மிகப் பெரிய தலைவரான முதல்வர் கருணாநிதி தன்மீது நம்பிக்கை கொள்ளாமல் இமயமலை சாமியார்களிடம் தூது செல்லுமாறு நடிகர் ரஜினி யிடம் சரணாகதி அடைந்திருப்பது வேடிக்கையாக உள்ளது' - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தமிழகத்தில் பிரபலப்படுத்தும் முயற்சி எந்த அளவில் உள்ளது?
கட்சி துவங்கி 40 நாட்கள் ஆகிறது. நகர, ஒன்றிய, கிளை, வட்டார பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத் திலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து கட்சியை பிரபலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். முதல் அரசியல் மாநாடு ஜனவரி 20ல் மதுரையில் நடக்க உள்ளது.
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை தொண்டர் களிடம் தெளிவுபடுத்தி விட்டீர்களா?
சமத்துவம், சமூக நீதி நிலைக்க வேண்டும் என்பது தான் கொள்கை. பொருளாதார ரீதியாக கிராமங்கள் முன்னேற வேண்டும். சாதி, மதங்களால் ஏற்படும் கலவரங்களை அனுமதிக்க மாட்டோம். அதற்கேற்ப வியூகங்களை அமைத்து ஒன்றுபட்ட மக்களை உருவாக்கி காட்டுவோம். தொண்டர்கள் இதை உணர்ந்து செயல்பட துவங்கியுள்ளனர்.
கட்சியில் சமத்துவம் நிலை நாட்டப் பட்டுள்ளதா?
கட்சி நிர்வாகிகளாக அனைத்து ஜாதிகளை சேர்ந்தவர்களும் பாரபட்சமின்றி நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதிய கட்சி துவங்க வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏன் ஏற்பட்டது?
மக்கள் மாற்று கட்சியை எதிர்பார்க்க துவங்கி விட்டார்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதே நீங்களும் துவக்கியிருக்கலாமே என்று சிலர் கேட்டனர். அவருக்கு போட்டியாக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. படப்பிடிப்புக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். அங்கு என்னை சந்தித்த மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் என்னை சிந்திக்க வைத்தன. மாற்றம் வேண்டும் என்று விரும்பும் மக்கள் அதற்கு தகுதியான கட்சியை தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது கட்சியை துவக்கியுள்ளேன்.
அடுத்து வரும் தேர்தலில் கட்சி போட்டியிடுமா அல்லது பலப்படுத்தும் வரை பொறுத்திருப் பீர்களா?
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத் தான் கட்சியை துவக்கியுள்ளோம். அடுத்து வரும் தேர்தல் எதுவாக இருந்தாலும் தயங்காமல் போட்டியிடுவோம்.
விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணி எந்த நிலையில் உள்ளது?
உலகில் இதுபோன்ற ஒரு மணிமண்டபம் எந்த தலைவருக்கும் கட்டப்படவில்லை என்று கூறும் அளவுக்கு மண்டபத்தை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணி மட்டும் இரண்டு ஆண்டுகள் நடைபெறும். தியான மண்டபம், கருத்தரங்க கூடம், ஒளிக்காட்சி அரங்கம் அனைத்தும் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும்.
சேது சமுத்திர திட்டத்துக்காக இமயமலை சாமியார்களிடம் தனது நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு ரஜினியிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?
இது தேவையில்லாதது. ரஜினிகாந்த் எந்த கருத்தையும் வெளிப்படையாக பேசமாட்டார். வடமாநிலத்தில் புகைந்து கொண்டிருக்கும் பிரச்னை குறித்து அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. ரஜினி என்ன சொல்ல வருகிறார் என்பது முதல்வர் கருணாநிதிக்கும், அந்தக் கருத்தை கூறிய ரஜினிக்கும் மட்டுமே தெரியும். எனவே தான் தன்னைப் பற்றி நல்லவிதமாக சாமியாரிடம் பேசுமாறு முதல்வர், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகப்பெரிய ஒரு தலைவர் தன்மீது நம்பிக்கையில்லாமல் ரஜினியிடம் சரணாகதி அடைந்திருப்பது வேடிக்கையாக உள்ளது
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, October 21, 2007
ரஜினியிடம் கருணாநிதி சரணாகதி - சரத்குமார் பேட்டி
Posted by IdlyVadai at 10/21/2007 11:07:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










6 Comments:
Idhu nagaichuvai padhivu illaiya?
அஃகா.. இவர்கிட்டயும் பேட்டிய ஆரம்பிச்சாச்சா!!??
நேற்றிலிருந்து சற்றுமுன்(23அக்டோபர் பிற்பகல் 1 மணி வரை)வரை 18ம் தேதியே காட்டியது.என்னாச்சு?
சிவா எனக்கும் சற்றுமுன் தளத்துக்கும் சம்பந்தம் இல்லை. எல்லா புகழும் அவர்களுக்கே :))
Ha ha ha.
I dont mean satrumun.com. I mean only "short while ago". I am your regular reader.I verified manytimes your BLOG, it was not updated. I use Internet Explorer, Then, I checked in Firefox also. OK no problem. Now, I can read it.
அரசியலுக்கு வந்தாச்சுல்ல??? இனிமே பேட்டி, அறிக்கை-னு ஏதாச்சும் குடுத்துக்கிட்டே இருந்தாதான் மக்கள் ஞாபகத்துல வெச்சிப்பாங்க... குறிப்பா, பெரிய தலைகளை பத்திப் பேசினால், பாப்புலாரிடி சும்மா எகிறுதுல்ல...!
Post a Comment