பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 23, 2007

ஜெ, வைகோ, சுவாமி சந்திப்பு

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
அட வலைப்பதிவு கூட்டம் மாதிரி தான் இதுவும், விஷயம் ஒண்ணுமில்ல :)


இச்சந்திப்பின் போது, ராமர் பாலம் இடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டங்களில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ., ஜனதா, விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் பங்கேற்க செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனதா கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் ஒரேயொரு கூட்டத்தில் மட்டும் ஜெயலலிதா, வைகோ ஆகியோர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நியமித்த புதிய ஆய்வு குழு மற்றும் இந்தியா - அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிலைப்பாடு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு கோட்டத்திற்கு மாற்றியதை கண்டித்து நவம்பர் 1ம் தேதி ம.தி.மு.க., நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம், தற்போதைய தமிழக அரசியல், டில்லி அரசியல் நிலவரம் குறித்து 40 நிமிடங்கள் மூவரும் விவாதித்தனர்.

2 Comments:

cgs said...

அதுக்கும் ஜேஜே நல்ல நாள் எல்லாம் பர்த்தாங்களா?

Subramanian said...

'pANAKKARANAIYUM PAITHTHIYAKKARANAIYUM CHUTHTHI PATHTHU PER' ( rich and lunatics are surrounded by ten pesons)-suppamani