பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 27, 2007

கலைஞர் பேட்டி

நாஞ்சில் சம்பத் தாக்க்கபட்டது, கனிமொழிக்கு அமைச்சர் பதவி, அழகிரிக்கு பதவி, சேது திட்டம், குஜராத் கலவரம் - மோடி...

கேள்வி: நாஞ்சில் சம்பத், சிறையில் தாக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறதே. இது தொடர்பாக வைகோ தந்தி அனுப்பி இருக்கிறாரே?
பதில்: எனக்கு தெரிந்த வரை அவரை (நாஞ்சில் சம்பத்) யாரும் தாக்கியதாக தெரியவில்லை. வைகோ வந்து பார்த்து விட்டு சென்ற பிறகு தான் இப்படி நடந்ததாக சொல்கிறார்கள். உடனே நாஞ்சில் சம்பத் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

(அப்போது அருகில் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோப்புகள் வரும். அவற்றை அலட்சியப்படுத்துங்கள் என்று தான் முதல்வர் தெரிவித்தார். இவ்வளவு மட்டமாக ஒருவன் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் இது பற்றி தந்தி அனுப்ப வைகோவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. இப்படி பேசினால் ஒரு தொண்டனால் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்.

ஒரு முறை அண்ணா இருந்த போது திமுகவின் மூத்த தலைவர் என்.வி.என்.நடராஜன் பேசுகையில், காங்கிரஸ் அமைச்சர்களை கல்லால் அடியுங்கள் என்று தெரிவித்தார். உடனே அதே மேடையிலேயேஅவரை மன்னிப்புக் கேட்கச் செய்தார் அண்ணா.அதே போல நாஞ்சில் சம்பத்தின் செயலுக்காக வெட்கப் படுவதாக வைகோ கூறியிருந்தால் அவருடைய யோக்கியதை தெரியும் என்றார் துரைமுருகன்).

கே: சேது சமுத்திர திட்டம் நிறைவேறாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அது நிறைவேறியே தீரும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கூறுகிறார்களே? இதன் உண்மை நிலை என்ன?

கருணாநிதி பதில்: நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

கே: நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டுமே வைகோ வலியுறுத்தியுள்ளாரே


ப: எங்கள் கட்சியில் இதுபோல பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அண்மையில் திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் பேசிய வாகை முத்தழகன் எதிர்க்கட்சித் தலைவரை தாக்கி பேசினார். அது ரசக்குறைவான பேச்சு என்று செய்தி வந்ததும், அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். கட்சியில் இணைந்து தொடர்ந்து பணியாற்ற அவர் அனுமதி கேட்டும் இன்னும் அவரை சேர்க்கவில்லை.

கே: மதிமுகவைப் பொறுத்தவரை அதிமுக வழியிலேயே திமுகவுக்கு எதிரான ஒரு பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அது (மதிமுக) திட்டமாக கொண்டுள்ள சேது சமுத்திர திட்டத்தில் நீர்த்துப்போய் விட்டதா?
ப: இவர்கள் திட்டம்தான் நீர்த்துப்போய் உள்ளது.

கே: ராமர் பாலத்தை இடிக்காமல் சேது திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று டி.ஆர்.பாலு சொல்கிறார். ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கமிட்டி போட்டிருக்கிறது. மத்திய அமைச்சரின் உறுதிப்படி பார்த்தால், இந்த கமிட்டியே வீணானதுதானே.
ப: அது எப்படி வீணானதாக கருத முடியும். இந்த கமிட்டி ஆய்வு நடத்தி டி.ஆர். பாலு சொல்வது சரியா இல்லையா என்பதை சொல்லலாம். வாஜ்பாய் போன்ற அறிஞர்கள் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த 6வது வழிதான் இது. பிஜேபி அரசின் கேபினட் அமைச்சர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இந்த பிரச்சனையில் ராமரைக் கொண்டு வந்தது நானா? அவர்கள் தானே.

ராமர் என்ற பெயருக்காக நாங்கள் எதிர்க்கவில்லை. அப்படியென்றால் கிருஷ்ணா பெயருள்ள திட்டத்தை எதிர்க்கிறோமா? அந்த திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக புட்டபர்த்தி சாய்பாபாவை கூட அணுகி உதவி கேட்டு நிறைவேற்றி வருகிறோம்.
இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி இந்த திட்டத்தை கெடுப்பதை இந்த திட்டத்தால் நிரம்ப பயனடையும், இது வரும் என்று எதிர்பார்க்கும் தமிழ் மக்கள் விரும்பவில்லை. இந்த
திட்டத்தை இழக்க மக்கள் தயாராக இல்லை.

கேள்வி: அண்மையில் டெல்லியில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஆதரவு இல்லையே என்று பிரதமர் வருத்தம் தெரிவித்ததாக செய்தி வெளியானதே?பதில்: இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குக் கூட பேட்டி அளித்திருக்கிறேன்.

கேள்வி: தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து?

பதில்: மத்தியிலா? மாநிலத்திலா?

கேள்வி: மாநிலத்தில் தான். அண்மையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இலாக்கா மாற்றப்பட்டதே?பதில்: அமைச்சர்கள் மாற்றம் என்பது அமைச்சர்களின் சவுகரியத்திற்
காகவும், முதலமைச்சர் வசதிக்காகவும் செய்வது.

கேள்வி: மழைவெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறதே?
பதில்: இதுபோன்ற மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் உடனடியாக சென்று நிலைமைகளை ஆய்வு செய்து தலைமை செயலக அதிகாரிகளுக்கு தகவல் தர உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுமனவரை நிலைமைக்கு தகுந்தவாறு அங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவிகளை வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.

கேள்வி: திமுக, அதிமுக அல்லாத ஒரு அணி தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே?
பதில்: இது குறித்து நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: கனிமொழி மத்திய அமைச்சர் ஆவாரா?
பதில்: எப்போதாவது வரலாம்.

கேள்வி: இதேபோல மு.க.அழகிரிக்கும் கட்சி பதவி கிடைக்குமா?
பதில்: (முதலமைச்சர் பலத்த சிரிப்பு).

கேள்வி: குஜராத் கலவரத்தில் அந்த மாநில முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதே?
பதில்: பத்திரிகைகளில் தான் இது பற்றி படித்து வருகிறேன். மேலும், இது குறித்து பேசவிரும்பவில்லை. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

3 Comments:

Subramanian said...

I was told that GNNNI's "OH-Pakkangal- have to published again in Ananda Vikatan - suppamani

Anonymous said...

கேள்வி: குஜராத் கலவரத்தில் அந்த மாநில முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதே?
பதில்: பத்திரிகைகளில் தான் இது பற்றி படித்து வருகிறேன். மேலும், இது குறித்து பேசவிரும்பவில்லை. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

What can he say now. In 2002 DMK did not even lift a finger againt
Modi. They were just dismissing it as an internal affair of a state.
They did not even condemn Modi nor sought his resignation. There is blood is Modi's hand. Those who stoody by him cannot away their sins so easily.

கலைஞர் கைத்தடி said...

உட்டா.. தோனிக்கும் அமைச்சர் பதவி கிடக்குமா என்று கேள்வி கேட்பாங்க போல. கலைஞர் சிரிப்பதில் தவறு இல்லை.