பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 17, 2007

கூச்சல், குழப்பம், வெளியேற்றம், வெளிநடப்பு எல்லாம் ஆரம்பம்

தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியது. கூட்டத்துக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற, அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

0 Comments: