பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 01, 2007

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை - கலைஞர் பேட்டி


* தமிழ் நாட்டில் 16,000 பஸ் இருக்கு அதில் வெறும் 61 பஸ்ஸுகள் தான் ஓடியது - தலைமை செயலாளர்

* ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாண்டி பஸார் கடைகள் எல்லாம் மூடியிருந்தது.

* பாதுகாப்பு கருதி குழந்தைகளை பள்ளிகளுக்கு பெரும்பாலான பெற்றோர் அனுப்பவில்லை.

* வாகன வசதியில்லாததால் நிறைய பேர் பணிக்குச் செல்லவில்லை.

* இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 37 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.

* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவே பெரும்பாலான பேருந்துகளைக் காணவில்லை.

* ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் மிக குறைந்த அளவில் ஓடியது.

* முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. ஆளும் கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களின் மிரட்டல்களுக்கு பயந்தே முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் - கோயம்பேடு வியாபாரிகள்

* கலைஞர் டிவி நன்றாக தெரிந்தது.தமிழ்நாட்டில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை - கலைஞர் பேட்டி

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து திமுக மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் பேசினார்கள். அவர்களின் பேச்சை முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித் திருப்பது குறித்து முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதை பார்த்ததும் முதலமைச்சர் கருணாநிதி பாதியிலேயே உண்ணாவிரதப் பந்தலிலிருந்து புறப்பட்டு அவசரம் அவசரமாக கோட்டைக்கு சென்றார். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதட்டமாக பின்தொடர்ந்து சென்றனர்.

உச்சநீதிமன்றத்தின் கருத்து குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார். பின்னர் தலைமைச் செயலகாத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்...


கேள்வி: தமிழக அரசின் செயல்பாடு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே?
பதில்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எதையும் நாங்கள் மீறவில்லை. தமிழகத்தில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

கே: அரசியல் சட்ட அமைப்பு விதிமுறை மீறப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே?
ப: உங்களுக்கு அப்படி தெரியலாம். நீங்கள் சந்தோஷமாக செய்தி போடுங்கள். எந்த ஆட்சி வந்தால் எதால் அடிப்பார்கள். எங்கு அடைப்பார்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியும்.

கே: உச்சநீதிமன்றத்தில் அதிமுகவினர் சென்று உங்கள் அணியின் சார்பில் உண்ணா நோன்பு இருப்பதை பற்றி குறிப்பிட்ட போது, உச்சநீதிமன்றம் அதில் தெரிவித்துள்ள கருத்துக்களை பற்றி உங்கள் பதில் என்ன?

ப: உச்சநீதிமன்றத்தில் நேற்று என்ன சொன்னார்களோ அதன் படி தான் நடந்து கொண்டிருக்கிறோம். உண்ணாவிரதம் இருப்பதை பற்றி எந்த வழக்கும் கிடையாது. அதை பற்றி எதுவும் இல்லை. உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்த கருத்து பற்றியும், எந்தவிதமான கருத்தும் யாரும் சொல்லவில்லை.

7 Comments:

Anonymous said...

Now that TN Chief Mafia has set an example by wantonly disobeying the directives of the SC, I am waiting for the day when Karnataka Govt (whoever will be in power at that time) refuses to act according to the award of Cauvery Tribunal's (constituted under SC direction) final award. What moral or immoral rights these worthies who now deride SC will have at that time to ask Karnataka to respect the award? These TN parties (DMK, PMK, etc.) themselves have set a track record & given it on a platter for Karnataka politicians to emulate in future.

Subramanian said...

Whonis he to say about the regular life on the Bandh Day; refere a VOTTU PODUM YENTHIRAM; hE ONLY HAS TO SAY HOW MUCH HE PAID FOR EVENA SINGLE TEA, aUTO fare, for a KG of Tomato, and even how much he lost due to loss of daily wages since his working place was made to closed - SUPPAMANI

யோசிப்பவர் said...

//எந்த கடையடைப்பு கூடாது என்று மனுநீதிமன்றம் அறிவித்ததோ அந்த கடையடைப்பினை மக்களாகவே இன்று தமிழகத்தில் நடத்தி கொண்டிருக்கிறார்கள். தலைநகர் சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் யாருடைய வற்புறுத்தலுமின்றி அடைக்கப்பட்டிருக்கிறது. மனுநீதிமன்றத்துக்கு மக்கள் மன்றம் சரியான பதிலடி தந்திருக்கிறது....
- லக்கிலுக்
( எச்சரிக்கை: அதிகம் சிரித்தால் உடம்புக்கு ஆகாது ) //

ஆமாமாம். மக்கள் தாங்களாகவே முன் வந்து இன்று கடைகளை அடைத்தனர். பேருந்து தொழிலாளர்கள் மிகவும் வெறுப்படைந்து தாங்களாகவே வேலைக்கு போகாமல் பங்க் அடித்து வீட்டில் கலைஞர் டீ.வி. பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கடைகளை மூடச் சொல்லி யாருமே மிரட்டவில்லை, அன்பாகத்தான் ஆணையிட்டார்கள்.

IdlyVadai said...

இன்னும் கொஞ்சம் அப்டேட்

கால்கரி சிவா said...

Pumpkin in a rice pot...

Anonymous said...

தினமலர்:`சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கருணாநிதி அரசு பதவி விலகுவதே முறையாகும்' என, விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கிய கருணாநிதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் அரண்டுபோய் 11.30 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, அவசர அவசரமாக கோட்டைக்கு சென்று, அதிகாரிகள் மூலம் அவரே பந்தை முறியடிக்க உத்தரவு வழங்கினார். அவர் இருந்த இரண்டரை மணிநேரம் உண்ணாவிரதத்தில் அடங்குமா என்பது தெரியவில்லை. ஆனால், புறநானுற்று வீரம் புறமுதுகிட்டு ஓடியது என்பது மட்டும் உண்மை. மானத்தைக் கருதியாவது கருணாநிதி அரசு பதவி விலகுவதே முறையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

cgs said...

இட்லிவடை,
உங்கள் பதிவை தவறாமல் படிக்கும் வசகர் என்ற முறையில் ஒன்றை சொல்லவிரும்புகிறேன்.என்னைப்பொறுத்தவரை, அத்வானி,சோ, வேதாந்தி அனைவருமே சந்தர்ப்பவாதிகள் தான்.
விகடனில் வேறு ஒரு மதப்பெரியவரை கேட்டு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.அவர் கூறியதைப்போல இந்து மதத்தை தனியாக விட்டால் போதும்