பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 02, 2007

உண்ணாவிரத பேச்சுக்கள், அறிக்கைகள்

உண்ணாவிரதம், பந்த், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. பேச்சுக்கள், அறிக்கைகள்... தொகுப்பு...

விஜயகாந்த்


காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கிய கருணாநிதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் அரண்டுபோய் 11.30 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, அவசர அவசரமாக கோட்டைக்கு சென்று, அதிகாரிகள் மூலம் அவரே பந்தை முறியடிக்க உத்தரவு வழங்கினார். அவர் இருந்த இரண்டரை மணிநேரம் உண்ணாவிரதத்தில் அடங்குமா என்பது தெரியவில்லை. ஆனால், புறநானுற்று வீரம் புறமுதுகிட்டு ஓடியது என்பது மட்டும் உண்மை.மானத்தைக் கருதியாவது கருணாநிதி அரசு பதவி விலகுவதே முறையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


சரத்குமார்
"உண்ணாவிரத போராட்டம் என்று முதல்வர் கருணாநிதி நடத்தி இருப்பது, அவருக்கும் அவருடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் எப்படியாவது அரசியல் விளம்பரம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வமும், அவசரமுமே மேலோங்கி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது'


மு.க.ஸ்டாலின்
சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மதிக்காமல் போராட்டத்தை நடத்துகிறோம் என்று வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், நான் கேட்கிறேன், காவிரி பிரச்சினையிலே, கர்நாடகம் மாநிலம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக் கொண்டதா?

அதனால் அங்கு ஆட்சியை கலைத்தார்களா? நதிநீர் பிரச்சினையை பொறுத்த வரையிலே முல்லை பெரியார் அணை பிரச்சினையில், கோர்ட்டு தீர்ப்பை கேரளா ஏற்றுக்கொண்டதா? ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அங்கு ஆட்சியை கலைத்து விட்டார்களா?


மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு
"நீதிமன்றங்களில் சரியாக தீர்ப்பு சொல்லப்படுகிறதா? அப்படியென்றால் கீழ் கோர்ட்டில் நீதிபதி கூறும் தீர்ப்புக்கு மேல் கோர்ட்டில் ஏன் தடை விதிக்கிறார்கள். நீதிபதி தப்பு செய்யவில்லை என்றால் முரண்பாடான தீர்ப்புகள் எப்படி வருகிறது; எந்த காலத்தில் ஞாயிற்றுக் கிழமை கோர்ட் செயல்பட்டுள்ளது'


அமைச்சர் அன்பழகன்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும்"

பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்
பந்த் நடத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த பிறகும், தமிழகம் முழுவதும் நேற்று பந்த் நடந்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அரசியல் சட்டம் சீர்குலைந்து போன சூழ்நிலையை தமிழகம் சந்தித்து வருகிறது. எனவே, அதிகாரத்தில் நீடிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை. சென்னையில் நேற்று பேசிய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, நீதிபதிகளுக்கு எதிராக பேசியுள்ளார். அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும்.


வெங்கையா நாயுடு
"சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி செயல்பட்ட தமிழக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., கூட்டணி கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த பந்த் நடக்கக் கூடாது என்று தமிழக தலைமை செயலருக்கு, சுப்ரீம் கோர்ட் தெளிவாக உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையும் மீறி, தமிழகம் முழுவதும் நேற்று பந்த் போன்ற சூழ்நிலை காணப்பட்டது. இதை மத்திய அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருகிறது. அரசியல் சட்டப்படி பதவி வகித்து வரும் முதல்வர் கருணாநிதி தெருவில் இறங்கி போராடுகிறார். இயல்பு வாழ்க்கை ஏற்பட அனுமதிக்க மறுக்கின்றனர். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்ளாவிடில், மத்தியில் அரசியல் கூட்டணி மாறி விடும்"


பிரகாஷ் காரத்
சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தமிழக அரசு அறிவித்த்திருந்த பந்துக்கு தடை விதித்தது நீதித்துறையின் அத்துமீறல்.வேலை நிறுத்த உரிமைக்கு எதிராக எந்த தடையும் இருக்க முடியாது. முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்தது தொழிற்சங்கங்களின் தனிச்சையான முடிவு. சேது சமுத்திரத் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை தடுக்க நினைப்பதும், அரசியல் லாபத்துக்காக பேசுவதும் கடும் கண்டனத்துக்குரியது


அபிஷேக் சிங்வி
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு மீறியதா என்பதை பற்றி, விசாரணையின் போது வாதங்களின் இறுதியில் தான் கோர்ட் முடிவு செய்யும். அவ்வாறு பிறப்பிக்கும் இறுதி உத்தரவு தான் மத்திய அரசையோ, மாநில அரசையோ கட்டுப்படுத்தும். தமிழகத்தில் நாடு முழுவதும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருப்பது தொடர்பான நிலை குறித்து, சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பான வழக்குடன் விசாரணையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக கருத்து சொல்ல முடியாது.சுப்ரீம் கோர்ட் வாய்மொழியாக, தமிழகத்தில் பந்த் போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால், மாநில அரசை "டிஸ்மிஸ்' செய்ய உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியிருப்பது மத்திய அரசை கட்டுப்படுத்தாது


தாஸ் முன்ஷி
"தமிழக அரசுக்கு பாதிப்பு நேரும் எந்தவித நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கமாட்டோம்; நாங்கள் இதில் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய (மத்திய) அரசின் இன்றியமையாத ஓர் அங்கம்தான் திமுக.
"தமிழக முதல்வர் மு. கருணாநிதி அரசியலில் மிகப்பெரிய ஜாம்பவான்; திமுக கட்சிக்கு மட்டும் அல்ல இந்த தேசம் முழுவதற்குமே வழிகாட்டியாகத் திகழக்கூடிய மதிப்புக்குரிய முக்கிய தலைவர் அவர்.
"மகாத்மா காந்தியின் பிறந்த நாளுக்கு ஒரு தினம் முன்பாக, அவருக்கு மரியாதைச் செலுத்தும் வகையில் -அவர் காட்டிய அகிம்சா வழியில், ஒரு நல்ல கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்.
"மத்திய அரசின் நல்ல முடிவுகளுக்கு மிகப்பெரிய ஆதரவைத்தந்து மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் கருணாநிதி.

"பரம ஏழைகளிடத்திலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்கள் மீதும், சிறுபான்மைச் சமூகத்தவர் மீதும், சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் மீதும் எல்லையில்லாத இரக்கம் கொண்டவர் கருணாநிதி'


ஆற்காடு வீராசாமி பேச்சு
சுப்ரீம் கோர்ட்டு முழு அடைப்புக்கு தடை விதித்தபோது, கோர்ட்டு சொன்னால் என்ன, பஸ்சை நிறுத்திப் பார்ப்போமே என்று என்னைப் போன்றவர்கள் எல்லாம் சொனëனோம். ஆனால் கலைஞர் ஜனநாயகவாதி. கோர்ட்டு தீர்ப்பை மதிப்பவர்.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக மாநிலம் மதிக்கவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மாநிலம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கவில்லை. இப்படி தீர்ப்பை மதிக்காத மாநிலங்கள் எத்தனையோ இருக்கின்றன.

ஆனால், நமது தலைவர் கோர்ட்டு தீர்ப்பை மதிப்பவர், நீதிபதிகளை மதிப்பவர். அதனால்தான் முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தபோது மறு வினாடியே அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், கோர்ட்டுக்கு போய் தமிழக அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கவில்லை. உண்ணாவிரதம் இருக்கிறது. ஆகவே ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார்கள்.

ஒரு அரசாங்கத்தை கலைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமா? இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டு சொல்லி எந்த மாநிலத்திலாவது ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கிறதா?

தமிழ்நாட்டிலே பெரிய ஊர்வலம் நடத்தி வரவேற்பு கொடுத்து தேர்ந்தெடுத்த ஜனாதிபதி பிரதீபா பட்டீல். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தால்தான் ஒரு அரசை கலைக்க முடியும். சுப்ரீம் கோர்ட்டு சொன்ன உடன் ஒரு ஆட்சியை கலைத்து விட மாட்டார்கள்.

ஆட்சியை கலைப்பதற்கு ஜனாதிபதி பிரதீபா யோசித்துப் பார்க்க மாட்டாரா? ஜனாதிபதி, பிரதமரிடம் பேச மாட்டாரா? சோனியா காந்தி அவ்வளவு எளிதில் தி.மு.க. அரசை கலைத்து விடுவாரா? இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் மதிக்கக் கூடிய தலைவர் கலைஞர். அவர்கள் இருக்கிற வரையில் சுப்ரீம் கோர்ட்டு என்ன ஐ.நா. சபை எதுவானாலும் கலைஞர் ஆட்சியை கலைக்க முடியாது.

கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா
நீதித்துறையில் பிரச்சினை இருந்து கொண்டே வருகிறது. நீதிமன்றங்கள் அவற்றின் அதிகார எலëலையை அறிந்து செயல்பட வேண்டும். அதிகார வரம்பை மீறக்கூடாது.ஒரு கோரிக்கைக்காக முழு அடைப்பு போராட்டம், கடை அடைப்பு நடத்துவது எல்லாம் மக்களின் அடிப்படை உரிமை ஆகும். இதை சரியான முறையில் அங்கíகரிக்க வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக மக்கள் தாங்களாகவே முழு அடைப்பை நடத்தி உள்ளனர்.நாடாளுமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலை உருவாகி வருகிறது. சட்டதிட்டங்களை உருவாக்குவது, தேவையான திருத்தங்கள் செய்வது எல்லாம் நாடாளுமன்றம்தான். அந்த சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மட்டும்தான் கோர்ட்டுக்கு உள்ளது.


வைகோ
சேது சமுத்திர திட்டம் பற்றி கருணாநிதி எந்த பிரதமரிடமும் வற்புறுத்தியது இல்லை. பிரதமர்களாக இருந்த இந்திராகாந்தி முதல் ராஜீவ்காந்தி, தேவேகவுடா, குஜ்ரால், வி.பி.சிங், மன்மோகன்சிங் ஆகிய யாரிடமும் இந்த திட்டம் பற்றி வற்புறுத்தவில்லை.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பிரதமர்களிடம் வலியுறுத்தியதாக அவர் நிரூபித்தால் நான் எனது அரசியல் வாழக்கையில் இருந்து விலக தயாராக உள்ளேன்.


இல.கணேசன்
உண்ணாவிரதம் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்கப்பட்டது தான் என்றாலும் இது எதற்காக? யாரை எதிர்த்து என்கின்ற வினா எழுகின்றது. சேது சமுத்திர திட்டத்தை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்பு தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசிடம் உள்ளது. அதே தி.மு.க.வும் காங்கிரசும் அதே அரசை வலியுறுத்த தெருவுக்கு வருவானேன்.

சுப்பிரமணிய சாமி
"சுப்ரீம் கோர்ட்டு பந்த் சட்டவிரோதமானது என்று கூறியிருந்தும் தமிழக அரசு `பந்த்'துக்கு உதவி புரிந்துள்ளது. போக்குவரத்து உயர் அதிகாரி தனியார் பஸ் அதிபர்களிடம் பஸ்களை இயக்கக் கூடாது. இயக்கினால் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று கூறியிருப்பதாக தெரிய வருகிறது. இதே போலத்தான் கடைகளையும் மூடச் செய்துள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்''


ராமதாஸ்
நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படவேண்டும் என்பது பொதுவான விதி. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவங்களுக்கு மட்டும் இதனை வலியுறுத்துவது சரியல்ல.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தபோது, அதனை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் இப்பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டார். நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றமும் அறிவித்தது. ஆனால், கர்நாடக அரசு இறுதி வரை அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் நீதித்துறையை அனுமதித்தது.

நீதித்துறையின் உத்தரவுக்குக் கட்டுப்படாத கர்நாடகத்தின் இந்த போக்கு கண்டிப்படவில்லை. ஆனால், மத்திய அரசோ, வேறு யாரோ கர்நாடக அரசை கவிழ்ப்போம் என்று பயமுறுத்தியது இல்லை. தேசிய ஒருமைப்பாட்டுக்குழுக் கூட்டத்திலும் இது எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

4 Comments:

Thamizhan said...

பரவாயில்லையே!
கலைஞர் அவசரமாக கழிவறைக்குப் போனதைப் பார்த்து அங்கே கழுவிடச் சென்ற விஜயகாந்த் முதல்
உச்ச நீதி மன்ற வெறி பிடித்தவர் பிதற்றியுள்ளார்,பிதற்றல்கள் செல்லாது எழுத்திலே என்ன சொல்லத் துணிகிறார் பார்ப்போம் என்ற் காங்கிரசு,
அளவுக்கு மீறி உளறியுள்ளார் என்ற கம்யூனிஸ்ட் வரை அனைத்தையும் போட்டுள்ளீர்களே,பாராட்டுக்கள்.

உச்ச நீதி மன்றம் தன் பாட்டன் வீடு என்று நினைத்து நடக்கும் வெறியர்களை மக்கள் மன்றம் இம்பீச் செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

Anonymous said...

ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு உச்சநீதிமன்றம் சரியான பதிலை, தமிழக அரசுக்கு கண்டனம் அளிக்க எடுத்துக்கொண்ட அதே மின்னல் வேகத்திலும், அதே அளவுக்கு விலாவாரியாகவும் தருமா ?

தாம் கூட்டணி வகிக்கும் அரசை - அதுவும் சம்பந்தப்பட்ட துறைக்கு தன் கட்சியை சார்ந்தவரே அமைச்சராக இருக்கும்போது (இதில் உச்சகட்ட கொடுமை, அந்த அமைச்சர் ஜந்துவே இதில் கலந்துகொள்வது) - எதிர்த்து பந்த் விடுத்த தமிழக அரசுக்கு நானும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேந்தான்.

ஆனால் ...

உச்சநீதிமன்றம் இதற்கு இவ்வளவு வேகமான கண்டன வார்த்தைகளை பயன்படுத்தியது தேவைதானா ? இதே கண்ணோட்டத்தோடு கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களையும் கண்டனம் செய்து "அவற்றை நீக்க மத்திய அரசு தயங்கக்கூடாது" என்று அறிவுறுத்துமா ? எதிர்த்து மாநில குடிமக்கள் வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டால் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி தன் தீர்ப்பை செயல்படுத்தப்படுவதை மத்திய அரசு மூலம் உறுதிப்படுத்துமா ?

அன்புடன்
முத்துக்குமார்

Bala said...

சொன்னதும் சொல்ல நினத்ததும்.

//தமிழ்நாட்டிலே பெரிய ஊர்வலம் நடத்தி வரவேற்பு கொடுத்து தேர்ந்தெடுத்த ஜனாதிபதி பிரதீபா பட்டீல்...... ஆட்சியை கலைப்பதற்கு ஜனாதிபதி பிரதீபா யோசித்துப் பார்க்க மாட்டாரா?//

"நாங்க சப்போர்ட் பண்ணினதாலேதான் அவங்க இன்னிக்கு ஜனாதிபதி. எங்க மேலேயே கை வச்சிடுவங்களா?"

//மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தால்தான் ஒரு அரசை கலைக்க முடியும். //
"சொந்த செலவில் யாராவது சூன்யம் வச்சுப்பாங்களா? பரிந்துரை செய்தா அதுக்கப்பறம் ஏது மத்திய ஆட்சி, தேர்தல்தான் "

"ஆனால், நமது தலைவர் கோர்ட்டு தீர்ப்பை மதிப்பவர், நீதிபதிகளை மதிப்பவர்."

"தூக்கிப்போட்டு மிதிச்சுடமாட்டோம்?"

ஆனா ஒன்னு, இதையெல்லாம் கன்ணாடி ஃபிரேம் போட்டு மாட்டி வைக்க வேண்டும். ஜெ விற்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டால், அப்போது இவர்கள் சொல்லப் போவதை பார்க்க வேண்டுமே!!

Anonymous said...

Enakku oru doubt..

Supreme court warned state government of dismissal for the banth..Why did karuna stopped his fasting in the middle(sorry beginning) and ran away to office..

Our politicians do not even understand what someone says all they here is 356, aatchi kalaippu...The moment they hear 356 they do not know what they are doing...