பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 09, 2007

ஞாநி விவகாரம், ஒரு கோயிஞ்சாமியின் கேள்விகள்

சற்றுமுன் எனக்கு மெயில் ஒன்று வந்தது.
"சில கேள்விகள் இருக்கு உங்க பதிவில் போட்டால் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன் போடமுடியுமா ?"என்றார்.
அவர் நம்பிக்கையை ஏன் கெடுப்பானேன் பதிவு கீழே....

ஞாநி விவகாரம், ஒரு கோயிஞ்சாமியின் கேள்விகள்
ஞாநி விகடனில் பேசாப்பொருளைப் பேசத்துணிந்ததும் அதன் பின்விளைவுகளையும் பார்த்தால் முதலில் சிரிப்பும், பிறகு கோபமும் வருகிறது. ஞாநியின் எழுத்துக்கள் எனக்கு ஓ பக்கங்களை மீறி அதிகப் பரிச்சயமில்லை. ஆனால், பெரியார் வாழ்க்கை வரலாற்றை தூர்தர்ஷனுக்காக முதலில் படம் பிடித்தவர், சுஜாதாவை பாய்ஸுக்காக அளவு மீறி அடித்தவர், சோவின் நிலைப்பாடுகளுக்கு வெளிப்படையான விரோதி, தலித்தியத்துக்காக பாடுபடுபவர், சமீபகாலமாக கலைஞரின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலும், ஆரம்ப காலத்தில் திமுக அனுதாபியாகவே இருந்தவர், முரசொலியில் பயின்றவர் போன்ற பிம்பங்கள் அடிக்கடி படித்த சில கட்டுரைகள் மூலமாக உருவாகியிருக்கிறது.

அவர் சொன்னது - கலைஞர் ஓய்வு குறித்து - தவறா சரியா என்ற பிரச்சினைக்குள் புக நான் விரும்பவில்லை. என் கருத்துக்களினால் நான் சொல்ல வரும் விஷயத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பும் இல்லை.

ஞாநி சொன்னதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம், அவருடைய சமீபத்திய பத்திரிக்கை நிலைப்பாடும், அரசியல் நிலைப்பாடுகளும் காரணமாக இருக்கலாம். எப்படியும் அந்தக் கட்டுரை உள்நோக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை.

ஆனால், மிதக்கும் வெளி பதிவின் பின்னூட்டங்கள், லக்கிலுக்கின் விருந்தினர் பதிவு, பாலபாரதி பதிவின் பின்னூட்டங்கள், டோண்டு ஆகியோரின் பதிவுகள், அவர் சொன்னதைவிட அவர் பிறப்பையே கேள்விக்குள்ளாக்குகின்றன. இட்லிவடையும் இதுபற்றி எரிச்ச்லோடு ஒரு பதிவு போட்டிருந்தாலும், அதில் ஜாதியை இழுக்கவில்லை.

ஞாநி ஒரு பார்ப்பனர் என்பதாலேயே அவரது கருத்துக்களைப் புறந்தள்ளவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்கிறார் சுகுணா - தனக்கு எந்தத் தெரிவும் இல்லாத பிறப்பைத் தவிர, வேறெந்த விஷயத்தால் ஞாநியைப் பார்ப்பனர் என்று கண்டீர் சுகுணா? சரி அப்படியே இருந்தாலும், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்னாயிற்று?

ரோசா வசந்த் ஒரு படி மேலே போய், "ஜாதியை மீறி செயல்பட முடியும் என்பதற்கு பார்பனர்களில் உதாரணங்கள் காட்டமுடியும் என்ற எண்ணத்திற்கான ஆதாரம் பலவீனமாவது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்." என்கிறார். எப்படி இந்தக் கட்டுரையால் அந்த ஆதாரம் பலவீனமானது என்று சொல்ல முடியுமா ரோசா?

லக்கிலுக்கின் விருந்தினரோ, சட்டைக்குள் நெளியும் பூணூலை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார். எப்படி என்றுதான் தெரியவில்லை. கலைஞரை எதிர்ப்பவர்கள் (அல்லது ஆதரிக்காதவர்கள்) எல்லாரும் பார்ப்பனர் என்றால் தமிழக ஜனத்தொகையில் 60% பார்ப்பனர்கள்! கருத்தைக் கருத்தால் எதிர்க்காமல் ஏன் ஜாதியை உள்ளே நுழைக்கவேண்டும்?

பாலபாரதியின் பதிவில், நல்லவேளையாக ஜாதி பற்றி எதுவும் எழுதவில்லை (கிழிந்த முகமூடி பற்றி எழுதியிருக்கிறார், அது என்ன என எனக்குப் புரியவில்லை) என்றாலும் சில பின்னூட்டங்கள் மேற்கண்ட கருத்துக்களின் அடிநாதத்திலேயே!

டோண்டு பதிவு மகாமட்டம்! இப்படி ஒரு நிகழ்வுக்கென்றே காத்திருந்தது போல, பார்த்தீர்களா, முன்பே நான் சொன்னேன்.. இவர்கள் இப்படித்தான் என்று.. சட்டைக்குள்ளே போடாதீர்கள் பூணூலை, வெளியே எடுத்துவிட்டுக்கொண்டு வாருங்கள் என்று தன் கட்சிக்கு ஞாநியை ஆள்பிடிக்கும் அசிங்கம்!

எனக்கு புரியாத விவகாரம் - ஞாநி பார்ப்பனரா இல்லையா என்ற கேள்வி இன்று, கலைஞரை அவர் விமர்சிக்கும் நேரத்தில் பெரிதாவது ஏன்? பார்ப்பனீயம் எதிர்க்கப்படுகிறது என்ற சொல்லாடலை ஞாநியை பார்ப்பனவாதி என்று எதிர்ப்பதனாலேயே நீர்த்துப் போவது புரியவில்லையா?

ஜாதிக்கென்று ஒரு புத்தி இருக்கிறது என்பதுதானே வர்ணாசிரமம்? ஞாநிக்கு பிறவிப்புத்தி வந்துவிட்டது போன்ற விமர்சனத்தால் அதையே வலுப்படுத்துகிறீர்கள் இல்லையா? நிஜமாகவே எனக்குப் புரியாமல்தான் கேட்கிறேன். சொல்லுங்க ப்ளீஸ்!

18 Comments:

Anonymous said...

நேர விரையம் செய்கிறீர்கள் நண்பரே.

நீங்க குறிப்பிட்டுள்ள பதிவர்கள் யாரேனும் ஒருவராவது பார்பனீயத்தை வெறுக்காதவரா?, லக்கி ஓப்பனாக சொல்லிக் கொள்ளும் உடன்பிறப்பு, மத்த இருவரும் (சுகுணா, பாலபாரதி) சொல்லிக் கொள்ளாத உடன்பிறப்புக்கள் அவ்வளவே. டோண்டு ஆள் பிடிக்கிறார் எனபது ஒன்றும் புதிதல்லவே....எப்போதும் அவர் அப்படித்தான்.

Subramanian said...

"You asked when Kalaignar Karunanidhi to retire? I could'nt understand why you have not given a chance to say " already" by griving a column as "YESTERDAY"- But
What I feel is not even yesterday - LONG BACK-- Suppamani

Hariharan # 03985177737685368452 said...

இட்லிவடை,

சுகுணாதிவாகரின் பதிவில் இட்ட அதே பின்னூட்டத்தை கோயிஞ்சாமியின் கேள்விகள் கொண்ட இடுகையான இங்கும் இடுகிறேன்:

எம்ஜிஆர் சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்த போது கருணாநிதியின் ஒப்புதலுடன் திமுகவின் முன்ணணி பேச்சாளர்கள் ஊர் ஊராக தேர்தல் கூட்டங்களில் எம்ஜிஆருக்கு கிட்னி மாற்றத்தினால் விளக்குக் கம்பத்தில் கால் தூக்கியபடிக்குத்தான் சிறுநீர் கழிக்க முடிகிறது என்றெல்லாம் பண்பாக பேசவைத்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி!

அதே தேர்தலில் கருணாநிதி பேசும் போது நண்பர் எம்ஜிஆர் திரும்பி வந்தவுடன் ஆட்சியைத் தந்துவிடுகிறேன் என்று கெஞ்சிப் பேசினார்.

இந்திய அரசியலில் ஜோதிபாசு, கருணாநிதி, என்று பழுத்த வயதானவர்கள் பதவியில் தொங்கிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை.

சங்கர்தயாள் சர்மா, ஆர்.வி போன்ரோர் ஜனாதிபதியாக இருந்தார்கள். இந்திய ஜனாதிபதியின் செயல்பாடு ரப்பர்ஸ்டாம்பாக இருப்பதுதான்! என்ற போதும் 70 வயதுக்கு மேல் இம்மாதிரி பதவிகள் வகிக்க தடை வேண்டும்.

பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் பதவிகளில் இரு முறைக்கு மேல் ஒருவர் பதவிவகிக்க தடைச்சட்டம் வரவேண்டும்.

அம்மாதிரியே பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் என்ற எந்த ஒரு பதவி வகித்திருந்தாலும் இதர பதவிகளுக்கு வரவும் தடை செய்யவேண்டும்.


திமுகவின் ராமர் பால கருத்துக்கு பார்ப்பனரான அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் சொல்வது திமுகவினர்க்கு ஏற்புடையதாகும். அப்போது பூணூல் நெளியுதான்னு ஆராய்ச்சி இருக்காது.

மெய்யாகவே ஓய்வெடுக்கும் வயதை ஒரு 84 வயதாகி, மூப்பெய்தி கிழண்டுவிட்ட ஒரு அரசியல்வாதிக்கு ஞாநி கட்டுரையில் சுட்டிக்காட்டினால் சட்டைக்குள் பூணூல் நெளிவதைக் கண்டுபிடிப்பது பகுத்தறிவு!

ஞாநியை பலவிதங்களில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தளர்ந்து கிழண்டுவிட்ட கருணாநிதி எனும் அரசியல் வாதி ஓய்வெடுத்துக் கொள்வதுதான் சரி எனும் சுட்டல் கருத்தை வழிமொழிகிறேன்.


மூப்பு ஓய்வு குறித்த ஞாநியின் ஆ.வி எழுத்தை வக்கிரம் என்று சொல்லும் அருகதை திமுகவினர்க்கோ, கருணாநிதிக்கோ இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

Anonymous said...

Whether in politics or not, Manjal Thundu Mahadevan is capable of creating havoc anyway. So, it really doesn't matter whether he retires or not from politics. My only wish & prayer is that he should be alive to see the disintegration of his party due to internal squabbles between his inheritors - legal or otherwise.

cgs said...

idly vadai you too?

how can think fo ulkuthu in gnani's writing.
i ahev posted a comment in lucklook's blog with great trepidation. !!i.v., is gnani such a bad person?is someone who educated the public the clause of 'o' such a bad person than all the other politicians who have never let us know for the last 50 yrs?. mr m.k is having a public office ,that is the issue. whether kanchi person or anyone else whose job doesnt involve the public ,who cares. as for vajpayi, i promise you, if the internet had been as active as now surely people would have commented. atleast i was embarrassed.

what is this whole idea of intolerance and discussion about his birth?i am sure he is far more secular than all these bloggers put together. dont we have evidence for it already?

We The People said...

நீங்க சொல்லும் ஒரு மேட்டரும் அவர்கள் தலையில் ஏறாது... லூசுல விடுங்க இட்லியாரே.

இந்த விசயத்தை பொருத்தவரை இவர்களுக்கு கொள்கை கிடையாது... 100% வெட்டி வேலை! இதுக்கெல்லாம் பதிவா, ரெம்ப ஓவரூ!!

//கலைஞரை எதிர்ப்பவர்கள் (அல்லது ஆதரிக்காதவர்கள்) எல்லாரும் பார்ப்பனர் என்றால் தமிழக ஜனத்தொகையில் 60% பார்ப்பனர்கள்! //

இதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லாதவர்களா இவர்கள், சும்மா ஏதாவது வெட்டியா எழுதனுமேன்னு எழுதறது தானே :)))))))))

IdlyVadai said...

எல்லோருக்கும் : இது நான் எழுதிய பதிவு இல்லை. எனக்கு மெயிலில் வந்த பதிவு. அவரே பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லுவார் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
இட்லிவடை

மெயில் போட்டவன் said...

நீங்க சொல்றது சரியா இருக்கலாம் அனானி, ஆனா கேட்டதில தப்பில்லையே!

ஹரிஹரன் கரெக்டா சொல்றீங்க! தாத்தாச்சாரியார் முதல் ஞாநி வரை எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், சாதகமான மேட்டரா இருந்தா ஒத்துக்கறதும் பாதகமா இருந்தா பூணூல் தேடறதும் சகஜம்தான். அதேன் பூணூலை மட்டும் தேடறாங்கன்னுதான் கேக்கறேன்.

அனானி, உங்க ஆசை அப்ப்டியா? எனக்கு அவ்ளோ கிடையாதுங்க!

சரியாச்சொன்னீங்க cgs. ஞாநியோட செக்கூலரிசம் உயர்வானதுதான்.

வி த பீப்புள், எதோ ஆத்தாமை பதிவு போட்டுட்டோம்.. லூசுல விடுங்க!

இட்லிவடை, என் பதிவை பதிப்பித்ததற்கு நன்றி. சரியா பதில் சொல்லிட்டேனா?

Anonymous said...

ஆமாம் இட்லியாரே...நானும் இந்தமாதிரி பதிவுகளை உங்களுக்கு மெயில் அனுப்பினா பதிவிடுவீங்க தானே?...

IdlyVadai said...

//ஆமாம் இட்லியாரே...நானும் இந்தமாதிரி பதிவுகளை உங்களுக்கு மெயில் அனுப்பினா பதிவிடுவீங்க தானே?...//
தனிமனித தாக்குதல் இல்லை என்றால் எடிட் செய்யாமல் போடுவேன்
இட்லிவடை

ramachandranusha(உஷா) said...

எ,அ.பாலா கோச்சிக்கப்போறார். அவரோட டெக்னிக் இது :-)

Anonymous said...

அக்னி கோத்ரமும்,சீனுவாச ஐயங்காரும் தரும் ஆதாரத்தை ஏற்கும் போது பூணூல் நெளியவில்லையா? பூத் ஏஜன்ட் மற்றும் பகுத்தறிவு குரூப் இது பற்றி பதிவா போட்டுத் தள்ளுகின்ரனர்.கருணாநிதிக்கு வயதாவது பெரிய பாவமா?அதச் சொல்வது அதை விட பாவமா? பகுத்தறிவின் சாரம் இதுதான்.ஞானி சொன்னது தவறு இல்லை.ஆனால் ஞானி பிராமணராதலால் அவர் சொன்னது தவறு.
பாண்டியன்

Anonymous said...

Thanks for posting earlier JV article.

Post these also - thanks

http://www.vikatan.com/jv/2007/oct/14102007/jv0101.asp

http://www.vikatan.com/jv/2007/oct/14102007/jv0501.asp

dondu(#11168674346665545885) said...

//டோண்டு பதிவு மகாமட்டம்! இப்படி ஒரு நிகழ்வுக்கென்றே காத்திருந்தது போல, பார்த்தீர்களா, முன்பே நான் சொன்னேன்.. இவர்கள் இப்படித்தான் என்று.. சட்டைக்குள்ளே போடாதீர்கள் பூணூலை, வெளியே எடுத்துவிட்டுக்கொண்டு வாருங்கள் என்று தன் கட்சிக்கு ஞாநியை ஆள்பிடிக்கும் அசிங்கம்!//
வெறுமனே ஞாநியை சாதி குறித்து திட்டாதிருந்தால் நான் ஏன் எனது அப்பதிவை போடப் போகிறேன். உங்கள் கண்களுக்கு மட்டமாக இருக்கலாம். அது பற்றி எனக்கு கவலை இல்லை. எனது நிலைப்பாடு தெளிவானது. கூறிய கருத்துடன் சண்டை போடுங்கள். பாப்பான் என்றெல்லாம் திட்ட ஆரம்பித்தால் இந்த பாப்பான் வருவான்.

நான் கேட்ட கேள்விகளில் என்ன தவறு கண்டீர்கள்? போகிறவர் வருபவர் எல்லோரும் எங்கள் சாதியை திட்டுவர் நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டுமா?

குழாயில் தண்ணி வரவில்லையென்றாலும் பாப்பான்தான் காரணம் என்ற ரேஞ்சுக்கு எழுதுவீர்கள் அதற்கு நாங்கள் பொறுத்து போக வேண்டுமோ? அதற்கு வேறு ஆளை பாருங்கள்.

டோண்டு ராகவன்

IdlyVadai said...

//எ,அ.பாலா கோச்சிக்கப்போறார். அவரோட டெக்னிக் இது :-)// என்ன உஷா ரொம்ப நாளா காணோம் ? இதுல என்ன டெக்னிக் இருக்கு, மெயில் அனுப்பினால் கட் & பேஸ்ட் செஞ்சு போடவேண்டியது தான்.

Anonymous said...

இட்லி வடை

போன பதிவில் ஞாநியைப் பற்றி போட்ட அதே அநாநிதான்.

உங்களிடம் கேள்வி கேட்டவர் மிகச் சரியான கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறார். அவர் வாழ்க. நிற்க.

ஞாநியின் ஒரு சில கருத்துக்களுடன் நாம் அனைவருமே ஒன்று படுகிறோம். உதாரணமாக அவர் குப்பையைப் பற்றி கேட்ட கேள்விகள் போன்றவை. ஆனால் ஞாநி தன்னை எல்லா விஷயங்களும் தெரிந்த பெரிய அறிவாளி என்று எண்ணிக் கொண்டு கல்பாக்கம் பற்றியும், அணு ஒப்பந்தம் பற்றியும் கருத்து தெரிவிப்பது மிகப் பெரிய அதிகப் பிரசிங்கத்தனம். மேலும் ஞாநி மிகவும் அநாகரீகமான ஒரு மனிதர் என்பதையும் வக்கிர புத்தி படைத்த சிறுமதி உடையார் என்பதும் சுஜாதா பற்றியும், எம் எஸ் பற்றியும் அவர் எழுதியவையும், திண்ணை மீது கேஸ் போடுவேன் போன்ற ஆத்திரமும், மூர்க்கத்தனமும் காட்டுகின்றன. அவர் பிராமணராக இருப்பதனால் இதைச் சொல்லவில்லை. அவர் தன்னை பிராமணராகக் கருதிக் கொள்ளவில்லை என்று சொல்லிக் கொள்கிறார். அவர் என்னதான் அப்படிச் சொன்னாலும் ஏற்கனவே ஈ வெ ரா சொல்லிய வைதீகப் பார்ப்பானை நம்பினாலும் நம்பலாம் ஐதீகப் பார்ப்பானை நம்பக் கூடாது என்ற கருத்தை ஈ வெ ரா வின் குஞ்சுகள் அப்படியே கடைப் பிடிக்கின்றன. ஞாநி என்று மட்டும் அல்ல மவுண்ட் ரோடு மாவோ, கல்கி, ராஜாஜி என்று எதுவானாலும் இவர்களை ஆதரித்துக் கருத்துச் சொன்னால் பார்ப்பனே ஏடே பாராட்டுகிறது என்பார்கள் எதிராகக் கருத்துச் சொன்னாலோ உடனே பூணுல் இருக்கும் உண்மை தெரிந்து விடும். இவர்களுக்கு பிராமணரை எதிர்த்து ஏதும் எழுதாவிட்டால் கை கால் ஓடாது நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடும். இது ஒரு வித மனநோய். திராவிடப் பரம்பரை வியாதி. ஒட்டுவாரோட்டி நோய். இதற்கு மருந்து கிடையாது.

ஞாநி என்னதான் எழுதினாலும் கருணாநிதி இடத்தைக் காலி பண்ண மாட்டார் பதவியில் இருக்கும் பொழுது இறந்தால்தான் அவருக்கு மெரீனா பீச்சில் அண்ணாவுக்குப் பக்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நினைப்பு. அவர் மறைவு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் பொழுது நடப்பதே நாட்டுக்கு நல்லது, இல்லாவிட்டால் இன்னொரு கோவில் கட்டி மெரீனாவை நாசப் படுத்தி விடுவார்கள்.

ஞாநியை பிராமணர்கள் திட்டினாலாவது அதில் ஒரு நியாயம் இருக்கும், இந்த அல்லக்கைகள் எதற்காகத் திட்டுகிறார் என்பது தெரியவில்லை. ஞாநிக்காக டோண்டு போன்றவர்கள் பரிதாபப் படத் தேவையில்லை, நன்கு அடி வாங்கட்டும் என்று விட்டு விட வேண்டும்

Anonymous said...

மு.க. - ஞாநி பிரச்சினை வெளி உலகில் ஒன்றும் இல்லை. பதிவுலகம் தான் பற்றி எரிவதுபோல் தெரிகிறது.
-விபின்

Anonymous said...

"//மு.க. - ஞாநி பிரச்சினை வெளி உலகில் ஒன்றும் இல்லை. பதிவுலகம் தான் பற்றி எரிவதுபோல் தெரிகிறது.//"

ஏனன்றால் மு.க. ஒன்றும் ஞானி இல்லை. ஞானியிடம் (மு.)கலைஞர் TV இல்லை.