சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறவில்லை: கருணாநிதி கேள்வி, பதில் அறிக்கை
கேள்வி:- உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசைக் கண் டித்து நீதிபதி பி.என். அகர்வால் தமிழக அரசைக் கலைக்க மத்திய அரசு தயங்கக் கூடாது என்ற அளவிற்கு தெரிவித்த கருத்து பற்றி நீங்கள் விளக்கமாக எதுவும் இதுவரை கூறவில்லையே?
பதில்:- உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மீறாத நிலை யிலேயே ஏதோ
மீறி விட்டதாக கூறும் போது, நீதி மன்றக் கருத்துக் களைப்பற்றி
இப் போதல்ல, நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்ற நிலையிலே உள்ளவன். அதனால் இப்போதும் நான் அந்த உச்ச நீதி மன்ற கருத்து பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. இதைத் தான் நான் அன்று முதல் சொல்லி வருகிறேன்.
ஆனால் உச்ச நீதி மன்ற நீதிபதி ஞாயிற்றுக்கிழமையில் அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கை அவசர அவசரமாக மூன்று மணி நேரம் விசாரித்து அப்போது தெரிவித்த ஒருசில கருத்து பற்றி முக்கியமான ஏடுகளும், பிரபலமான வழக் கறிஞர்களும் தெரிவித்த விமர்சனங்களைத் தொகுத்துத் தர விரும்புகிறேன்.
பத்திரிகைகளில் வெளியான கருத்துக்கள் வருமாறு:-
"நீதிமன்ற விசாரணை களின் போது நீதிபதிகள் சில நேரங்களில் எல்லா விஷ யங்களையும் பற்றி அதிக மாகவே பேசி விடுகிறார்கள். இப்படி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தப்பட்டு வெளி யிடப்படுகின்றன. அவர்களது கருத்துக்கள் நீதி மன்ற ஆவணங்களில் இடம் பெறக் கூடியவை அல்ல. சட்டப்படி அந்தக் கருத்துக்களுக்கு எந்த வித மதிப்பும் கிடை யாது. பொருள்படக் கூடிய வகையில் அவற்றை வெளியிடவும் முடியாது. வாய்மொழியாக இப்படிச் சொல்லப்படும் கருத்துக்கள் நீதி மன்றத்தின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்து வதாகவோ அல்லது கோபத்தை தெரிவிப்பதாகவோ இருக்க லாம். சட்டப்படி அந்தக் கருத்துக் களுக்கு மதிப்பு இல்லை எனினும்கூட, மக்களது மனதை திசை திருப்பக் கூடிய விதத்தில் அமைந்து, அரசியல் ரீதியான விளைவுகளை உண்டாக்கிவிடு கின்றன. இந்திய உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதி அகர்வால், அக்டோபர் 1ந்தேதியன்று தமிழகத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அ.தி.மு.க. சார்பில் சொல்லப்பட்ட வற்றைக் கேட்டு கோபமாக வெளிப்படுத்திய கருத்துக் கள் - நீதிமன்ற நடவடிக்கை களின்படி நியாயப்படுத்திட முடியாதவை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நீதியின் எந்த அளவுகோலிலும் அடங்காதவை.
உச்ச நீதி மன்றத்தில் அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் தமிழகத்தில் சேது சமுத்திரம் தொடர்பான பிரச்சினையில் "பந்த்'' நடத்துவது குறித்து நீதி மன்றம் அளித்த தீர்ப்பு எந்த வகையிலும் பின் பற்றப்படவில்லை என்று தெரிவித்த போது நீதிபதி அகர்வால் "நீங்கள் சொல்வது உண்மையானால், மாநிலத் தில் அரசியல் சட்டம் முழுமையாக செயலற்றுப் போய் விட்டது; தி.மு.க. ஆட்சியை கலைக்க குடியரசு தலைவருக்கு நாங்கள் பரிந்துரை செய்வோம்'' என்று சொன்னதாக பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
மேலும் மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி யின் வலிமைவாய்ந்த பங்கு தாரரான தி.மு.க. அரசின் போக்கு இப்படியிருக்கு மானால், மத்திய அரசு, அந்த மாநில அரசை கலைத்திடத் தயங்கக் கூடாது'' என்றும் நீதிபதி சொல்லியிருக்கிறார்.
அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிறிதுமின்றி, எதிர்த்தரப்பு அது குறித்து என்ன சொல்கிறது என்பதைக் கேட்கக்கூட பொறுமை சிறிது மின்றி தற்காலிகமான முடிவுகளுக்கு நீதிபதி தாவியிருக்கிறார்.
எல்லை மீறிய தன்னிச்சை யான நீதி மன்றத்தின் இந்தப் போக்கு இன்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மை வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் பின்னணியில் பார்க்கும்போது பெரும்பான்மை மக்களால் ஜன நாயக ரீதியில் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டுமென்று நீதிபதி அகர்வால் சொன்னது பெரும் கவலையைத் தருவ தாகும். ஒரு மாநில அரசைக் கலைக்கும்போது அதனை மறு பரிசீலனை செய்யக் கூடிய உச்சநீதி மன்றத் திலிருந்து இது போன்ற கருத்து வெளிவருவது மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தாது.''
"உச்ச நீதி மன்றம் இந்த விஷயத்தில் உணர்ச்சி வயப்பட்டது நியாய மாகத் தெரியவில்லை. அரசியல் வாதிகள் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக உணர் வுகளைத் தூண்டி விடுவதும், உணர்ச்சி வயப்படுவதும் இயல்பு. ஆனால் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் உணர்ச்சி வசப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வதுப நீதி மன்றங்களும், உணர்ச்சி வசப்படத் தொடங்கினால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும் என்கிற எச்சரிக்கை, நீதி மன்றம் தனது வரம்பை மீறுகிறதோ என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
அரசியல் கட்சிகள் நீதி மன்றத்தைக் குற்றஞ்சாட்ட வும், கேள்வி கேட்கவும் இடமளிக்கும் வகையில் நீதி மன்றங்கள் நடப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயமல்ல. முழு அடைப்பு விஷயத்தில் உச்ச நீதி மன்றம் காட்டிய முனைப்பு, நீதி மன்ற உத்தரவு உணர்வு பூர்வமாக செயல்படுத்தப்படவில்லை என்கிற ஆதங்கம், காவேரி நீர்ப்பிரச்சினையில் கர்நாடக அரசின் மீதும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச் சினையில் கேரள அரசின் மீதும் ஏன் காட்டப்படவில்லை என்று சராசரி மனிதர் கூட கேள்வி எழுப்புகிறாரே,
இதற்கு உச்ச நீதி மன்றம் என்ன பதில் அளிக்கப் போகிறது கர்நாடக அரசை யும், கேரள அரசையும் நீதி மன்ற அவமதிப்புக்காக ஏன் தண்டிக்கவில்லைப ஏன் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்காக பரிந்துரைக்க வில்லைப அரசியல்வாதி ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்தலாம்.
ஆனால் நீதி மன்றங்கள் உணர்ச்சி வசப்பட்டு கருத்துக் கூறி விடுதல் கூடாது. இந்திய ஜனநாயகத்திற்கு இருக் கும் ஒரே நம்பிக்கை நீதி மன்றங் கள்தான். அதனால் நீதிநிலை தடுமாறி விடக் கூடாது.''
நாரிமன் தெரிவித்ததா வது:- "குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்று நடுவண் அரசை எப்போதும் உச்ச நீதி மன்றம் கட்டாயப்படுத்த முடியாது. நீதி மன்ற ஆணையை மீறினால், நீதி மன்ற அவமதிப்புக்காக அரசைக் கண்டிக்கலாம். ஆனால் முழு அடைப்பு நடத்துவதற்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைக் கேள்விப்பட்ட நிலையில் எழுந்த வருத்தத்தின் வெளிப் பாடு தான் அது''
அட்டார்னி ஜெனரல், சோலி சோராப்ஜி :- "குடி யரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்வது உச்ச நீதி மன்றத்தின் வேலை இல்லை. முழு அடைப்பை தடை செய்தது சரியா இல்லையா என்பது, அது நீதி மன்றத்தில் மறு ஆய்வு செய்யப்படும் வரை அது நடைமுறையில் இருக்கும். உச்ச நீதி மன்ற ஆணை மீறப்பட்டால், அதற்கு நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற் காக அரசமைப்புச் சட்டத் தின் 356வது விதியைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது''
இது போன்ற கருத்துக்களை டெல்லியிலிருந்து வெளியா கும் உச்சநீதி மன்றத்தின் முன் னாள் தலைமை நீதிபதிகள் பி.என்.பகவதி, வர்மா, உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் போன்றவர்கள் தெரிவித் திருக்கிறார்கள்.
"சேது சமுத்திரக் கால்வாய் திட்டப்பணி திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக முழு அடைப்பு என பல கட்சிகள் கூடி முடிவெடுத்தன. இதை தமிழக அரசு நடத்துவதாக ஒருவர் புகார் கூற, அதை அவசரக் கோலத்தில், விடு முறை நாளில் விசாரித்து முழு அடைப்புக்கு தடை விதிக்கும் உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. அதை அரசியல் கட்சிகள் ஏற்று, கடையடைப்பை கை விட்டு, உண்ணா விரதம் இருக்க முடிவு செய்தன. அதுவும் நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல் என ஒரு கட்சி எடுத்துக் கூறிய வாதத்தை மட்டும் கேட்டு விட்டு, முழுப் பரிசீலனை இல்லாமல் மறுதரப்பு வாதங்களையும் கேட்காமல் நீதிபதி அவர் மனதில் தோன்றிய உணர்ச்சி வசப்பட்ட பல பதங்களைப்பயன்படுத்தியிருக்கிறார். அதில் நீதி மன்றத்தை அவ மதித்த புகாரை நீ எழுதிக் கொடு, பின்னர் நான் கவனிக்கிறேன் என்பது ஒரு வரி. அதாவது புகார் எழுத வும் வழி சொல்லி, நான் அது பற்றி முன் கூட்டியே தீர்ப்பு எழுத தயாராகி விட்டேன் என்ற பிரகடனமாகும்
இது.''இவ்வாறு பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளன.
பிரபலமான நாளேடுகளும், அரசியல் சட்ட வல்லுநர்களும் உச்ச நீதி மன்றத்தில் தெரி விக்கப்பட்ட கருத்து பற்றி செய்துள்ள விமர்சனங்கள் தான் இவை. ஆனால் அவர்கள் தெரிவித்த இதே கருத்துக்களை, அரசியல் வாதிகள் தான் செய்யக் கூடாது. எனவே நானும் கருத்து தெரிவிக்க
வில்லை.ஆனால் என்னைப்பார்த்து ஐயங்களையும் கேள்வி களையும் எழுப்புகின்றவர் களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமேயானால்; தி.மு.க. வும் அதன் தோழமைக் கட்சி களும் அக்டோபர் 1ஆம் தேதி நடத்த அறிவித்திருந்த முழு அடைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை விதிக்க மறுத்து, அதே நேரத்தில் சில நிபந்தனைகளை மட்டும் விதித்திருந்த நிலையில்தான், இந்தக் கட்சிகளின் அனைத்து அமைப்புகளும் வேலை நிறுத்தத்திற்கான அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு விட்டனர்.
அவர்கள் யாருக்கும் 30ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையில் வழக்கு அவசர அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு மாறாக வேறு ஒரு எதிர்மறையான தீர்ப்பை 30ஆம் தேதி மாலையில் வெளியிட்ட செய்தி தெரிந்திருக்க நியாய மில்லை. உச்ச நீதி மன்றத் தின் இந்தத் தீர்ப்பு எழுத்து பூர்வமாக 30ஆம் தேதி இரவு 10.30 மணிக்குத் தான் தலைமைச் செயலாளருக்குக் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அந்தத் தீர்ப்பு வெளியான தற்கும், 1ஆம் தேதி காலையில் "பந்த்'' தொடங்குவதற்கான நேரமும் இடையிலே சில மணி நேரங்கள் தான் இருந்தன. ஆனாலும்கூட, உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அது கடைப்பிடிக்கப்பட்டு சென்னையிலே தலைமைச் செயலகம் இயங்கியுள்ளது. முதலமைச்சர் உட்பட அமைச் சர்கள் அலுவலகத்திலே பணி யாற்றியிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், சில பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கியுள்ளன. அனைத்து புகை வண்டிகளும் ஒன்று கூட மிச்சமில்லாமல் அன் றையதினம் ஓடியுள்ளன. விமானப் போக்குவரத்தில் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. பேருந்து ஓடு வதிலே கூட கணிசமான அளவிற்கு நேரம் அதிகமாக அதிகமாக முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரளவு பேருந்து கள் ஓடியுள்ளன. பொது மக்களுக்கும், தொழிலாளர் களுக்கும் முன்கூட்டியே "பந்த்'' துக்கு தடை விதிக்கப்பட்ட செய்தி கிடைக்காத நிலையில், உச்ச நீதி மன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள போதிய அவகாசம் இல்லாத நிலைமை. எனவே இதுபற்றி வினா எழுப்புகிறவர்கள் சிந்தனைக்கு கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் எந்தவிதமான நிந்தனைக்கும் இடம் இல்லாமல் போயிருக்கும் என்பது தான் எனது விளக்கமாகும்.
கே:- பா.ஜ.க. மாநிலத் தலைவர், இல. கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதோடு, "முடிந்தால் வன்முறை, முடியாது போனால் அகிம்சை முறை'' என்றெல்லாம் சொல்லி யிருக்கிறாரே?
ப:- வன்முறையைப் பற்றி பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் கூறியிருப்பது ஜெயலலிதா மொழியிலே சொல்ல வேண்டுமேயானால் "நல்ல ஜோக்''. கரசேவையை நடத்தி இந்திய நாட்டில் ரத்த ஆறு ஓடச் செய்தவர் கள் - ஆர்.எஸ்.எஸ். இயக் கத்தையும், விஸ்வ இந்து பரிட்சத்தையும் தங்கள் சவலைப்பிள்ளைகளாக வளர்த்து வருபவர்கள் வன்முறையைப் பற்றி கருத்து கூறுவது சரியா? எனது ஆட்சியை "காமராஜர் ஆட்சி'' என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசி காமராஜரை அவமானப் படுத்தி விட்டதாகவும் அந்த அறிக்கையில் இல. கணேசன் சொல்லியிருக்கிறார்.
டெல்லியிலே காமராஜர் இல்லத்திலே புகுந்து கலகம் விளைவித்தது எந்த இயக் கத்தைச் சேர்ந்தவர் என்பதை இல.கணேசன் மறந்து விட்டாரா? மக்கள் நம்பும் ராமர் பாலத்தைப் பாது காப்பது ஒரு பெருமையான செயலாகும் என்று கூறுகின்ற இவர், கரசேவையின் போது இஸ்லாமியர்கள் நம்பும் பாபர் மசூதியை இடித்த தற்கு என்ன காரணம் கூறப் போகிறார் சேது சமுத்திரம் பிரச்சினையில் திரும்பத் திரும்ப இவர் அந்த இடத்தில் தோரியம் போன்ற தாதுப் பொருள்கள் உள்ளன என்றும் அவை அழிக்கப்படக் கூடாது என்றும் ஒரு காரணத்தை சொல்லி வருகிறார். அந்த இடத்தையோ, அந்த இடத்தில் உள்ள மணலையோ சேது சமுத்திரம் திட்டத்திற்காக யாரும் அழிக்கப் போவ தில்லை.
அந்த இடத்திலே குவிந்துள்ள மணலை அள்ளி கடலிலேயே வேறொரு இடத்தில் கொட்டத்தான் போகிறார்கள். அதனால் தோரியம் என்ற தாதுப் பொருள் அழிந்து விடும் என்று கூறுவதெல்லாம், திட்டத்தை தடுக்கின்ற முயற்சி கள் தான். "கொள்கை ரீதியான எதிராளி தி.மு.க.'' என்றும் இல. கணேசன் அறிக்கையிலே சொல்லியிருக் கிறார்.
அவரது இந்தப் பிரகடனம் தி.மு.க.விற்கு கிடைத்துள்ள நற்சான்றிதழ் என்று தான் கருதவேண்டும். அதே நேரத்தில் அவர் எங்கே போகிறார் என்பதையும் புரிந்து கொள்ள உதவிடும். அண்மையில் நான் பா.ஜ.க. தலைவர் ஒருவர் என்னைச் சந்தித்தார் என்று பெயர் குறிப்பிடாமல் கூறியதற்கு, "அது நான் தான்'' என்று இல. கணேசன் கூறி நான் சொன்னது பொய்யல்ல என் றும் நிரூபித்தமைக்கு நன்றி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, October 03, 2007
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறவில்லை: கருணாநிதி பேட்டி
Posted by IdlyVadai at 10/03/2007 09:28:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










13 Comments:
need thuglak articles:
1. What told Valmiki ramayan?-cho
2. Gurumurthy article-A atheist in america
எந்த இதழ் ?
last week thuglaq magazine (4.10.2007)
ஆனானி துக்ளக் தலையங்கம், ராமர் 'மது' விளக்கம், என்று நிறைய விஷயங்கள் இருக்கு. போடுகிறேன்.
இட்லிவடை, நீங்கள் துக்ளக் ஆர்ட்டிக்கிள் மட்டுமே இங்கே போடுங்கள். மற்ற பேட்டியெல்லாம் திம்மிக்கள் போடுகிறார்கள். அங்கேயே படித்துகொள்கிறோம்.
Who are 'திம்மி's ?
-- Nokia Fan
முதல்வர் உண்ணாவிரதத்தில் இருந்து கெளம்பி போனது....மந்திரிங்க எல்லாம் பந்த் பண்ணாம நீதிமன்ற உத்தரவ மதிச்சு வெல செஞ்சாங்க அப்படின்னு காட்டத்தானா? ஏன் கெளம்பி போனாருனு புரியாத புதிரா இருந்துச்சு.
{{இனியவன்
முதல்வர் உண்ணாவிரதத்தில் இருந்து கெளம்பி போனது....மந்திரிங்க எல்லாம் பந்த் பண்ணாம நீதிமன்ற உத்தரவ மதிச்சு வெல செஞ்சாங்க அப்படின்னு காட்டத்தானா? ஏன் கெளம்பி போனாருனு புரியாத புதிரா இருந்துச்சு}}
இவ்வளவு அப்பாவியா நீங்க ? சரி உங்களுக்காக கேமிரா கண்ணாயிரம் ஒரு படம் போட்டிருக்கிறார் சைடில அதை பாருங்க ஏன் முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்கள் எழுந்து போனார்கள் என்று புரியும்.
HI IV,
Can you please put the sentence written in that piece?
Thanks.
காமிரா கண்ணாயிரம் படத்தைக் கொஞ்சம் பெரிசா தர முடியுமா?
//காமிரா கண்ணாயிரம் படத்தைக் கொஞ்சம் பெரிசா தர முடியுமா?//
அட அந்த சீட்டில் என்ன எழுதியிருக்கு என்று ஒரு போட்டி வைத்திவிடலாம் போல.
சரி யார் சரியான விடை சொல்லுகிறார்கள் பார்க்கலாம் :-)
(govern?)ment should.... away from... (dismiss?)ing TN government because constitutional machinery has broken down.
CM and CS Raina (????) in contempt.
Central Government should not shy away from dismissing TN Government because constitutional machinery has broken down.
CM and CS prima facie in contempt.
இது தான் அதில் எழுதியிருந்தது.
Post a Comment