பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 24, 2007

தசாவதாரம் படத்தில் முதல்வர் கருணாநிதி

தசாவதாரம் படத்தில் முதல்வர் கருணாநிதி

230 நாட்களாக நடந்த 'தசாவதாரம்' படப்பிடிப்பு, நேற்று இரவு முடிவுக்கு வந்தது. உத்தண்டியில் நேற்று நடந்த படப்பிடிப்புடன் பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார்.
இப்படத்தின் மொத்த பட்ஜெட் அறுபது கோடி. தமிழை பொறுத்தவரை இது சாதனை. ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்தில் கலந்து கொண்ட டப்பிங், கமலின் பத்து வேடங்கள், படத்தில் இடம் பெறும் 12-ம் நூற்றாண்டு காட்சிகள், சுனாமி பிரளயம்.... இப்படி படத்தின் ஆச்சரியங்களை அடிக்கிக் கொண்டே போகலாம்.

தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த கமல், தனது பத்து அவதாரங்களின் புகைப்படங்களை காட்டினார். பிரமிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த முதல்வர், கமலின் கன்னத்தை கிள்ளி தனது பாராட்டை தெரிவித்தார்.

'தசாவதாரம்' யூனிட்டிலிருந்து கசிந்திருக்கும் புதிய தகவல், முதல்வர் கருணாநிதியும் படத்தில் இடம் பெறுகிறாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதல்வரைபோல் தோற்றம் கொண்ட நடிகர் ஒருவரை வைத்து எடுத்திருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் மட்டும், கமலுடன் தமிழக முதல்வரும் தோன்றுகிறாராம்.

அது என்ன காட்சி?

தசாவதாரத்தின் பிற விஷயங்களைப் போல இதுவும் ரகசியம்!

பிராமணர், குள்ள மனிதர், விஞ்ஞானி, சண்டை வீரர், கருப்பர், டூரிஸ்ட் கைடு, திருடன், வயதான பெண், சக்கரவர்த்தி, இளம் பெண் ஆகிய 10 விதமான ரோல்களில் நடித்துள்ளார் கமல்.

தசாவதாரம் என்பது தமிழ் டைட்டிலா ? இதற்கு தமிழக அரசு வரி விலக்கு கிடைக்குமா ?


12 Comments:

Anonymous said...

எனது கோரிக்கையை ஏற்று தசாவதாரம் செய்தி வெளியிட்ட இட்லி வடைக்கு நன்றி.

தொடரட்டும்..... உமது பணி.

Anonymous said...

எனது கோரிக்கையை ஏற்று தசாவதாரம் செய்தி வெளியிட்ட இட்லி வடைக்கு நன்றி.

தொடரட்டும்..... உமது பணி.

வீர சுந்தர் said...

வார்த்தை வட மொழியாக இருந்தாலும் எழுத்துக்கள் தமிழ். அதனால் கொஞ்சம் கொறச்சுக் கொடுப்பாங்க :))

Pondy-Barani said...

முதல்வரே உள்ளார்(படத்தில்) கேளிக்கை வரியா?

சின்ன புள்ளதனம உள்ளது.......

ஆனா கமல் great..

யோசிப்பவர் said...

ஐயையோ! மறுபடியும் ஒரு தமிழாராய்ச்சியை ஆரம்பித்து வைத்து விட்டீர்களா?

~பொடியன்~ said...

60 கோடி போட்டு படம் எடுத்தவங்க வரிக்கா கவல பட போறாங்க? உங்க இட்லி கட புத்தி உங்கள விட்டு போகாதா அங்கிள்?

கலைஞர் கைத்தடி said...

கருணாநிதி நடிப்பை பார்க்க கண்டிப்பாக நான் விசிடி வரவழைப்பேன். உடன் பிறப்பே, தசாவதாரம் படத்தை கலைஞர் டிவி வாங்கிவிட்டதா?

இலவச டிவி ஆட்சி முடியும் முன்னால் கிடைத்தால் சவுரியமாக இருக்கும். ம்ம்.. காத்திருக்கவேண்டியதுதான்.

cheena (சீனா) said...

நடிகர் திலகத்தின் நவராத்திரியை அடுத்து
உலக நாயகனின் தசாவதாரம் நிசயம் வெற்றி பெறும். 60 கோடி என்பது இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சர்வ சாதாரணம்

Anonymous said...

தசாவதாரம் 5 பாடல்கள் :

TITLE SONG.

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது" - வாலிபாடல் 2 : " முகுந்தா ! கிருஷ்ணா முகுந்தா ! வரம் தா, வரம் தா, பிருந்தாவனம் தா !" - melody by sadhana sargam.


பாடல் 3: மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான் ஆட்டத்திற்கு "ராப்" ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் " ஸ்ருத் ஹாசன் ". அட்டகாசம் !


பாடல் 4: கமல் பாடும் டூயட் " ஓ ! ஒ ! சனம் " . கிதார் ரகளை செய்கிறது. வரிகள்: வைரமுத்து.


பாடல் 5: படத்தின் க்ளைமாக்ஸில், எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது

"உலக நாயகனே... கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே !"

கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடி வந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட் ! அந்த "கிடதங் கிடதங்" பின்னணி அருமை !

கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே " நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன் " என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு ! கேட்கவா வேண்டும் ?

இன்று வெளி வந்துள்ள குமுதம் {31.10.2007} பத்திரிக்கையில் வந்துள்ள தசாவதாரம் பாடல் விமரிசனம்.

நன்றி : குமுதம்


வைரமுத்துவிற்கு நன்றிகள் பல. இசை அமைத்த ஹிமேஷ் ரேஷ்மையாவுக்கும் வாழ்த்துக்கள் !!!


விரைவில் பாடல்கள் கொண்ட சிடி வெளியிடுக !!!


"உலக நாயகனே... கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே !"

" நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன் "" பதினொன்றாம் அவதாரம் எங்கள் கமல்ஹாசனின் "

தசாவதாரம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் !!!

IdlyVadai said...

அனானி தகவலுக்கு நன்றி. என்னைவிட ஸ்பீடாக இருக்கீங்க :-)

Tharuthalai said...

கருணநிதி ஸார்வாள்,
அப்படியே விஷ்னு வேடம் கட்டிண்டு, வாழையில இருக்குறதயும் எடுத்து விழுங்கிட்டேள்னா எல்லத்துக்கும் ஸுபம் போட்டு முடிச்சிடலாம்.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Tharuthalai said...

கருணாநிதி ஸார்வாள்,
அப்படியே விஷ்னு வேடம் கட்டிண்டு, வாழை இலையில இருக்குறதயும் எடுத்து விழுங்கிட்டேள்னா எல்லத்துக்கும் ஸுபம் போட்டு முடிச்சிடலாம்.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.