பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 01, 2007

சூப்பர் ஸ்டார் டிவி !

தமிழகத்தில் விரைவில் புதிய தொலைக்காட்சி ஓளிபரப்பு ஆரம்பமாக இருக்கின்றது. இதனை ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தொடங்குகிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் சினிமாவில் அனிமேஷன் வேலைகள் செய்து வருகிறார். இதற்கென தனியாக ஸ்டுடியோவும் ஆரம்பித்துள்ளார்.

இவர் தற்போது 'சூப்பர் ஸ்டார்' என்ற புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த இவரது தந்தையும் சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த், மனம் மாறி ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் ஒரு சில நாள்களில் சௌந்தர்யா வெளியிடுவார் என்று தெரிகிறது.

இந்த தொலைக்காட்சியில் மக்களை கவரும் விதத்தில் நிகழ்ச்சியில் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் சௌந்தர்யாவின் அனிமேஷன் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
(செய்தி: தினமணி)
டிவியின் லோகோ என்னவாக இருக்கும் ?

4 Comments:

Anonymous said...

This is just a beginning.

There is a line from baba song

"Puyal varumbothu puchendu kuduppai.."

Anonymous said...

மற்றொரு தலைவலி சன் டிவிக்கு

krishshankar said...

superstar superstar tan

ammukutty said...

innumaa panam pannannum