பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 18, 2007

சபாநாயகர் மீது அதிமுக எம்.எல்.ஏக்கள் தாக்குதல்

சபாநாயகர் மீது அதிமுக எம்.எல்.ஏக்கள் தாக்குதல்: அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம். ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுடாங்க!

தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று காலை சபையில் கேள்வி நேரம் முடிந்ததும் அமைச்சர் ஸ்டாலின் எழுந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது உரிமை பிரச்னை கொண்டு வந்தார். ஜெயலலிதா தன்மீது குற்றம்சாட்டியிருப்பது பற்றி உரிமை குழுவுக்கு அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்‌டார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கி‌டையில் ஸ்டாலின் கொண்டு வந்த பிரச்னையை விசாரணைக்காக உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வந்து நின்று கோஷமிட்டனர். பின்னர் சபை காவலரின் தொப்பியை பிடுங்கி சபாநாயகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் வெளி‌யேற்றப்பட்டார். பின்னர் அவர்கள் சபை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இ‌தையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

5 Comments:

We The People said...

இவனுகளை தண்டிக்க வேற வழியில்லையா?? சட்டசபைக்கு போவதே சண்டை போடத்தானா?? இதுக்கு தான் இவர்களுக்கு ஓட்டு போடுகிறோம்?? என்னவோ போங்க ஒன்னியும் பிரியமாட்டிங்குது :(

கலைஞர் கைத்தடி said...

ரொம்ப பேசினே.. உன் மீது உரிமை பிரச்னை கொண்டு வருவோம். சட்ட சபைக்கே போக முடியாத உன்னால் அப்புறம் சபாநாயகர் விசாரணைக்காக உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக அறிவிப்பார்.
முரசொலி படிக்கவும், கலைஞர், சன் டி.வி பார்க்கவும், வரும்முன் காக்கவும் ஆனால் கேள்வி மட்டும் நோ னோ ணோ.

Anonymous said...

தள்ளூ முள்ளுல போலீஸ் தொப்பி லேசா மேல விழுந்துடுச்சு, இதுக்குப் போய் சபாநாயகர் மேல தாக்குதல்னு செய்தி போடுறானுங்க, தா.கிருஷ்ணனைத் துண்டம் துண்டமா வெட்டுனானுங்களே அதுக்குப் போருதானையா தாக்குதல் இதுக்குப் பேரு தள்ளு முள்ளு. அது சரி ஐயோ கொல்லுறாங்களேன்னு டப்பிங் வாய்ஸுல சவுண்டு விட்டவன் இதையெல்லாம் தாக்குதல்னுதானே சொல்லுவான்

IdlyVadai said...

//தள்ளூ முள்ளுல போலீஸ் தொப்பி லேசா மேல விழுந்துடுச்சு//

இல்லை தொப்பியை எடுத்து விட்டெறிந்தார் என்பதை சில புகைபடத்தை பார்த்தால் தெரிகிறது. சபாநாயகர் மேலே விட்டெறிந்தது தப்புதான்.

Anonymous said...

சபாநாயகர் என்றால் என்ன புனித பிம்பமா? அவர் என்ன கட்சி சார்பில்லாமல் நடந்து கொள்கிறாரா? கருணாநிதி வீட்டு நாயை விடக் கேவலமாக நடந்து கொள்ளும் கட்ச்சிக்காரர்தானே சபாநாயகர். எதிர்க்கட்ச்சித் தலைவி பெண் என்றும் பாராமல் துகில் உரிந்த கும்பலைச் சேர்ந்தவர்தானே? அவருக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்க்கு? அவர் மேல தொப்பி விழுந்தது எல்லாம் ஒரு குற்றமா? அட நாலு பேரு இழுபறி செய்யும் பொழுது தொப்பி தவறி அவர் மேல் விழுந்தது எல்லாம் பெரிய தாக்குதலா ஐயா? அவன் அவன் உயிரோட எரிச்சத்துக்கே இந்த நாட்டுல ஒரு கேள்வி முறை இல்ல, தொப்பி விழுந்துருச்சாம் பெரிய தப்பாம் அட போங்கப்பா இந்தியாவில் எந்தவொரு அமைப்பும் மரியாதை இழந்து விட்டது. சபாநாயகர் கட்சிக்காராகச் செயல் பட்டால் இப்படித்தான் தொப்பியை எறிவார்கள்.