பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2007

கிருஷ்ணபரமாத்மாவே எனக்கு வழிகாட்டி - குமாரசாமி

குமாரசாமி பேட்டியின் முக்கிய துளிகள் ....

*பா.ஜனதாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை.
*மக்களை பாதுகாக்க கொடுத்த வாக்கில் இருந்து மாறுவது தவறு அல்ல.
*வாக்கை தவறவிடுவது பற்றி மகாபாரத்தில் கிருஷ்ணரே தெளிவுப்படுத்துகிறார்.
*தற்கால அரசியலிலும் வாக்குகளுக்கு முக்கியத்துவம் இல்லை.
*சந்தர்ப்பவாதமற்ற கட்சி என்று எந்த கட்சியையும் கூற முடியாது.
*பா.ஜனதா கலவரத்தை தூண்டும் கட்சி.
*தமிழக பஸ் எரிப்பு உள்பட வன்முறைகள் ஏற்கனவே நடந்து உள்ளன.
*ஆட்சியை ஒப்படைக்கும் பட்சத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டால் மக்களுக்கு பதில் சொல்வது யார்?
*எனது கட்சியை அழிப்பதாக சொல்பவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டுமா?
* ஆட்சி மாற்ற விஷயத்தில் பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறை சரியல்ல.
* அரசியலில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

இன்று வந்த இந்த செய்தியை பாருங்கள். எல்லா அரசியல் தலைவர்களையும் மிஞ்சி விட்டார் குமாரசாமி :-)


கடைசி செய்தி: மந்திரி குமாரசாமி மனசாட்சிபடி எங்களிடம் ஆட்சியை ஒப்படைப்பார் என்று பா.ஜனதா தலைவரும், துணை முதல்&மந்திரியுமான எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார். காமெடி செய்ய ஒரு அளவே இல்லையா ?

1 Comment:

ChennaiTAMILAN said...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா......

START MUSIC---

ஜீவண்.