயலாத அளவிற்கு, அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டதாக நான் நினைக்கவில்லை. "இந்த வயதிலும் இவ்வளவு உழைப்பா?' என்ற வியப்புதான் எனக்கு ஏற்படுகிறது.


ஞாநிக்குள் ஓளிந்திருக்கும் சோ என்று பிதற்றியது ? அச்சச்சோ !

12 Comments:

Anonymous said...

சோமாரின்னெல்லாம் திட்டினவங்க சோவின் இந்த பதிலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்....

துக்ளக் கார்ட்டூன் சூப்பர்...ஆமா எப்போ சொன்னாரு கருணாநிதி அந்தமாதிரி?

Prakash G.R. said...

எனக்கு என்னமோ இட்லிவடையாரோட இன்னோரு புனைப்பேரு தான் ஞானி. :-)

மஸ்கிட்டோ மணி said...

மஞ்சள் நிற highliting ஏன்? உங்களுக்கும் மஞ்சள் ராசியா?

Ananth said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

Anonymous said...

I am happy there are
still balanced people like CHO and
media persons like IDLIVADAI to post his words.

thank you.

RATHNESH said...

//I am happy there are
still balanced people like CHO//

சோ வுடைய பாலன்ஸ் துக்ளக்கை சரியாகப் படிக்கும் எவருக்கும் தெரிந்தது தான். கருணாநிதியைத் திட்டி ஒரு கட்டுரை; பாராட்டி ஒரு பதில் என்று இரண்டும் போட்டுக் கொள்வது. இது சரியானால் பார்த்தாயா நான் அப்போதே சொன்னேன் என்பது; அது தப்பானால், அது நையாண்டி தானே என்பது, இது தானே அவருடைய பாலன்ஸ்?

இட்லி வடையைச் சொல்லுங்கள், அவர் பாலன்ஸானவர்.

IdlyVadai said...

RATHNESH //இட்லி வடையைச் சொல்லுங்கள், அவர் பாலன்ஸானவர்.//

என்ன கொடுமை சரவணன் இது :-)
சிரிக்காமல் இருக்க முடியலை

Anonymous said...

idlyvadai is/are too balanced and neutral to claim that (s)he/they is/are balanced :).

Anonymous said...

rathnesh
This kind of stand every press can able to do. Why they did not taken this easy stand?.........
Cho said that he is very good hard worker.....thats all.....
question is not that for whom?......

Anonymous said...

ஞாநிக்கு மு.க.ஸ்டாலின் பதில்

Friday, 26 October , 2007, 13:06

கரூர்

அண்மையில் ஆனந்த விகடன் வார இதழில் அரசியல் விமரிசகர் ஞாநி, விருப்பப்படி இருக்க விடுங்கள் என ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் 84 வயதில் தள்ளாமையுடன், எழவும் உட்காரவும் இன்னொருவர் உதவி தேவைப்படும் நிலையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி சிரமப்படுவது ஏன்? அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்தவருக்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுத்து, ஆலோசகராகத் தொடரலாமே என்று கேட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கனிமொழியின் தோழி தமிழச்சி, சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தினார். அதில் அறிவுஜீவிகளும் கருணாநிதி பற்றாளர்களும் கலந்துகொண்டு பேசினார்கள். இந்நிலையில் ஞாநியின் கட்டுரைக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற கரூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், "சமீபத்தில் கூட ஒரு வார பத்திரிகையில் கலைஞரால் துணையில்லாமல் நடக்க முடியவில்லை அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது தானே என்று ஒருவர் எழுதி இருக்கிறார். முதல் அமைச்சரின் சிறந்த பணியால் அவர் அகில இந்திய அளவில் பேசப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத எரிச்சலில் அப்படி எழுதி இருக்கிறார்கள். ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் நமது தலைவர் கலைஞர். தள்ளாத வயதிலும் அவர் பாடுபடுவதற்கு காரணம் தமிழ்நாடு தள்ளாடி விடக்கூடாதே என்பதற்காக தான். அவரது பணிகளுக்கு இளைஞர் அணி துணை நிற்கும்" என்று பேசினார்.

www.sify.com

Anonymous said...

நன்றி ! இட்லி வடை ! தசாவதாரம் பற்றி உம்க்கு கமென்ட் செய்த அதே அனானிதான் இப்ப சிபிலிருந்த் காபி பேஸ்ட் செய்துள்ளேன்.

Anonymous said...

I totally agree with Cho. It is left to MK to decide to continue as CM. But time and tide will not wait for anyone. It will do immense good to DMK if youngsters are trained in the art of administration. Nobody needs to take the comments of Gnani seriously. He is a self confessed atheist and rationalist who does not possess positive thinking ability. He has every right to say what he feels justified and Kanimozhi has every right to organize meetings to refute the comments. But to attribute casteist motives to unfavourable comments is deplorable.