பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 23, 2007

பிரதமர் பாய்ச்சல், பயப்பட வேண்டாம் :-)

இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை யில் ஆதரவு அளித்து விட்டு, வெளியில் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்தார். லாலு பிரசாத், சரத்பவார் ஆகியோரும் திடீரென்று இப் பிரச்சனையில் பல்டி அடித்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதே போல ராமர் குறித்த சர்ச்சையை திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியதாகவும் அவர் கவலை தெரிவித்தார். இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால் ஆளும் கூட்டணிக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது...

இந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஒப்பந்தத்தை கைவிடா விட்டால் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என்று இடதுசாரிகள் எச்சரித்ததால் அரசியலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தம் தற்போது நிறைவேற்றப்பட மாட்டாது என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அளித்த உறுதிமொழியால் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்ட தாக்கம் சற்று தணிந்தது.
ஆனால் இது குறித்து தெளிவான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் உறுதிபட தெரிவித்ததால், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக தோழமைக் கட்சி தலைவர்கள் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு டி.ஆர்.பாலு (திமுக), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), லாலு பிரசாத் யாதவ் (ஆர்ஜேடி) உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென்று தோழமைக் கட்சி தலைவர்கள் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது.
அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பு மத்திய அமைச்சரவை அரசியல் விவகாரக் குழுவில் இது பற்றி விவாதிக்கப் பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

அப்போது திமுக, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளித் ததை அவர் நினைவு படுத்தினார். தற்போது இடதுசாரிகள் எதிர்ப்ப தால், ஆதரவளித்த தோழமைக் கட்சிகள் திடீரென்று தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு எதிர்ப்பது சரியா? என்று அவர் ஆவேசத்தோடு கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக பிரதிநிதியான டி.ஆர்.பாலுவை பார்த்து அவர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இப்போது உங்கள் தலைவர் எதிர்ப்பது சரியா? என்று கேட்டதாக கூறப்படுகிறது. (அணு சக்தி ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருவதாகவும், அந்த ஒப்பந்தத்தை விட அரசுதான் முக்கியம் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி தற்போது கூறி வருவதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு கூறியதாக கூறப்படுகிறது)

அதே போல ராமர் சேது பிரச்சனையில், ராமரே இல்லை யென்று திமுக தலைவர் கூறியதால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி யையும் அவர் சுட்டிக் காட்டியதாக தெரிகிறது. இருந்தாலும் இது பற்றி தாங்கள் எந்த கருத்தையும் கூறாததை அவர் டி.ஆர்.பாலுவுக்கு சுட்டிக்காட்டினார்.

ராஜினாமா தயார்
இது போல அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்து விட்டு பிறகு தங்கள் நிலையை மாற்றிக் கொண்ட ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டு பின்னர் பின்வாங்குவதன் மூலம் தலைக்குனிவு ஏற்பட்டிருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது போல ஒப்பந்தத்தை செய்து விட்டு பின்வாங்குவது உலக அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை தன்மை மீது அவ நம்பிக்கை ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதை அவர் வேதனைப்பட தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது போன்ற போக்கை கடைப்பிடிப்பதாக இருந்தால் வேறு பிரதமரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங் வேதனையுடன் கூறியதாக சொல்லப்படுகிறது.

திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் மீது பிரதமர் மன்மோகன் சிங் முதன் முறையாக விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கூறியதாக செய்தி பரவியது.

ஆனால் இந்த தகவலை பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரித்விராஜ் சவான் மறுத்தார். இது ஆதாரமற்ற செய்தி என்று அவர் குறிப்பிட்டார். இந்தியஅமெரிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்ற தவறினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு களங்கம் ஏற்படும் என்று பிரதமர் கவலையோடு தெரிவித்ததாக தேசியவாத காங்கிரஸ் செயலாளர் டி.பி.சதுர்வேதி தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித் திருப்பதால் இதனை ஏற்கும்படி இடதுசாரிகளை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தாகவும் அவர் கூறினார்.
(நன்றி: மாலைசுடர் )

5 Comments:

யோசிப்பவர் said...

ஒரு மனுசன் எவ்வளவுதான் பொறுமையா இருப்பார்?

cgs said...

hope these sandharpavadhigal will not force our primeminister to resign.may be he should .then they will know.the kommies, bjps kazhagams. two yrs ago i met a taxi driver in bombay who said that he is praying for our primeminister tos tay in power for another five yrs.heis one man worht his salt.everyone else is dubakoor

சிவாஜி - The Boss! said...

இதற்கு மேலும் இந்த பிரதமர் பதவி அவருக்கு தேவை படுகிறது. India's Most powerless PM!

Anonymous said...

In this matter, congress should not to shy away to discuss with BJP for the possiblity of operationalise the nuke deal. Because it is easy to convince BJP than antinational left parties.

Sivaji - The LoosU said...

We have so many other issues that needs immediate attention but who cares ? The irony is we are only matured enough to talk about Ram & religion. In the process we forget about developmental projects that would strengthen our nation.

What to do..? On the other side we hear about Three Gorges Dam - a dam built by changing the course of a river and to control flood, an engineering marvel.

a rail line, another engineering marvel - a train to Lhasa, TIbet's capital crossing 16640 foot Tibet's Tanggula mountains from a western Chinese city - a $4.2 billion project. Amazing....

Poor Indians we are...the truth is we will be losing this Century also...